Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்

கொழும்பு : டேவ் வாட்மோர் அன்றைய இலங்கையில் பிறந்து, வளர்ந்து பிறகு
ஆஸ்திரேலிய மண்ணில் குடியேறியவர், ஸ்ரீலங்கா அணி 1996 ல் ஒரு நாள் உலக கோப்பை வெல்ல உதவியவர், கோச்சாக.இங்கிலாந்தின்
லங்கஷையர் அணி இரண்டு முக்கிய பந்தயங்களில் வெற்றி வாகை சூடும் பொழுது கோச்சாக செயல்பட்டவர்.

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு ஒரு நாள் பந்தயத்திலும் ,டெஸ்டுக்கள் 7 ம் விளையாடியவர்.கேச்சுக்கள் 13. அரை சதங்கள் 2. மொத்த ரன்கள் 293.
முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ரன்கள் 6116. இவர் முதல் தர கிரிக்கெட் விக்டோரியா அணிக்கு ஆடியவர்.

india national cricket team cricket cricket history sports news interseting facts

1979 மாரச்சில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துவக்கிய இவர் டெஸ்ட் ஆட்டங்கள், அதே வருடம் நவம்பரில் இந்திய அணிக்கு எதிராக முடிவிற்கு வந்தது.
ஒரு நாள் ஆட்டம், மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக சிட்னியில் 1980 ஜனவரியில். அறிமுக மெல்போர்ன் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் இருவர் சதம் எடுத்தனர், இரண்டாவது இன்னிங்ஸ்களில். மஜித் கான் 108. ஆலன் பார்டர் 105.இந்த டெஸ்டில் மொத்தம் பூஜ்ஜியங்கள் ( 0 ) 7. பாக்கிஸ்தான் அணி 1. ஆஸ்திரேலிய அணி 6. இவற்றில் 5 இரண்டாவது ஆஸ்திரேலிய இன்னிங்சில். ஸ்கோர் 305 ல் இருவர் 310 ல் இருவர் அவுட் ஆனார்கள்.
பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் வரிசையாக மூன்று வீரர்கள் தலா எடுத்த ரன்கள் 28. அவர்கள் கேப்டன் முஷ்டாக் முஹம்மது, வாசிம் ராஜா, இம்ரான் கான்.

வாட்மோர் விளையாடிய கடைசி டெஸ்ட் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சதங்கள் எடுத்த இருவர். கேப்டன் சுனில் கவாஸ்கர் 123. ஸயீத் கிர்மானி 101*. இந்திய அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் வாட்மோர் செய்த சாதனை, 6 கேட்சுக்களை பிடித்தது.இவர் கோச்சாக பணி புரியந்த அணிகள். ஸ்ரீலங்கா, வங்க தேசம், பாக்கிஸ்தான், ஜிம்பாப்வே, ஐபில் கே கே ஆர், கேரளா, லங்கஷையர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1911 - 12 அடிலேய்ட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுது, புகைபிடிப்பவர் களுக்கு என்று ஒதுக்கப் பட்டிருந்த தனியாக ரிசர்வ் செய்யப் பட்டிருந்த ஸ்டாண்டில் பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களும் நடை பெற்ற ஆட்டத்தை கண்டுகளித்தனர். இந்த டெஸ்டை இங்கிலாந்து அணி 7 விக்கெடுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ரெஜினால்ட் அலெக்சாண்டர் டப் என்ற வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடியவர். டெஸ்டுக்கள் 22. ரன்கள் 1317. சதங்கள் 2.
அரை சதங்கள் 6. கேட்ச்சுக்கள் 13. முதல் தர கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு. 6500 ரன்களுக்கு மேல் எடுத்தவர்.

வலது கை பேட் ஸ்மன், வேக பந்து பவுலர்.இவர் டெஸ்டுகளில் விளையாடிய 40 இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட பூஜ்ஜியம் (0) எடுத்தது இல்லை.
அறிமுக டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் ஜனவரி 1902 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக. ஆஸ்திரேலிய அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. முதல் இன்னிங்சில் 32 ரன்கள் எடுத்த ரெக்கி டப் , இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். 104 ரன்கள். புகழ் பெற்ற ஆஸ்திரேலிய வீரர்
கிளம் ஹில் எடுத்தது 99.

