அனுபவம் ரொம்ப முக்கியம்.. முதல் உலக கோப்பையில் 174 பந்துகளில் 36 ரன்கள் குவித்த கவாஸ்கர்
லண்டன் : அனுபவம் மிக்கவர்கள் எவ்வாறு எதிர் கொள்வார்கள் என்பதை விளக்கும் நிகழ்வு.அனுபவம் கிரிக்கெட் ஆட்டத்திலும் கை கொடுக்கும். 1975 ஜூன் 7 ஆம் தேதி முதல் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம். லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் சந்தித்தன.
ஆட்டம் 60 ஓவர்களை கொண்டு இருந்தது.இந்த போட்டியின் இரண்டு குறிப்பிட்ட வீரர்களின் ஆடிய விதம், எடுத்த ரன்கள் , எப்படி அனுபவம் தன் பங்கை சரிவர செய்தது என்பது பற்றி பார்ப்போம்.முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தனர். டென்னிஸ்.அமிஸ் 137 ரன்கள் எடுத்தார்.

ஒரு நாள் பந்தயங்களில் ஆடிய அனுபவம் இல்லாத இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.60 ஓவர்களில் அவர்கள் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு எடுத்தது 132 ரன்கள் மட்டுமே.மேற்கு இந்திய தீவுக்கள் சுற்றுப்
பயணத்தில் 1971 ல் அறிமுக தொடரில் சாதித்த சுனில் கவாஸ்கர் இங்கும் அரிய ரிக்கார்டு ஏற்படுத்தினார்.
துவக்க வீரராக களம் இறங்கி கடைசி வரையில் நின்று, நிதானமாக ஆடி நாட் அவுட் பேட்ஸ்மனாக திகழ்ந்தார். இது ஒரு சாதனை.அந்த குறிபிட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் கவாஸ்கரின் இந்த இன்னிங்ஸ் ஆட்டம்.அடுத்த வீரர் மேற்கு இந்திய தீவுகளின் வீரர் ரோஹான் கன்ஹாய்.
இறுதி ஆட்டம். அதே லார்ட்ஸ் மைதானம். ஜூன் 21, 1975.மேற்கு இந்திய தீவுக்கள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று முதல் உலக கோப்பையை பெற்றது.அவர்கள் அணி கேப்டன் கிளைவ் லாயிடின் அதிரடி ஆட்டமும், சதமும் அந்த வெற்றிக்கு வித்திட்டது.
அதை விட தனது அனுபவத்தை முழுமையாக, அன்றைய மேட்சின்
சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப பயன் படுத்தி நின்று, நிதானமாகவும் ஆடி, அதே சமயத்தில் ரன்கள் குவித்து அணி கேப்ட ன் லாய்ட்டுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தது மூத்த அனு பவ வீரர்
ரோஹான் கன்ஹாய் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அவர் ஒரு முனையில் நின்று ஆடவே, கேப்டன் லாயிடுக்கு கூடுதல் தன்னம்பிக்கையும், தொந்தரவு ஏதும் இல்லாமல் அவர் ஸ்டைலில் விளையாடுவதற்கான தோதான சூழ்நிலையையும் அந்த சமயத்தில் ஏற்படுத்திக் கொடுத்து துணை நின்று ஆடிய ரோஹான் கன்ஹாயின் கிரிக்கெட் பற்றி சிந்தனை, அனுபவமும் மிகவும் உதவியது.
இருவரும் இன்னிங்சின் நடுவில் சேர்ந்து குவித்த ரன்கள் 149 மிக முக்கியமான ரன்கள் ஆகும். கன்ஹாய் எடுத்தது 55 ரன்கள். ( 8 பவுண்டரிகள் )
கன்ஹாய் ஒரு முனையில் நின்று ஆடி, ஓடி லாயிட் வேகமாக ஆட பெரிதும் உதவினார். கன்ஹாய் உடன் இருக்கிறார் என்ற எண்ணமே லாயிடுக்கு ஊக்கம் அளிப்பதாக செயல் பட்டு இருக்கும்.
(Served as a motivating factor)
முதல் மேட்ச்சில் இத்தகைய வகை ஆட்டங்களில் அதிக ரங்கள் குவிக்க வேண்டும் என்ற அனுபவம் இல்லாதது , 60 ஓவர்கள் நின்று 174 பந்துகள் ஆடியும் கவாஸ்கர் எடுத்த 36* பொருத்தமாக இல்லாதது மட்டும் அல்லாமல் வெற்றி பெற முடியாமலும் செய்து விட்டது.
அதே சமயம் இறுதி ஆட்டத்தில் ரோகன் கன்ஹாயின் அனுபவம் மிக்க ஈடுப்பாடு, செயல்பாடு தேவையான பலனை அளித்துள்ளது. அனுபவஸ்தர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள், பெற்ற ஞானம் (acquired wisdom ) ஆகியவற்றின் கலவை தேவையான சமயத்தில் கை கொடுக்கும்.
கவாஸ்கரும் பல டெஸ்டுக்கள், ஆட்டங்கள் ஆடி அனுபவம் பெற்ற பிறகு மிக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி சாதித்துள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications