Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன்கள் 35725,அதிக பட்ச ரன்கள் 228* ,சதம் 68. அரை சதம் 185. கேட்ச் 294. விக்கெட்டு 176 -யார் இவர்?

ராய் மார்ஷல் என்ற மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் விளையாடியது 4 டெஸ்டுக்கள் மட்டுமே.மொத்தம் எடுத்த ரன்கள் 143. அதிக பட்சம் ரன்கள் 30. அறிமுக டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில்.

அறிமுக டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு.எதிராக பிரிஸ்பேன் மைதானத்தில். 1951 ஆம் வருடம் ஜான்
கோடார்ட் தலைமையில்.ராய் மார்ஷல் அவரது முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் 28.

india national cricket team cricket history sports news


இந்த டெஸ்டை தனது அருமையான பந்து வீச்சு மூலம்
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற உதவினார் பவுலர்
டோக் ரிங். இவர் எடுத்தது 8 விக்கெட்டுக்கள்.

2 / 52 6 / 80

இந்த டெஸ்டில் மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் ஸ்பின் பவுலர்கள் ஜோடி தலா 6 விக்கெட்டுக்கள்
கைப்பற்றினர்.

ஆல்ஃப் வலென்டைன்
5 1
சோனி ராமதின்
1 5

ராய் மார்ஷல் கடைசி டெஸ்ட் ,1952 பிப்ரவரி. ஆக்லாந்து மைதானம், நியூசிலாந்துஅணிக்கு எதிராக.மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஸ்கோர் 546 / 6 டிக்ளார்.நியூசிலாந்து அணி
சுருண்டது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் எடுத்த ரன்கள் 160.
பாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் எடுத்தது.17 / 1
ஆட்டம் வெற்றி, தோல்வி இல்லாமல்.டிராவில் முடிவு பெற்றது.

மொத்தம் மூன்று சதங்களைக் கண்டது இந்த டெஸ்ட்.
நான்காவது சதம் மிக மிக நெருங்கி வந்தும்.
பூர்த்தி ஆக வில்லை.ஆம் 1 ரன் வித்தியாசத்தில்,
செஞ்சுரி மிஸ் செய்தார் ஒப்பனிங் வீரர் ஆலன் ரே. இவர் எடுத்த ரன்கள் 99.

ஆனால்.இவரது ஒப்பனிங் ஜோடி.வீரர் சதம் பதிவு செய்தார். ஜெபிபிரெய் ஸ்டோல்லமெயர். ரன்கள் 152.இந்த ஜோடி.ஒப்பனிங் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 197.
மற்ற இரு வீரர்கள் சதம் எடுத்தவர்கள்.

பிரேங்க் வொரால் 100
க்ளைய்ட் வால் காட்.115
,மொத்தம் மூன்று நாட்கள் மட்டும் ஆடப் பட்டது. நான்காம் நாள் முழுவதும் ஆட்டம்.இல்லை.முதல் தர ஆட்டங்கள் ராய் மார்ஷல் பார்படோஸ் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்காக
ஆடினார்.

முதல் தர கிரிக்கெட்டில் இவரது முத்திரையை பதித்து அசத்தினார்.
ரன்கள் 35725. மேட்ச்சுக்கள் 602. அதிக பட்ச ரன்கள் 228* சதங்கள் 68. அரை சதங்கள் 185. கேட்சுக்கள் 294.
விக்கெட்டுக்கள் 176.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

டோக் ரிங் என்ற ஆ ல்ஸ்திரேலிய பவுலர் 1948 ல் இந்திய அணிக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில் தனது அறிமுக டெஸ்ட்.ஆடினார், டான் ப்ராட்மன் தலைமையில்.இந்த டெஸ்டை ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 177 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த அறிமுக டெஸ்டில்
டோக் ரிங் எடுத்தது விக்கெடுக்கள் 6.

3 / 103 3 / 17

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெடுக்கள் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தனர்.முதல் இன்னிங்சில் நன்றாக ஆடிய இந்திய அணி (331 ரன்கள் ) பாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் இரட்டை இலக்கம் எண்ணில் சுருண்டது பரிதாபம்.
( ஆல் அவுட் 67 )

இந்த டெஸ்ட் கண்ட இரண்டு சதங்கள்.
நீல் ஹார்வே 153
வினு மன்காட் 111

ஆஸ்திரேலிய வீரர்
பில் பிரவுன் எடுத்தது 99.

கேப்டன் டான் ப்ராட்மன் 57
சாம் லாக்ஸ்டன் 80

இந்திய அணி

விஜய் ஹசாரே 74
டாட்டு பாட்கர் 56

இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர் ஹேமு அதிகாரி 17.
டோக் ரிங் கடைசி டெஸ்ட் 1953 ல் லார்ட்ஸ் மைதானத்தில்.
இந்த மேட்ச்சில்.இவர் எடுத்த விக்கெட்டுக்கள் 2.

எடுத்த ரன்கள்
18 7

டிராவில் முடிந்த இந்த ஆட்டம் கண்ட சதங்கள்
ஆஸ்திரேலியா
கேப்டன் லின்ட்சே ஹஸ்ஸட் 104
கீத் மில்லர் 109

இங்கிலாந்து

கேப்டன் லென் ஹட்டன் 145
வில்லி வாட்சன்109
டோக் ரிங் 13 டெஸ்டுக்கள் 426 ரன்கள் 35 விக்கெட்டுக்கள்.

முதல் தர கிரிக்கெட் விக்டோரியா அணி. 451 விக்கெடுக்கள்
3418 ரன்கள்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, October 15, 2024, 18:29 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+