பவுலிங்கில் அசத்தியவர்கள்.
இங்கிலாந்து வீரர்கள்
சிட்னி பர்ன்ஸ் 13
6 / 42 & 7 /121

க்கொலின் பிளிதே 5
4 / 64 & 1 / 85

ஆஸ்திரேலிய வீரர்கள்
ஹூக் டிரம்பிள் 7
3 / 38 & 4 / 49
மோன்ட்டி நோபில் 13
7 / 17 & 6 / 60 எடுத்தனர்

ரெக்கி டப் ரெக்கி டப் தனது கடைசி டெஸ்டிலும் சதம் அடித்தார். 146 ரன்கள்.
ஓவல் டெஸ்ட் 1905 ல். இது டிராவில் முடிந்தது. இவரை தவிர் சதங்கள் எடுத்த இரண்டு இங்கிலாந்து அணி வீரர்கள் சிபி ப்ரை 144, ஜான்னி டில்டஸ்லே 112*

ஆஸ்திரேலிய பவுலர் டிப்பி காட்டர் விக்கெடுக்கள் 9
7 / 148 & 2 / 73

இங்கிலாந்து
வீரர் வால்டர் பிரேர்லி 6

5 / 110 , 1 / 41

( ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் இழந்தது 4 விக்கெடுக்கள் மட்டுமே)1878 ல் பிறந்த ரெக்கி டப் அவரது 33 வது வயதில் 1911 ஆம் ஆண்டு மறைந்தார்.இவர் 3 கேப்டன்கள் தலைமையில் டெஸ்டுக்களில் விளையாடியவர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக 4 டெஸ்டுக்கள் விளையாடியவர் பீட்டர் லாஷ்லே. இவரது அறிமுக டெஸ்ட் புகழ் பெற்ற 1960 ல் நடைப் பெற்ற முதல் டை ஆன டெஸ்ட் , ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. முதல் இன்னிங்சில் 19, இரண்டாவது இன்னிங்சில் 0 எடுத்தார் இடது கை பேட்ஸ்மன்

இந்த டை ஆன டெஸ்டில் இரண்டு வேக பந்து பவுலர்கள் பேட்டிங், பவுலிங்கில் அசத்தினார்கள்.

ஆஸ்திரேலிய வீரர் ஆலன் டேவிட்சன் விக்கெட்டுக்கள் 11
5 & 6
ரன்கள் 124
44 & 80

மேற்கு இந்திய தீவுக்கள்
வீரர்
வெஸ் ஹால்
விக்கெட்டுக்கள் 9
4 & 5
ரன்கள் 68
50 & 18

ஒவ்வொரு இன்னிங்சில் ஹாலின் விக்கெட்டை .
டேவிட்சனும், டேவிட்சன் விக்கெட்டை ஹாலும் எடுத்தனர்.

அந்த டெஸ்டின் அந்த மிகவும் புகழ் வாங்கி கொடுத்த மேட்சின் அந்த கடைசி 8 பந்துக்கள் கொண்ட ஓவரை வீசியவர் வெஸ் லே ஹால்.

இரண்டு சதங்கள். காரி சோபர்ஸ் 132. நார்ம்
ஓனீல் 181.

மூன்று 65 ரன்கள் எடுக்கப் பட்டன. அதில் இரண்டு இன்னிங்சிலும் எடுத்தவர் மேற்கு இந்திய தீவுக்கள் கேப்டன் பிரேங்க் ஓரல். மற்றும் ஒரு 65 ரன்கள் எடுத்தவர் ஜோ சாலமன். இவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார்

பாப் சிம்ப்சன் ரன்கள்
92 & 0

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வால்லி கிரவுட் 6 கேட்சுக்கள் பிடித்தும், ஒரு ஸ்டம்பிங் செய்தும் அசத்தினார்.

மேற்கு இந்திய வீரர்கள் ஒருவர் கூட ரன் அவுட் ஆகவில்லை.

ஆனால் இந்த குறிப்பிட்ட டெஸ்டில் அதி முக்கிய பங்கு
ரன் அவுட்டுக்களுக்கு உண்டு.
இந்த மேட்ச்சில் மொத்தம் ரன் அவுட்டுக்கள் 5
2 & 3
ரன் அவுட் முறையில் அவுட் ஆனவர்கள் அனைவரும்
ஆஸ்திரேலிய வீரர்கள்.

பீட்டர் லாஷ்லே வீசிய பவுலிங்கில் அவுட் ஆன ஒரே ஒரு வீரர் ஜியோப் பாய்காட்.
பீட்டர் லாஷ்லேயின் கடைசி டெஸ்ட் 1966 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக.

வாசுதேவன் , பெங்களூரு

Story first published: Tuesday, June 11, 2024, 16:41 [IST]
Other articles published on Jun 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+