Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த வீரர்கள்.. கடைசி பந்திலும் விக்கெட்.. விவரம்

பெங்களூரு : துவக்க டெஸ்டில், வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதித்த பெருமை ஆஸ்திரேலிய வீரர் டாம் ஹாரன் ஐ ( Tom Horan ) சாரும்.26.01.1883 ல் இங்கிலாந்து வீரர் வால்டர் ரேட் ( Walter Read ) என்பவரை அவுட் ஆக்கினார், சிட்னி மைதானத்தில்.
இத்தகைய சாதனையை டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் சாதித்த முதல் வீரர் இவர் ஆவார்.

டெனிஸ் ஸ்மித் ( Dennis Smith ) என்ற நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் 1933 ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் , அவர் வீசிய முதல் பந்திலேயே எடி பென்டர் ( Eddie Paynter ) என்பவர் விக்கெட்டை வீழ்த்தினார். டெனிஸ் ஸ்மித் டெஸ்ட் மேட்சுகளில் எடுத்தது இந்த ஒரே ஒரு விக்கெட் மட்டுமே.

https://tamil.oneindia.com/news/international/no-country-has-the-right-to-bully-us-says-maldives-president-amid-diplomatic-row-with-india-574383.html

அவர் விளையாடியதும் இந்த ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் மட்டும் தான் இது வரையில் இந்திய அணியின் சார்பாக டெஸ்ட் மேட்சில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தவர் நிலேஷ் குல்கர்னி ( Nilesh Kulkarni )மட்டுமே. 3.8.1997 ல் இலங்கை வீரர் மார்வன் அடபட்டுவின் ( Marvan Atapattu ) விக்கெட்டை வீழ்த்தி.

இத்தகைய சாதனைகளை பரிந்தவர்கள்

ஆஸ்திரேலியா 4
இங்கிலாந்து 7
தென் ஆப்பிரிக்கா 3
நியூஸிலாந்து 2
இந்தியா 1
மேற்கு இந்திய தீவுகள் 1
பாகிஸ்தான் 1
ஸ்ரீ லங்கா 2
ஆப்கானிஸ்தான் 1

ஒரு நாள் கிரிக்கெட் மேட்சில் தான் வீசிய முதல் பந்தில் விக்கெட் எடுத்தவர், இங்கிலாந்து பவுலர் ஜி ஆர்னோல்ட் ( Geoff Arnold ) ஆஸ்திரேலிய வீரர் ஜி வாட்ஸனின் ( G Watson ) விக்கெட்டை கைப்பற்றி. 24.8.1972 அன்று.இந்திய அணியின் சார்பாக இருவர் இந்த சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

6.9.1999 அன்று மேற்கு இந்திய வீரர் நிக்ஸோன் மெக்லீன் ( Nixon McLean) என்பவர் விக்கெட்டை வீழ்த்தியவர், சடகோபன் ரமேஷ். இந்த நிகழ்வு சிங்கப்பூரில் நடைப் பெற்றது.

30.12.2012 ல் பாகிஸ்தான் வீரர் முஹம்மத் ஹபீஸ் ( Mohammad Hafeez ) விக்கெட்டை, சென்னை சேப்பாக் மைதானத்தில் வீழ்த்தியவர்
புவ்னேஸ்வர் குமார் ( Bhuvneshwar Kumar )

இத்தகையை சாதனைகளை புரிந்தது

இங்கிலாந்து 2
மேற்கு இந்திய தீவுகள் 4
நியூஸிலாந்து 2
தென் ஆப்பிரிக்கா 3
இந்தியா 2
பாகிஸ்தான் 2
ஜிம்பாப்வே 2
கென்யா 2
ஸ்ரீ லங்கா 4
பங்களாதேஷ் 1
ஐயர்லேண்ட் 1
கனடா 2
நேபாள் 1
யு எ இ 1
ஹாங்காங் 1

T 20 கிரிக்கெட்டில், தான் வீசிய முதல் பந்தில் விக்கெட் எடுத்தவர், ஆஸ்திரேலிய பவுலர் எம் கஸ்பிரோவிக்ஸ் ( M Kasprowicz )
17.02.2005 ல் நடைப்பெற்றது. இவர் நியூஸிலாந்து வீரர் ஸ்டீபன் பிளெமிங் ( Stephen Fleming ) விக்கெட்டை வீழ்த்தினார் .

