பெங்களூரு : இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது குறுகிய காலம் மட்டுமே. ஸ்ரீ லங்காவை சேர்ந்த இவர் தனது அறிமுக டெஸ்ட்டிலேயே இரட்டை சதம் எடுத்தார். கொழும்புவில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக, ஏப்ரல் 1987 ல்.
548 பந்துகள் எதிர் கொண்டு 777 நிமிடங்கள் விளையாடி இந்த சாதனையை புரிந்தவர் பிரண்டன் குருப்பு . ( Brendon Kuruppu)
இவர் எடுத்த ரன்கள் 201* ( நாட் அவுட் ) 24 பவுண்டரிகள் எடுத்தார்.
பதிவு செய்தது இந்த ஒரே ஒரு சதம் மட்டுமே.
அதை தவிர 5 நாட்களும் பாட்ஸ் ( Pads ) அணிந்துக் கொண்டு விளையாடும் பொழுது மைதானத்தில் இருந்தார் பேட்டிங் ஆடும் பொழுதும் , விக்கெட் கீப்பிங் செய்த பொழுதும்.

4 டெஸ்டுகள் மட்டுமே விளையாடிய இவரது சராசரி ரன்கள் 53.33.இவரைப் போல் இந்த மாதிரி 5 நாட்களும் மைதானத்தில் இருந்த மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன்
முன்னாள் பாகிஸ்தான் விக்கெட்கீப்பர் தஸ்லீம் ஆரிப் ( Taslim Arif ) 1980 ல் பைசலாபாத் டெஸ்டில் ( Faisalabad ) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக.
இவரும் இரட்டை சதம் பதிவு செய்தார். இவரும் அவுட் ஆகவில்லை. இவர் எடுத்த ரன்கள் 210* 20 பவுண்டரிகள் அடித்த இவர் எதிர் கொண்டது 379 பந்துகள்
எடுத்துக் கொண்டது,435 நிமிடங்கள் ,6 டெஸ்டுகளில் மட்டுமே ஆடிய இவரது சராசரி ரன்கள் 62.62 . பதிவு செய்தது இந்த ஒரே ஒரு சதம் மட்டுமே.
இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் , ஓப்பனிங் செய்த அவரவர் டீம்களான ஸ்ரீ லங்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு டெஸ்டுகளின் முதல் நாள் முதல் இன்னிங்ஸ் துவக்கத்திலிருந்து ஆடி தலா இரட்டை சதங்கள் பதிவு செய்து தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்தனர். எனவே இருவரும் ஐந்து நாட்களும் பாடுகளுடனே ( Pads on ) மைதானத்தில் காட்சி அளித்தனர். இவை ஒரு அறிய டெஸ்ட் நிகழ்வு.
இரண்டு மேட்சுகளும் டிராவில் முடிவடைந்தன.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய அணிக்காக ஆடிய புகழ் பெற்ற நான்கு சூழல் வீச்சு பந்து வீரர்களின் அறிமுக டெஸ்ட்டுகள்.
இ எ எஸ் பிரசன்னா
( EAS Prasanna )
முதல் டெஸ்ட் ஜனவரி 1962
கார்போரேஷன் ஸ்டேடியம் , மெட்ராஸ் ( இன்றைய சென்னை )
( Corporation Stadium, Madras ( present Chennai )
விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸ் 0
இரண்டாவது இன்னிங்ஸ் 1
இந்த அறிமுக டெஸ்டில் பிரசன்னா மொத்தம் வீசிய ஓவர்கள் 20 கொடுத்த ரன்கள் 39 மெய்டன் ஓவர்கள் 5
எடுத்த விக்கெட்டுகள் 1
பேட்டிங்
முதல் இன்னிங்ஸ் 9 * ( Not out )
இரண்டாவது இன்னிங்ஸ் 17
பிடித்த கேட்சுகள் 1
இந்திய அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது
கேப்டன்
நாரி காண்ட்ராக்டர்
( Nari Contractror )
பி எஸ் சந்திரசேகர்
( B S Chandrasekar)
முதல் டெஸ்ட் ஜனவரி 1964
ப்ராபோர்னே ஸ்டேடியம் பம்பாய் ( மும்பை ) Brabourne Stadiun Bombay ( Present Mumbai )
விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸ் 4
இரண்டாவது இன்னிங்ஸ் 1
