Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

26 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. 3278 விக்கெட் எடுத்தும் ஒரு போட்டியில் தான் வாய்ப்பு - விவரம்

பெங்களூரு : இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் அன்றேவ் ஸ்டோடடார்ட், டாஸ் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய கூறினார்.ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் எடுத்தது 65 ரன்கள் .
பால்லோ ஆன் முறையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடினர். ஸ்கோர் 72.

ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் நாள் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனதும், இங்கிலாந்து அணி ஆட்ட முடிவில் ஸ்கோர் 11 / 1. இரண்டாம் நாள் முழுவதும் ஆட்டம் தொடர முடியவில்லை.அடுத்த நாள் ஓய்வு தினம். மறுநாள் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்சிலும் ஆல் அவுட் ஆனது.

Cricket Representation image

இந்த டெஸ்டில் தான் முதல் முறையாக ஒரு வீரர் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார், ரன் எதுவும் எடுக்காமல்.பாபி பீல் என்ற இங்கிலாந்து வீரர், டர்னர் போட்ட பந்தில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிங் செய்யப் பட்டார், விக்கெட் கீப்பர் ஜார்விஸ் என்பவரால். இரண்டு இன்னிங்சிலும் 0.டெஸ்ட் நடைப் பெற்றது 1895 ல் சிட்னி மைதானத்தில்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அப்பில்யார்ட் ( Appleyard ) என்ற இங்கிலாந்து பவுலர் இரண்டு இன்னிங்சிலும் ஹாட்ரிக் (hat - trick ) எடுத்து இருக்க வேண்டியவர். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் அந்த சந்தர்ப்பங்களை தவிர்த்தவர்,
நியூசிலாந்து வீரர் மொய்ர் ( Moir )

ஒரு நாள் ஓய்வு தினம் தவிர்த்து மூன்று நாட்களுக்குள் இந்த டெஸ்ட் முடிவு பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த, நியூசிலாந்து ஆல் அவுட் 200 ரன்கள்.
ஜான் ரெய்டு 73 , பெர்ட் சட்க்ளிப் 49 ரன்கள் எடுத்தனர்.நான்கு வீரர்கள் ரன் எதுவும், எடுக்கவில்லை. பூஜ்ஜியம் (0)

இங்கிலாந்து பவுலர்கள்

பிரைன் ஸ்டாதம் 4 - 28
பிரேங்க் டைசன் 2 - 41
பாப் அப்பில்யார்ட் 3 - 38

இங்கிலாந்து அணி
246

கேப்டன் லென் ஹட்டன் 53
பீட்டர் மே 48
பிரேங்க் டைசன் 27*

நியூசிலாந்து பவுலிங்

அலெக்ஸ் மொய்ர் 5 - 62
ஜான்னி ஹாய்ஸ் 3 - 71

நியூசிலாந்து இரண் டாவது இன்னிங்ஸ்
26

பெர்ட் சட்க்ளிப் 11
மற்ற வீரர்கள் ஒற்றை பட ரன்கள்
மூன்று வீரர்கள் 1 ரன்
ஐந்து வீரர்கள் 0 ரன்
உபரி ரன் 0

இங்கிலாந்து பவுலிங்

பிரைன் ஸ்டாதம் 3 - 9
பிரேங்க் டைசன் 2 - 10
பாப் அப்பில்யார்ட் 4 - 7
ஜான்னி வார்ட்லே 1 - 0

ஆக்லாந்து மைதானத்தில் மார்ச், 1955 ல் நடைப்பெற்ற டெஸ்ட்.
இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் தங்கள் மகத்தான வெற்றியை பதிவு செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இந்த 26 ரன்கள் தான் மிகவும் குறைவான ஸ்கோர் ஆகும்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

லென் பிரெளந்து ( Len Brand ) இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் 23 டெஸ்டுக்கள் விளையாடியுள்ளார்.இவர் முதல் தர கிரிக்கெட்டில் பிடித்த கேட்சுக்க ளின் எண்ணிக்கை 546.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சார்லி பார்க்கர் , என்ற இடது கை பந்து வீசுபவர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட் இங்கிலாந்து அணிக்காக. எடுத்தது 2 / 32. ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் இவர் எடுத்தது 3278 விக்கெடுக்கள். ஒரு மேட்சில் ஒரே இன்னிங்சில் எடுத்தது 10 / 79.
9 விக்கெட்டுக்கள் எடுத்து அசதியுள்ள இவர் ஹாட்ரிக்கள் எடுத்தும் சாதனை புரிந்துள்ளார்.

1903 - 1935 வரையில் முதல் தர கிரிக்கெட் விளையாடியது க்லூஸ்ட்டர்ஷையர் அணிக்கு. 1921 ல் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடினார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஜான்னி பிரிகஃஸ் ( Johnny Briggs ) இங்கிலாந்து பவுலர் 33 டெஸ்டுக்களில் 118 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.இவர் 1889 , மார்ச்சில் தென் ஆப்பிரிக அணிக்கு எதிராக கேப் டவுன் டெஸ்ட் மேட்சில் 15 விக்கெட்டுக்கள் எடுத்தார். அவற்றில் 14 விக்கெட்டுக்கள் க்ளீன் போல்ட். 1 விக்கெட் LBW.

19.1. / 11 / 17 / 7

14.2 / 5 / 11. / 8

இதே டெஸ்டில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரும், இங்கிலாந்து அணி விளையாடிய ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் எடுத்தார்.அவர் பெயர் கோபோ அஷ்லே. அவர் விளையாடிய இந்த அறிமுக டெஸ்ட் அவருடைய கடைசி டெஸ்ட்டும் ஆகி விட்டது. ஆம் அவர் ஆடியது இந்த ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் தான்.

43.1. / 18. / 95. / 7

இந்த டெஸ்டில் இங்கிலா ந்து
292

தென் ஆப்பிரிக்கா

47. & 43

இந்த டெஸ்டில் ஒரு சதம்,

8 பூஜ்ஜியங்கள்

இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 202 ரன்களில் வென்றது.
ஜான்னி பிரிகஃஸ் தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெடுக்கள் எடுத்து சாதித்தவர்.1895 ல் சிட்னி டெஸ்டின் முதல் நாள் இந்த சாதனை புரிந்தார்.( 01.02.1895 )

இவரை தொடர்ந்து இரண்டாவதாக 100 டெஸ்ட் விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்
ஆஸ்திரேலியாவின் சார்லி டர்னர். அந்த நிகழ்வும் இதே டெஸ்டில் நடைப் பெற்றது ( 04.02.1895)17 டெஸ்டுக்கள் விளையாடி 101 விக்கெடுக்கள் எடுத்த சார்லி டர்னருக்கு இதுவே கடைசி டெஸ்டாக அமைந்தது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, March 7, 2024, 12:00 [IST]
Other articles published on Mar 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+