Cricket titbits - தொடர்ந்து 21 ஓவர் மெயிடன்.. சாதனை படைத்த கதை.. இன்னும் அரிய தகவல்
பெங்களூரு : வருடம் 1964. ஜனவரி மாதம்பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள்.
அன்றைய மதராஸ் நகரத்தில் ( தற்பொழுதிய சென்னை) கார்ப் பரேஷன் மைதானம்.இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியும் ஆடிய டெஸ்ட் மேட்ச்.
இடதுக்கை சூழல் பந்துவீச்சாளர் பாபு நட்கர்னி( Bapu Nadkarni) முதல் இன்னிங்சில் வீசிய ஓவர்கள் 32. இவற்றில் 21 ஓவர்களில் எதிரணி ஆட்டக்காரர்களால் ரன்கள் எதுவும் குவிக்க பட முடியவில்லை.

நட்கர்னி அந்த இனிங்சில் கொடுத்த ரன்கள் 5 மட்டுமே. மேலும் தொடர்ந்தார் போல 21 ஓவர்களில் ரன் கொடுக்காமல் மெயிடேன் ஓவர்களாக வீசி உலக சாதனைப் படைத்தார்.
அந்த பக்கத்திலிருந்து பந்து வீசிய மற்ற பவுலர்களின் ஓவர்களில் ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன்கள் கென் பாரிங்டன் ,( Ken Barrington )பிரைன் போலஸ் ( Brain Bolus)போன்ற ஆட்டக்காரர்களால், நட்கர்னி வீசிய சூழல் பந்துகளுக்கு எதிராக சுலபமாக ரன்களை எடுக்க முடியவில்லை.
குறிப்பாக கென் பாரிங்டன், ஸ்பின் பவுலிங்க்கை எதிரத்து விளையிடுவதில் தலை சிறந்தவராக திகழ்ந்தவர்.
பாபு நட்கர்னி இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து
வீசினார்.
முதல் இன்னிங்ஸ்
ஓவர்கள் மெய்டன் ரன்கள் கொடுத்தது
32 27 5
விக்கெட்டுகள்
0
இரண்டாவது இன்னிங்ஸ்
6 4 6 2
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் சரிவர விளையாடததால், அடுத்த டெஸ்டில் விளையாடாமல் தியாகம் செய்தார் இந்த கேப்டன்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் குழுவும் புகழ் பெற்ற ஆஷஸ் கோப்பைகாக மோதிக்கொள்வது ரசிகர்கள் அறிந்த செய்தி.
ஒரு முறை இங்கிலாந்து மைதானங்களிலும், மறுமுறை ஆஸ்திரேலியா மண்ணிலும் டெஸ்ட் மேட்சுகள் நடைப் பெறுவது வழக்கம்.
அந்த முறை இங்கிலாந்து அணியின் கேட்டனாக தேர்வு செய்யப்பட்டவர் மைக் டென்னெஸ் என்ற பேட்ஸ்மன். ( Mike Dennes).
இவர் தலைமையில் சென்ற இங்கிலாந்து டீம் சரிவர ஆடவில்லை. மைக் டென்னஸின் ரன்களும் போற்றும்படியாக இல்லை. சிந்தனை செய்தார் மைக் , முடிவு ஒன்றை தானாகவே எடுத்து அதை செயல் படுத்தினார், குழுவின் நலன் கருதி.
துவங்க இருந்த சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் டெஸ்ட்டிலிருந்து விளையாடாமல் விலகிக் கொண்டார்.
இவருக்கு பதிலாக ஜான் எட்ரிச் கேப்டனாக செயல் பட்டார். ஒரு தேர்ந்து எடுக்கப்பட்ட கேப்டன் தானாகவே முன் வந்து விலகிக் கொண்டது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் அதுவே முதன் முறை. அந்த டெஸ்டிலும், ஆஷஸ் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியினரே வெற்றிப் பெற்றனர்.
இந்த நிகழ்வு ஜனவரி மாதம் 1975 ல் நடைப் பெற்றது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1948 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம், ஓவல் மைதானத்தில் டான் ப்ராட்மான் தனது கடைசி டெஸ்ட் மேட்சில் 0 எடுத்தது பலரும் அறிந்ததே.
அதே மேட்சில் ஆர்தர் மோரிஸ் (Arthur Morris) 196 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணிய௮ன் ஸ்பின் பவுலர் எரிக் ஹோலிஸ் ( Eric Hollies) ப்ராட்மான் விக்கெட் உட்பட 5 ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 52 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதில் ஓப்பனிங் பேட்ஸ்மன் லென் ஹட்டன் ( Len Hutton ) மட்டும் இரட்டை இலக்க ரன்கள் குவித்தார்.அவரது ரன்கள் 30. 5 வீரர்கள் பூஜ்ஜியம் 0 எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர் ரே லிண்ட் வால் ( Ray Lindwall) 20 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. ஒரு இன்னிங்ஸ் 149 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.
வாசுதேவன் பெங்களூரு
Story first published: Wednesday, December 27, 2023, 23:12 [IST]
Other articles published on Dec 27, 2023


Click it and Unblock the Notifications