இந்த அறிமுக டெஸ்டில் சந்திரசேகர் மொத்தம் வீசிய ஓவர்கள் 62 கொடுத்த ரன்கள் 107 மெய்டன் ஓவர்கள் 21 எடுத்த விக்கெட்டுகள் 5
பேட்டிங்
முதல் இன்னிங்ஸ் 0
இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடவில்லை
பிடித்த கேட்சுகள் 1
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்த டெஸ்ட் ட்ராவில் முடிந்தது
கேப்டன்
மன்சூர் அலி கான் பட்டோடி
( Mansur Ali Khan Pataudi)
எஸ் வெங்கட்ராகவன்
( S Venkataraghavan )
முதல் டெஸ்ட் பிப்ரவரி 1965
கார்போரேஷன் ஸ்டேடியம் , மெட்ராஸ் ( இன்றைய சென்னை )
( Corporation Stadium, Madras ( present Chennai )
விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸ் 2
இரண்டாவது இன்னிங்ஸ்
பவுலிங் போடவில்லை
இந்த அறிமுக டெஸ்டில் எஸ் வெங்கட்ராகவன் மொத்தம் வீசிய ஓவர்கள் . 48
கொடுத்த ரன்கள் 90 மெய்டன் ஓவர்கள் 23
எடுத்த விக்கெட்டுகள் 2
பேட்டிங்
முதல் இன்னிங்ஸ் 4
இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடவில்லை
பிடித்த கேட்சுகள் 1
நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்த டெஸ்ட் ட்ராவில் முடிந்தது
இந்த டெஸ்ட் 4 நாட்கள் மேட்சாக விளையாடப் பட்டது.
கேப்டன்
மன்சூர் அலி கான் பட்டோடி
( Mansur Ali Khan Pataudi )
பிக்ஷன் சிங்க் பேடி
( Bishan Singh Bedi )
முதல் டெஸ்ட் டிசம்பர் 1966
ஈடன் கார்டன்ஸ் கல்கத்தா ( கொல்கத்தா )
Eden Gardens Calcutta ( Kolkatta)
விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸ் 2
இந்த அறிமுக டெஸ்டில் பிக்ஷன் சிங்க் பேடி மொத்தம் வீசிய ஓவர்கள் 36 கொடுத்த ரன்கள் 92 மெய்டன் ஓவர்கள் 11
எடுத்த விக்கெட்டுகள் 2
பேட்டிங்
முதல் இன்னிங்ஸ் 5
இரண்டாவது இன்னிங்ஸ் 0
பிடித்த கேட்சுகள் 0
இந்த டெஸ்ட்டில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
கேப்டன்
மன்சூர் அலி கான் பட்டோடி
( Mansur Ali Khan Pataudi )
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆட்டக்காரர்கள் முதல் தினம் லஞ்சுக்கு முன்பாக சதம் எடுத்துள்ளனர்.
நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ( விடி ட்ரும்பர் ( VT Trumper), சிஜி மாகர் ட்னே ( CG Macartney ), டான் ப்ராட்மன் ( Don Bradman ), வார்னர் ( DA Warner) பாகிஸ்தான் ( மஜித்கான் ( Majid Khan) இந்தியா ( எஸ் தவான் ( S Dhawan)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இயன் ஜான்சன் ( Ian Johnson ) என்ற ஆஸ்த்தி ரேலிய கிரிக்கெட் வீரர் 45 டெஸ்டுகள் விளையாடியவர். 109 விக்கெட்டுகள் எடுத்தவர். 17 டெஸ்டுகளில் கேப்டனாக திகழ்ந்தவர் . இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் எடுத்த ரன்கள் 1000.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த ஆப் ஸ்பின் பவுலர் ( Off Spin ) மற்றும் சிறந்த கல்லி பீல்டர் ( Gully fielder ) இரண்டு அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.
ஏஜே ட்ரைக்கோஸ் ( AJ Traicos )
தென் ஆப்பிரிக்காவிற்காக 3 டெஸ்டுகளும் ( South Africa )
ஜிம்பாப்வே அணிக்காக 4 டெஸ்டுகளிலும் பங்கு பெற்றவர்.
இரண்டு அணிகளுக்கும் விளையாடிய கால இடை வெளி வித்தியாசம் 22 ஆண்டுகள்.
வாசுதேவன் , பெங்களூரு