ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்.. தனி ஆளாக போட்டியின் முடிவையே மாற்றிய பவுலர்கள்
டி20, ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெற முடியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் 20 விக்கெட் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும். அந்த வகையில் ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தற்போது காணலாம். ஒரே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தவர், இங்கிலாந்து அணியின் ஆப் ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர். ( Jim Laker)
இவர் 1956 ல் ஆஸ்திரே லிய அணிக்கு எதிராக மான்செஸ்டரில் 90 ரன்கள் கொடுத்து 19 விக்கெட்டுகள் கை பற்றினார். இது ஒரு உலக ரிக்கார்டு.
இவர் வீசிய 68 ஓவர்களில் 27 மெய்டன் ஓவர்கள். ஒரு விக்கெட்டை டோனி லாக் ( Tony Lock ) எடுக்காமல் இருந்திருந்தால் அதையும் ஒரு வேளை ஜிம் லேக்கரே கைபற்றி இருப்பாரோ என்னவோ..

இவருக்கு அடுத்து ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்தவர், இங்கிலாந்து வீரர் எஸ் எப் பார்ன்ஸ். ( SF Barnes ) இவர் 1913 டிசம்பர் மாதத்தில் ஜோஹன்னேஸ்பர்கில் , 17 தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிகழ்வின் பொழுது மொத்தமாக 65.3 ஓவர்கள் வீசி இந்த 17 விக்கெட்டுகளை வீழ்த்த 159 ரன்கள் கொடுத்தார்.
இந்த இரண்டு டெஸ்ட் மேட்சுகளிலும் இங்கிலாந்து அணிகள் மகத்தான வெற்றிகளை பதிவு செய்தன. மூன்று வேறு பட்ட டெஸ்ட் மேட்சுகளில் 16 விக்கெட்டுகளை எடுத்த நிகழ்வுகளும் உள்ளன. 1972 ஜூன் மாதத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாப் மெஸ்ஸி ( RAL Massie ) தனது முதல் டெஸ்ட் விளையாட களம் இறங்கினார், இங்கிலாந்து அணிக்கு எதிராக.
டெஸ்ட் முடிவில் பவுலிங்கில் சாதனை புரிந்தார். இவர் மொத்தம் வீசியது 60.1 ஓவர்கள். இதில் 16 மெய்டன் ஓவர்கள். கொடுத்த ரன்கள் 137.
வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 16.அறிமுக டெஸ்ட்டிலேயே இந்த வகை சாதனை புரிந்த முதல் கிரிக்கெட் வீரர் இவர் ஆவார்.
முதல் இன்னிங்சில் 84. ரன்கள்களுக்கு 8 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 53 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இவரது முழு பெயர் ராபர்ட் ஆர்னோல்ட் லோக்கியர் மெஸ்ஸி ( Robert Arnold Lockyer Massie )
இவரை பாப் மெஸ்ஸி, என்று அழைப்பார்கள் இடது கையால் பேட்டிங் கும் , வலது கையால் வேகப்பந்து பவுலிங்கும் செய்வார். இவர் ஆடியது மொத்தம் 6 டெஸ்டுகளும் , 3 ஒரு நாள் பந்தயங்கள் மட்டுமே. டெஸ்டுகளில் 31 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஒரு டெஸ்டில் 42 ரன்கள் எடுத்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம்
ஆஸ்திரேலய அணி வெல்ல உதவினார்.உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெற்றார்.
இந்திய அணிக்காக 1988 ஆம் ஆண்டு சென்னை ( அன்றைய மெட்ராஸ் ) டெஸ்டில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு புதிய லெக் ஸ்பின் பவுலர் தனது டெஸ்ட் ஆட்டத்தை துவக்கினார்.
தனது அறிமுக டெஸ்ட்டிலேயே அட்டகாசமாக இரண்டு இன்னிங்சிலும் ஸ்பின் பவுலிங் போட்டு மொத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்தார். இவர் பெயர் நரேந்திர ஹிர்வானி ( Narendra Hirwani)33.5 ஓவர்கள் வீசி 6 மெய்டன் ஓவர்களுடன் 136 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்து சாதித்தார். 17 டெஸ்டுகளில் 66 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
18 ஒரு நாள் பந்தயங்களில் 23 விக்கெட்டுகள் கை பற்றினார். மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகளுக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடி உள்ளார்.
167 முதல் தர மேட்சுகளில் 732 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஷார்ஜாஹ் கோப்பை போட்டியில் சிறப்பாக பந்து வீசி 10 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடரின் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப் பட்டார்.
நேபாள தேசிய கிரிக்கெட் டீமிற்கு கோச்சிங் டைரக்டராக இருந்தார்.
மத்திய பிரதேச ரஞ்சி கோப்பை தேர்வு குழுவின் தலைவராக திகழ்ந்தார்.
2008 ல் இந்திய குழு தேர்வு குழு உறுப்பினராக இருந்தார்.
2011 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையினால் ஆன தேர்வு குழு தேர்ந்து எடுத்தது. அந்த தேர்வு குழுவில் ஹிர்வானியும் ஒரு உறுப்பினராக
இருந்தார்.
மூன்றாவது ஆட்டக்காரர், ஒரே டெஸ்டில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீ லங்காவின் , முரளீதரன். 1998 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைப் பெற்றது. 113.5 ஓவர்கள் 41 மெய் டன்கள் 16 விக்கெட்டுகள். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி நன்றாக விளையாடி 445 ரன்கள் எடுத்தனர்.
ஜான் க்ராவ்லே 156 * ரன்கள் நாட் அவுட் ( John Crawley )
ஜி ஹிக் ( G Hick ) 107 எடுத்தனர். முரளீதரன் 155 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப் பற்றினார். ஸ்ரீ லங்கா அணி முதல் இன்னிங்சில் 591 ரன்கள் குவித்தனர். இதில் சனத் ஜயசூரியா ( Sanath Jayasuriya ) 213, அரவிந்தா டி சில்வா ( Aravinda de Silva ) 152 ரன்கள் எடுத்தனர்.முரளீதரன் 30 ரன்கள் சேர்த்தார் தன் பங்கிற்கு.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங்கில் எடுத்தது 181 ரன்கள்.
முரளீதரன் 65 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை கை பற்றினார்.
ஸ்ரீலங்கா, இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டு எதுவும் இழக்காமல் 37 ரன்கள் எடுத்து வெற்றியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தனர்.
முத்தையா முரளீதரன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப் பட்டார். இந்த மூன்று ஆட்ட காரர்களின் மேட்சுக்கு தலா 16 விக்கெட்டுகள் அள்ளிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இடம் பிடித்தன.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications