பெங்களூரு : இவர் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.தனது 29 வது வயதில் இவருடைய நாட்டம் வியாபார துறை பக்கம் இருந்ததால், திடீரென்று கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்.
இவர் பெயர் ராமன் சூப்பா ரோவ் ( Raman Subha Row)
6 அடி உயரம் இருந்த இவர் இடது கை பேட்ஸ்மன். டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரி 46.85 ரன்கள்.13 டெஸ்ட் மேட்ச்சுக்கள். 3 சதங்கள் 984 ரன்கள்.1958 ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இவர் துவக்க டெஸ்ட் ஆடி, 1961 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய இறுதி டெஸ்ட் ஆடினார்.

இவர் தனது கடைசி டெஸ்டில் சதம் எடுத்தார். ஓவல் மைதானத்தில் 1961 ஆகஸ்ட் மாதத்தில் அந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்சில். ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகள் உதவியுடன் இவர் குவித்தது 137 ரன்கள். இவர் அதே அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் எடுத்தார், பர்மின்ஹாம் டெஸ்டில் ஜூன் 1961ல்
இரண்டாவது இன்னிங்சில் இவர் எடுத்தது 112 ரன்கள் 14 பவுண்டரிகள் உட்பட இவர் 119 டெஸ்ட்களுக்கு ICC மேட்ச் ரெபெரீயாக பணி புரிந்துள்ளார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கென் மேக்கேய் ( Ken Mackay) என்ற இந்த வீரர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட்களில் விளையாடியவர். முதல் தர கிரிக்கெட் குயின்ஸ்லாந்து ( Queensland ) அணிக்காக விளையாடியவர். ஸ்லஷெர் ( Slasher ) என்று அழைக்கப்பட்டு வந்த இவர் முதல் அறிமுக மற்றும் இறுதி டெஸ்ட் மேட்சுகளை இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவர்.
முதல் டெஸ்ட் 1956 , கடைசி டெஸ்ட் 1963 மொத்தம் விளையாடிய டெஸ்ட்களின் எண்ணிக்கை 37. 1507 ரன்கள் . இடது கை பேட்டிங் மற்றும் வலது கை வேக பந்து வீசுபவராக திகழ்ந்தார். இவர் பங்களிப்பு டீமை காப்பாற்றுவதற்கு பயன்பட்டுள்ளது.
அதிக நேரம் நின்று நிதானமாக ஆடக் கூடியவர்.
பேட்டிங்கில் ஸ்டாண்ட். ( giving stand ) கொடுத்து இவருடைய ஜோடி ஆட்டக்காரர் திறமையை வெளிப்படுத்த உதவுவார், டீமின் நலம் கருதி.
அதே போல் தேவையான பொழுது தனது பவுலிங்கினால் அசத்துவார்.
கென் மேக்கேய் (Ken Mackay ) ஒரு டெஸ்டில் 38 மற்றும் 31 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் , அந்த 31 ரன்கள் குவிக்க அவர் பேட்டிங் விளையாடிய நேரம் 264 நிமிடங்கள். இந்த மேட்சில் இவர் பெநௌட் 97 ரன்கள் ( Benaud )
எடுக்க பெரிதும் உதவினார், அவர் நின்று ஆடியதில் அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது, இந்த டெஸ்டில் மட்டுமே.
இந்த டெஸ்ட் தான் இவருடைய அறிமுக டெஸ்ட்.
அடுத்த இரண்டு டெஸ்ட்களில் இவரது ஸ்கோர் 2 , 2 ( இரண்டு இன்னிங்சிலும் தலா இரண்டு ரன்கள். தொடர்ந்த டெஸ்டில் இதை விட பரிதாபம்.
0 , 0 (பூஜ்ஜியம் ) இரண்டு இன்னிங்சிலும்
ஜிம் லேக்கரின் ( Jim Laker ) பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கிடைத்த ஸ்கோர்.
இரண்டு இன்னிங்சிலும் இவருடைய கேட்சை பிடித்தவர் ஓக்மான் (Oakman) .
இந்த குறிப்பிட்ட டெஸ்டில் தான் இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர் 19 விக்கெட்டுக்கள் கை பற்றி உலக ரிகார்ட் ஏற்படுத்தினார்.
இந்த டெஸ்ட் மான் செஸ்டரில் ,( Manchester )ஜூலை மாதத்தில் 1956 ல் நடைபெற்றது.
1957-58 தென் ஆப்ரிக்க சுற்றுப் பயணத்தில் பேட்டிங்கில் தனது முத்திரையை பதித்தார்.
பாகிஸ்தானில் , ஆஸ்திரேலிய அணி அவர்களது முதல் வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பதிவு செய்ய இவரது அபார பவுலிங் உதவியது.
1959- 60 டாக்கா டெஸ்டில் 42 ரன்கள் கொடுத்து இவர் எடுத்தது 6 விக்கெட்டுகள்.
இவரின் பொறுமைக்கு மற்றும் ஓர் எடுத்துக் காட்டு.
தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தன்னுடைய திறமையான, பொறுமையான ஆட்ட வெளிப்பாட்டால் தோல்வியை தவிர்த்து மேட்ச் டிரா செய்ய உதவினார்.
இரண்டாவது இன்னிங்சில் ஸ்கோர் 207 இருக்கும் பொழுது 8 வது, 9 வது விக்கெட்டுகளை இழந்தது.
மேற்கு இந்திய அணி வெற்றி பெற ஒரே ஒரு விக்கெட் தேவையாக இருந்தது. போதிய நேரம் இருந்தது. சுமார் ஒன்று அரை மணி நேரம் இவரும், கடைசி வீரர் லின்ட்சே க்ளைன்( Lindsay Kline ) (ஜோடி சேர்ந்து ) எதிர் நோக்கி வந்த பந்துகளைத் தடுத்து ஆடி டிரா செய்தனர்.
இந்த மேட்சில் இவர் எடுத்த 62* ரன்கள் நாட் அவுட், ஸ்கோர் செய்ய எடுத்துக் கொண்ட நேரம் கிட்டத்தட்ட 4 மணி ஆகும்.
இந்த டெஸ்ட் 1961ல் ஆஸ்திரேலியாவின் அடீலைய்ட் (Adelaide )
மைதானத்தில் நடைபெற்றது.
டெஸ்டுகளில் இவரது அதிகமான ஸ்கோர் 89 ரன்கள்.
முதல் தர கிரிக்கெட்டில் 10800 ரன்களுக்கு மேல் எடுத்தவர்.
குயின்ஸ்லாந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர்.
1982 ல் 56 வயதில் மறைந்தார்.
பாகிஸ்தான் மண்ணில் மாட்டிங் விகெட்டுகளில்
( Matting wickets) டெஸ்ட் ஆடிய அனுபவம் பெற்றவர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிரிக்கெட்டில் ஒரே பேட்ஸ்மன் இரண்டு இன்னிங்சிலும், ரன்கள் ஏதும் எடுக்கமால் அவுட் ஆனால் அதற்கு பெயர் பைர்ஸ் ( pairs )
71 டெஸ்டுகள் விளையாடிய நியூஸிலாந்து வீரர் சி எஸ் மார்ட்டின் ( CS Martin ) எடுத்த 36 பூஜ்ஜியங்களில் (0 ), 7 பைர்ஸ் (pairs ) அடங்கும்.
வாசுதேவன், பெங்களூரு