For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிரியர் பணிக்காக கிரிக்கெட்டை விட்ட வீரர்.. இன்னும் பல சுவாரஸ்ய தகவல் - cricket titbits

மும்பை : இந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒரு டெஸ்ட் மேட்சில் கூட விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக திகழ்ந்தது இல்லை.

ஆனால் இவர் மூன்று டெஸ்ட் மேட்சுகளில் 12 வது ஆட்டக்காரராக விளையாடி இருக்கிறார்.

cricket titbits - Player who give up cricket for teaching - interesting facts

ஒரே ஒரு டெஸ்டில் சுமார் 15 நிமிடங்கள் பீல்ட் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

மெல்போர்ன் மைதானத்தில் (1963-64) தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக இவர் பீல்ட் செய்து வீசிய பந்தினால் அவர்களின் சிறந்த ஆட்டக்காரர் எட்டி பார்லோ ( Eddie Barlow ) ரன் அவுட் ஆனார். இந்த தருணத்தில் அங்கு இருந்த டான் ப்ராட்மன் அதை கண்டாராம்.

விக்டோரிய அணிக்காக விளையாடிய இவர் பெயர் ஜாக் போட்டர் ( Jack Potter)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த புகழ் பெற்ற ஸ்பின் பவுலர் டெஸ்ட் மேட்ச் விளையாட துவங்கிய பிறகு , தனது தந்தையாருக்கு அளித்த உறுதி மொழியால் சுமார் 5 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தார். (Engineering Degree).

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பேல் அவர்களால், இவர் ஒரு தலை சிறந்த ஸ்பின் பவுலர் என்று புகழ்ப் பட்டவர்.

49 டெஸ்டுகளில் 189 விகட்டுக்களை எடுத்தவர்.

இந்த ஆப் ஸ்பின் பவுலர் பெயர் E A S பிரசன்னா.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இவர் வளர்ந்து வந்த சுனில் கவாஸ்கருக்கு கோச்சாக இருந்து இருக்கிறார்.

அன்றைய மும்பை அணிக்கும், பெங்கால் அணிக்கும் முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்.

இந்திய அணிக்கு 5 டெஸ்டுக்கள் விளையாடிய ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், ஆஸ்திரே லிய அணிக்கு எதிராக 4 டெஸ்டுகளிலும் பங்கு பெற்றவர்.

மொத்தம் 245 ரன்கள் எடுத்தவர்.

அங்கிகரிக்கப்பட்ட கோச்சாக திகழ்ந்தவர்.

இவர் பெயர் ராம்நாத் கென்னி.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கூர்மையான பார்வை கொண்ட இந்த ஆஸ்திரேலிய வீரர் க்ரௌண்ட் பீல்டிங்கில் சிறந்தவராக திகழ்ந்தார்.

ஓடி சென்று பந்துக்களை தடுத்து ரன்கள் செல்லாமல் கவனித்துக் கொள்வதில் சூரர்.

இவர் தனது முதல் டெஸ்டில் எடுத்தது 81 ரன்கள், இந்திய அணிக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில். (1967)

31 டெஸ்டுகள் மட்டுமே விளையாடிய இவர் 2 சதங்கள் எடுத்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு
எதிராக.

1594 டெஸ்ட் ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தான் விரும்பிய ஆசிரியர் வேலையை தொடர முடிவு செய்தார்.

இவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது இவரது வயது 26 மட்டும் தான்.

இவர் டெஸ்டுக்கள் விளையாடிய காலம் டிசம்பர் 1967 முதல் ஜனவரி 1974.

3 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கு பெற்றவர்.

முதல் தர கிரிக்கெட் விக்டோரியா அணிக்கு விளையாடியவர்.

பல பள்ளிகளில்,கல்லூரிகளில் வேலை பார்த்த இவர் புகழ் பெற்ற மெல் போர்ன் கிராம்மர் ஸ்கூலில் ( Melbourne Grammar School ) பல வருடங்கள் தலைமை ஆசிரியர் பதவியில் பணி புரிந்தார்.

இவர் பெயர் பால் ஷீயான் ( Paul Sheahan)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த இடது கை ஒப்பனிங் பேட்ஸ்மேன் இங்கிலாந்திற்காக டெஸ்ட் மேட்சுக்கள் விளையாடியவர்.

முதல் தர கிரிக்கெட்
க்லூஸஸ்டர் ஷயர் ( Gloucestershire) , லங்காஷயர் (Lancashire) அணிகளுக்காக விளையாடியவர்.

இவர் தான் முதல் லங்காஷயர் ஆட்டக்காரர், அவர்களுடைய மைதானமான ஓல்ட் டிராபடில் ( Old Trafford ground) முதல் டெஸ்ட் சதம் பதிவு செய்தவர். இவர் 131 ரன்கள் எடுத்தார் அந்த மைதானத்தில்.

1959 முதல் 1963 வரை 28 டெஸ்டுகளில் 1974 ரன்கள், 4 சதங்கள் அதிக பட்ச 175 (தென் ஆப்ரிக்கா டீமக்கு எதிராக) சராசரி 43.86.

முதல் தர கிரிக்கெட்டில் 400 ஆட்டங்களில் 21528 ரன்கள் எடுத்துள்ளார்.

01/08/1935 ல் பிறந்த இவர் 79 வயதில் 26/12/2014 அன்று மறைந்தார்.

1960 ல் விஸ்ட்டேன் கிரிக்கெட் வீரர்களில் ( Wisden Cricketers of the Year) ஒருவராக தேர்ந்து எடுக்கப் பட்டவர்.

இங்கிலாந்து டேபிள் டென்னிஸ் ஜூனியர் வீரராக திகழ்ந்தவர்.

இவர் பெயர் ஜியோப் புல்லர் ( Geoff Pullar )

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, January 24, 2024, 22:28 [IST]
Other articles published on Jan 24, 2024
English summary
cricket titbits - Player who give up cricket for teaching - interesting facts ஆசிரியர் பணிக்காக கிரிக்கெட்டை விட்ட வீரர்.. இன்னும் பல சுவாரஸ்ய தகவல் - cricket titbits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+