பெங்களூரு : இந்த புகழ் பெற்ற ஓப்பனிங் பேட்ஸ்மேன் இங்கிலாந்து அணிக்காக, தனது துவக்க முதல் டெஸ்டில் ஓபன் செய்ய ரெடியாக இருந்தார். இவருடன் ஓபன் செய்ய வேண்டிய மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மன் ஜான் எட்ரிச்க்கு ( John Edrich )காலில் காயம் ஏற்பட்டது.அதனால் இவருடன் அந்த இன்னிங்க்ஸை ஸ்பின் பவுலர் பிரெட் டிட்மஸ் ( Fred Titmus) துவக்கினார். டிட்மஸ் 16 ரன்கள் எடுத்தார். அந்த தனது முதல் டெஸ்ட் ஆடிய ஜியோப் பாய்க்காட் ( Geoff Boycott) 48 ரன்கள் எடுத்தார். துவங்கிய தினம் 4 ஜூன் 1964.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேற்கு இந்திய கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் இடம் பெற்றவர், ஆவார் இந்த ஓப்பனிங் பேட்ஸ்மன்.இவர் பெயர் ஜியார்ஜ் சாலேனோர் ( George Challenor).
இவர்தான் மேற்கு இந்திய தீவு அணி ஆடிய முதல் டெஸ்ட் மேட்சில் முதல் பந்தை எதிர் கொண்டு ஆட்டத்தை துவக்கினார். அந்த வகையில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் சரித்திரத்தில் இடம் பெற்றவர்.

இவர் எதிர் கொண்ட பவுலர் அன்றைய கால கட்டத்தின் மிக வேகமாக பந்து வீசிய ஹரோல்ட் லார்வூட் ( Harold Larwood) இந்த பேட்ஸ்மேனுக்கு அப்பொழுது வயது 40. முதல் இன்னிங்சில் எடுத்தது 29 ரன்கள். மூன்று ஆட்டங்கள் ஆடினார்.
முதல் தர கிரிக்கெட்டில் 5800 ரன்களுக்கு மேல் எடுத்த இவர் 15 சதங்கள் எடுத்தவர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த பெருமை மேற்கு இந்திய முன்னாள் கேப்டன் பிரைன் லாராவை ( Brain Lara) சாரும். 2004 ஆம் வருடம் இங்கிலாந்து டீமிற்கு எதிராக இவர் எடுத்த ரன்கள் 400 நாட் அவுட். இந்த ரன்கள் குவிக்க 582 பந்துகளை எதிர் கொண்டார். இந்த 400 ரன்களில் 43 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த வேக பந்து வீச்சாளர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்காக 43 டெஸ்டுகள் மற்றும் 114 ஒரு நாள் பந்தயங்களில் விளையாடியவர்.புகழ் பெற்ற ஸர் ரிச்சர்டு ஹாட்லீயுடன் ( Sir Richard Hadlee) ஜோடியாக ஓப்பனிங் பவுலிங் செய்தவர்.இவர் பிறந்த தினம் 3 ஜூலை 1950. ரிச்சர்ட் ஹாட்லீயின் பிறந்த நாளும் அதுவே. ஒரு வருடம் இடைவெளி. ( ஹாட்லீ 03 ஜூலை 1951 ).
இந்த ஆட்டக்காரர் பெயர் எவன் ஜான் சாட் பீல்டு.( Ewen John Chatfield)
இவர் அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத ஒன்று. அதுவே அவருடைய கிரிக்கெட் சரித்திரத்தில் கடைசி மேட்சாக சரித்திரம் படைத்து இருக்கும். நல்ல வேளை இங்கிலாந்து அணியின் பிசியோதெரபிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் ( physiotherapist Bernard Thomas) என்பவரின் உடனடி முதலுதவி சிகிச்சையால் உயிர் பிழைத்தார். வேக பந்தினால் நெற்றியில் அடி பட்டு கிரவுண்டில் சுருண்டு விழுந்தார். இந்த ஆட்டக்காரர் 11 வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இங்கிலாந்து வேக பந்து பவுலர் பீட்டர் லேவர் ( Peter Lever) வீசிய பவுன்சர், சாட் பீல்ட்டின் தலையை பதம் பார்த்தது.
அந்த கால கட்டத்தில் தலைக்கு ஹெல்மெட் அணியும் வழக்கம் அறிமுகப்படுத்தப் படவில்லை. மேலும் தற்காலத்தில் உள்ள பலவகை தற்காப்பு உபகரணங்கள் எதுவும் அன்று கிடையாது.
இந்த ஆட்டக்காரர் பிறகு ஒரு டெஸ்டில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் டீமிற்கு எதிராக வெற்றி பெற கடைசி வரை நின்று பேட்டிங் விளையாடி உதவினார்.
43 டெஸ்டுகளில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 180. வீழ்த்திய விக்கெட்டுகள் 123. மூன்று முறை 5 விக்கெட்டுகளுக்கு மேலும் ஒரு முறை 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஒரு நாள் பந்தயங்களில் எடுத்த ரன்கள் 118. வீழ்த்திய விக்கெட்டுகள் 140.
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றதும், பல்வேறு வேலைகள் பார்த்தார், டாக்ஸி ஓட்டும் டிரைவர் வேலை உட்பட.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேற்கு இந்திய கிரிக்கெட் டீமின் விக்கெட் கீப்பர் ஆக இருந்த ஜெப் டுஜோன்( Jeff Dujon) ஒரு முறை கூறினார், ஆண்டி ராபர்ட்ஸ் (Andy Roberts) ஹோல்டிங் (Holding)மார்ஷால் ( Marshall) போன்றவர்களை விட மிக வேகமாகவும், துல்லியமாகவும் வேக பந்து வீசியவர் பேட்ரிக் பேட்டர்சன். ( Balfour Patrick Patterson)
இவர் 28 டெஸ்டுகளில் 83 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 59.ஒரு நாள் பந்தயங்களில் 90 விக்கெட்டுகள் எடுத்தார்.இவர் பந்து வீச வரும் ஸ்டைலே தனிப்பட்ட முறையில் இருக்கும்.இவர் விளையாடிய தருணத்தில் ஆடிய பல முன்னிலை ஆட்டக்காரர்கள் இவரின் பந்துகளை எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் மிகவும் தயங்கினர்.
வாசுதேவன் பெங்களூரு