இந்திய அணியின் சார்பாக மூவர் இந்த சாதனை புரிந்தவர்கள்.அஜித் அகக்கர் 1.12.2006 தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ்.பி ஓஜஹா ( Pragyan Ojha) பங்களாதேஷ் வீரர் ஹசன்.விராட் கோஹ்லி 31.8.2011 இங்கிலாந்து வீரர் கே பிட்ர்ஸன் ( Kevin Pietersen )

ஆஸ்திரேலியா 3
இங்கிலாந்து 2
தென் ஆப்பிரிக்கா 4
இந்தியா 3
நியூஸிலாந்து 2
பாகிஸ்தான் 2
ஸ்ரீ லங்கா 1
பங்களாதேஷ் 1
மற்றவை 7

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1889 வரையில் ஒரு ஓவர் 4 பந்துகள் கொண்டிருந்தது.

பிறகு 5 பந்துகள் என்றும், 1900 ம் வருடம் முதல் 6 பந்துகள் என்ற வழக்கம் அறிமுகப் படுத்தப் பட்டது.

1922 - 23 ல் ஆஸ்திரேலி யாவில் 8 பந்துகள் ஒரு ஓவருக்கு என்று மாற்றப் பட்டது.

8 பந்துகள் ஓவருக்கு என்ற முறை நியூஸிலாந்து , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் பின் பற்றின சில காலங்களுக்கு.

தற்பொழுது கிரிக்கெட்டில் ஓவருக்கு 6 பந்துகள் என்ற முறை தான் பின் பற்ற படுகின்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சர் ரிச்சர்ட் ஹாட்லீ ( Sir Richard Hadlee) முத்தையா முரளீதரன் , ( Muthiah Muralitharan) லசித் மலிங்கா ( Lasith Malinga ) க்ளென் மெக்ராத் ( Glenn McGrath ) ஸ்டுவர்ட் ப்ராட் ( Stuart Broad ) ஆகியவர்கள் தங்களது சர்வ தேச கிரிக்கெட் விளையாட்டில் (டெஸ்ட் கிரிக்கெட் உட்பட ) இருந்து விடைப் பெற்ற கடைசி மேட்சில் அவர்கள் வீசிய கடைசி பந்துகளில் விக்கெட்டு எடுத்து அசத்தியவர்கள்.

விக்கெட் கீப்பராக திகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட் ( Adam Gilchrist ) இந்த சாதனையை தனது கடைசி ஐ பி எல் மேட்சில் தான் வீசிய ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் எடுத்து சாதித்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

டெஸ்ட் மேட்சில் ஒரு இன்னிங்சில் அதிக பட்ச ஓவர்கள் வீசியவர், மேற்கு இந்திய தீவுகள் பவுலர் எஸ் ராம்தின். ( S Ramadhin ) 1957 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 588 பந்துகள் ( 98 ஓவர்கள் ) வீசினார். 35 ஓவர்கள் மெய்டன், 2 விக்கெட்டுகள் எடுத்தார் 179 ரன்கள் கொடுத்து.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு மேட்சுகளில் ஒரு இன்னங்சில் அதிக பட்சமாக தலா 40 நோ பால்கள் ( No Ball ) வீசப் பட்டன.

1986 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கு இந்திய தீவு வீரர்கள் வீசியவை.

1989 ல் மேற்கு இந்திய தீவு பவுலர்கள் ஆஸ்தி ரேலிய அணிக்கு எதிராக வீசினார்கள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஸ்ரீ லங்காவின் பவுலர் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பட்சனான மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். எண்ணிக்கை 1794.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, January 13, 2024, 20:11 [IST]
Other articles published on Jan 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+