Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்

மும்பை : இந்த ஸ்பின் பவுலர், மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக, ஒரே ஒரு தொடர் மட்டும் விளையாடினார். மொத்தம் விளையாடிய டெஸ்டுக்கள் 4. எடுத்த விக்கெட்டுக்கள் 17.ஒரு டெஸ்டில், ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் எடுத்த விக்கெட்டுக்கள் 9.

இந்திய அணி வென்ற இந்த டெஸ்டில் தான் இந்திய துவக்க ஆட்டக்காரர், சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகம் ஆனார்.
இதே டெஸ்டில் வெங்கடராகவன் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணியை சார்ந்த இந்த ஸ்பின் பவுலர் பெயர் ஜாக் நோரெய்கா.

Cricket titbits - only cricketer took part in two tie test and other interesting fact

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் இவர் இந்த 9 விக்கெட்டுக்கள் சாதனை புரிந்தார். ( 9 / 95 ) மற்றும் ஒரு ஒப்பனிங் பேட்ஸ்மன் அசோக் மன்காட்டை, ஷில்லிங்க்போர்ட் என்ற பவுலர் வீழ்த்தினார்.

அந்த தொடரின் கடைசி டெஸ்டில் (இவரது கடைசி டெஸ்ட்டும் இதுவே) இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் ஜாக் நோரெய்கா 5
விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மைக்கேல் மலோனே என்ற ஆஸ்திரேலிய வீரர், தனது அறிமுக டெஸ்டில் ஒரே ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 46 ரன்கள் எடுத்தார், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் 1977 ஆம் வருடம்.

பவுலிங்கில், இவர் எடுத்த விக்கெடுக்கள் 6.

5 / 63 & 1 / 14

இந்த அறிமுக டெஸ்டே இவரது கடைசி டெஸ்டாகவும் முடிந்து விட்டது.

பேக்கர் தொடரில் பங்கு பெற சென்று விட்டார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த டெஸ்ட் மேட்ச்சில் சதம் எடுத்தவர்களும், 90 ரன்களுக்கு மேல் எடுத்து, சதத்தை தவற விட்டவர்களும் உண்டு.

1966 ல் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின்
நாட்டிங்காம் மைதானத்தில் நடைப் பெற்ற இந்த டெஸ்டை 139 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது , மேற்கு இந்திய தீவுக்கள் அணி.

சதங்கள்
டாம் கிரேவேனே 109
பேசில் புட்சர் 209*

சதங்களை மிஸ் செய்தவர்கள்

செய்மௌர் நர்ஸ் 93

கேப்டன்கள்
காலின் கௌட்ரேய் 96
கேரி சோபர்ஸ் 94

இது தான், சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இங்கிலாந்து ஸ்பின் பவுலர் டெரிக் அண்டர் வுட், அவர்களின் அறிமுக டெஸ்ட் ஆகும்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ரே பிரைட் ,
ஆஸ்திரேலிய வீரர் இந்தியாவிற்கு எதிரான டை ( Tied test )டெஸ்டில் பங்கு பெற்றவர். 1986 ல்.

இவர் பேட்டிங் ஆடிய ஒரு இன்னிங்சில் எடுத்த ரன்கள் 30.

பவுலிங்கில் எடுத்த விக்கெடுக்கள் 7

2 / 68 & 5 / 94

இந்த டெஸ்டில் சதம் எடுத்தவர்கள்

டேவிட் பூன் 122
டீன் ஜோன்ஸ் 210

கேப்டன்கள்
ஆலன் பார்டர் 106
கபில் தேவ் 119

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இது இரண்டாவது டை ஆன டெஸ்ட் ஆகும்.

முதலில் டை ஆன டெஸ்டிற்கும் , இந்த டெஸ்டிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இது. ஓரு ஆஸ்திரேலிய வீரர் இரண்டு டை டெஸ்டுக்களிலும் பங்கு பெற்றவர். முதல் சரித்திர நிகழ்வில் டெஸ்டில் விளையாடி , இந்த இரண்டாவது நிகழ்வில் ஆஸ்திரேலிய அணியின் கோச்சாக . அவர்தான் பாபி சிம்சன்.

முதல் டை டெஸ்டில் பாபி சிம்சன் , முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் 92.
( 1960. மேற்கு இந்திய தீவுக்கள்,
ஆஸ்திரேலியா ,
பிரிஸ்பேன் மைதானம் )

ரே பிரைட், பாகிஸ்தான் அணிக்கு எதிரான காரச்சி டெஸ்டில் ( 1980 )
10 விக்கெட்டுக்கள் எடுத்தார்.

7 / 87 & 3 / 24

இருந்தும் , பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்டில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.இவர் விளையாடிய 25 டெஸ்டுகளில் 53 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, April 17, 2024, 0:30 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+