For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Cricket Titbits - ஒரு பந்து கூட நோ பால் வீசாத ஆஸ்திரேலிய வீரர் .. இப்படியெல்லாம் சாதனை இருக்கா?

மும்பை : தான் டெஸ்டில் எதிர் கொண்ட முதல் பந்தை சிக்ஸர் அடித்து சாதனை புரிந்தவர் முரளீதரன்.

ஒரு முறையல்ல. மூன்று முறை.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இவர் ஒருவர் தான் இந்த சாதனையை புரிந்தவர்.

2002 - 03 தென் ஆப்பிரிக்காவில் ஷான் போலாக் ( Shaun Pollock )

2005 - 06 இந்தியாவில் இர்பான் பதான் ( Irfan Pathan )

2009 இலங்கையில் நியூசி. வீரர் கிறிஸ் மார்ட்டின் ( Chris Martin )

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Cricket Titbits - Most famous international records and facts

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதல் 5000 ரன்களுக்கு மேல் குவித்தவர் ஸர் ஜாக் ஹாப்ஸ் ( Sir Jack Hobbs)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சமீபத்தில்
ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் நாதன் லியோன் ( Nathan Lyon )
டெஸ்ட் கிரிக்கெட்டில் முப்பதாயிரத்தாவது ( 30000 th ) பந்தை வீசினார்.

இது வரையில் ஒரு பந்து கூட நோ பாலாக ( No Ball ) வீசியது இல்லை, என்பது கூடுதல் சாதனை.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இவர் 1952 - 53 டெஸ்டுகளில் இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் வெற்றி பெற்ற டீமின் கேப்டனாக இருந்தார்.

இங்கிலாந்து அணியை வென்றனர் அன்றைய மெட்ராஸ் டெஸ்டில்.

இவர் பெயர் விஜய் ஹசாரே.

இவர் நினைவாக விஜய் ஹசாரே ட்ரோபி ( Vijay Hazare Trophy ) துவங்கப்பட்டது.

இவர் தான் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் எடுத்த முதல் இந்திய வீரர்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ( Adelaide ) மைதானத்தில் 1948 ஆம் ஆண்டு.

முதல் இன்னிங்சில் 116 இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்கள் குவித்தார்.
மொத்தம் இந்த டெஸ்டில் இவர் எடுத்தது 261 ரன்கள். இருந்தும் ஆஸ்திரேலிய அணி வென்றது.

விஜய் ஹசாரே 30 டெஸ்டுகளில் 2192 ரன்கள் சராசரி 47.65.
7 டெஸ்ட் சதங்கள்.
14 டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தியுள்ளார்.

1952 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இவர் இரண்டு இன்னிங்சிலும் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ( 0 pair by a captain )

இவரை தவிர இந்திய அணி கேப்டனாக திகழ்ந்த பிஷன் பேடி 1976 ல் கேப்டனாக டெல்லி டெஸ்டில்
இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

விஜய் ஹசாரே, டான் பிராட்மேனை தனது பவுலிங்கில் இரண்டு முறை அவுட் செய்துள்ளார்.

டெஸ்டுகளில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் 1915 ல் பிறந்த இவர் 2004 ல் குஜராத்தில் மறைந்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூன்று கிரிக்கெட் வீரர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்காக டெஸ்டுகள் விளையாடி உள்ளனர்.

குல் முஹம்மத் ( Gul Mohammad) மற்றும் அப்துல் கர்தார் ( Abdul Kardar) இருவரும் 1946 இங்கிலாந்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாடியவர்கள்.

கர்தார் பாகிஸ்தான் அணிக்கு முதல் டெஸ்ட் கேப்டன். 23 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்தார்.

மூன்றாவது ஆட்டக்காரர் அமீர் இலாஹி ( Amir Elahi ) இந்திய அணிக்கு ஒரு டெஸ்ட்டும் பாகிஸ்தான் அணிக்கு 5 டெஸ்டுகளிலும் விளையாடியவர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, January 7, 2024, 16:52 [IST]
Other articles published on Jan 7, 2024
English summary
Cricket Titbits - Most famous international records and facts Cricket Titbits - ஒரு பந்து கூட நோ பால் வீசாத ஆஸ்திரேலிய வீரர் .. இப்படிலாம் சாதனை இருக்கா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+