சென்னை : நியூஸிலாந்து அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் வால்டர் ஹாட்லீ ( Walter Hadlee ) என்பவர். 11 டெஸ்டுகள் விளையாடிய இவர் ஒரே ஒரு சதம் எடுத்துள்ளார். 8 டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாக இருந்தவர். இவரது மூன்று மகன்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியுள்ளார்கள்.
பிஜி ஹாட்லீ ( BG Hadlee )
டீ ஆர் ஹாட்லீ ( DR Hadlee)
ஆர் ஜே ஹாட்லீ ( RJ Hadlee )

வால்டர் ஹாட்லீ , தேர்ந்து எடுப்பவராக ( Selector ) மேனேஜர் , போர்டு மெம்பர் , நியூஸிலாந்து . கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் & ப்ரெசிடெண்ட் ஆகவும் திகழ்ந்தவர். முதல் டெஸ்ட் (1937 ) மற்றும் கடைசி டெஸ்ட் (1951 ) இங்கிலாந்து டீமுக்கு எதிராக விளையாடியவர். 1915 ல் பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு ( 91 வயது ) மறைந்தார்.
இவரது மூத்த மகன் பெர்ரி ஜார்ஜ் ஹாட்லீ (Barry George Hadlee ) டெஸ்டுகள் விளையாட வில்லை. ஒரு நாள் பந்தயம் மற்றும் முதல் தர கிரிக்கெட் மேட்சுகள் விளையாடினார். இவர் விளையாடிய இரண்டு ஒரு நாள் மேட்சுகளில், இவரின் இரண்டு சகோதரர்களும் பங்கு கொண்டனர். டாய்லே ராபர்ட் ஹாட்லீ ( Dayle Robert Hadlee ) இவர் 26 டெஸ்டுகள் ( 71 விக்கெட்டுகள் ) மற்றும் 11 ஒரு நாள் பந்தயங்களில் ( 20 விக்கெட்டுகள் ) பங்கு கொண்டவர்.
ரிச்சர்ட் ஜான் ஹாட்லீ ( Richard John Hadlee )
இடது கை பேட்ஸ்மான் வலது கை வேக பந்துவீச்சாளர் - ஆல்ரவுண்டர். 86 டெஸ்டுகளில் 431 விக்கெட்டுகள் எடுத்தவர். 115 ஒரு நாள் பந்தயங்களில் 158 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்.
5 விக்கெட்டுகளுக்கு மேல் 36 முறையும், 10 விக்கெட்டுகளுக்கு மேல் 9 தடவையும் எடுத்தவர். 3124 டெஸ்ட் ரன்கள் குவித்தவர். இரண்டு சதங்கள். சர் ( SIR ) பட்டம் பெற்றவர். தேர்வு குழுவின் தலைவராக இருந்தவர். விளையாடிய கடைசி மேட்சில் , இவர் வீசிய கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியவர்.
நியூஸிலாந்தின் வால்டர் ஹாட்லீ போல் இந்திய அணியில் விளையாடிய தந்தை மகன்கள், அமர்நாத் குடும்பத்தினரை குறிப்பிடலாம். லாலா அமர்நாத்தும் ஒரே ஒரு சதம் பதிவு செய்துள்ளார். 118 ரன்கள். இவரது அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு உரியவர். 24 டெஸ்டுகளில் விளையாடி, 878 ரன்கள் குவித்தார். 45 விக்கெட்டுகள் எடுத்தவர். 1934 முதல் 1946 வரையில் இடைப்பட்ட 12 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் தேர்ந்து எடுக்கப்படவில்லை. 15 டெஸ்டுகளில் கேப்டனாக வழி நடத்தியவர்.
இவர் தலைமையில் முதல் முதலாக இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. (1947-48).
1952ல் இந்திய மண்ணில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் தொடரை இவர் தலைமையில் வென்றது. 1933 ல் முதல் டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக அன்றைய பம்பாயில் விளையாடினார். 1952 ல் அன்றைய கல்கத்தாவில் கடைசி டெஸ்ட் ஆடினார். இவர் தேர்வு குழுவின் தலைவராகவும், காமெண்டரி கூறும் எக்ஸ்பர்ட் (Expert ) ஆகவும் இருந்தவர்.
1911 ல் பிறந்த இவர் 2000 ஆம் ஆண்டு மறைந்தார் ( 88 வது வயதில் ). இவரது இரண்டு மகன்கள் ஆகிய மொஹிந்தர் அமர்நாத் , சுரீந்தர் அமர்நாத் டெஸ்டுகளில் பங்கு கொண்டவர்கள். லாலா அமர்நாத் என்று அழைக்கப் படும் இவரது முழு பெயர் நானிக் அமர்நாத் பாராத்வாஜ் ( Nanik Amarnath Bharadwaj ).
மொஹிந்தர் அமர்நாத், 1983 ல் ஒரு நாள் பந்தயத்தில், இந்தியா உலக கோப்பை பெற்ற செமி பைனல் மற்றும் பைனல் மேட்சுகளில் ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றவர். 69 டெஸ்டுகள், ( 4378 ரன்கள் , 32 விக்கெட்டுகள் 47 கேட்சுகள்). 85 ஒரு நாள் பந்தயங்களில் (1924 ரன்கள், 46 விக்கெட்டுகள் )பங்கு கொண்டவர்.
