பெங்களூரு : இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 65 டெஸ்ட்கள் விளையாடி 3383 ரன்கள் குவித்தார். சராசரி 31.32 ரன்கள் எடுத்தார். 23 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆனால் பெரிதும் எதிர் பார்க்கப் பட்ட இவர், அவருடைய முழு திறமையை டெஸ்டுகளில் வெளிப்படுத்தவே இல்லை என்று கூறலாம்.

முதல் தர கிரிக்கெட்டில் மூன்று தசாப்தங்களில்( decades) முந்நூறுக்கு மேல் ( triple hundred) எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் ஆவார். 1988,, 1997மற்றும் 2002 .
இவர் கிரிக்கெட்டில் 64000 ரன்களுக்கு மேல் எடுத்தவர். சராசரி 52.23 ரன்கள். இவர் 136 சதங்கள் முதல் தர கிரிக்கெட்டில் எடுத்தவர்.ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தது 6 சதங்கள் மட்டுமே.
1994-95 ல் இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரின் தனது முதல் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இங்கிலாந்து அணி கேப்டன் ஆதேர்ட்டோன்( Atherton) டிகிளர் செய்தார். இவர் எடுத்து இருந்த ரன்கள் 98.
இவர் ஜிம்பாவேயில் பிறந்த கிரேமே ஹிக்.( Graeme Hick)
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்ந்த ஜாக் ஹோப்ஸ் ( Jack Hobbs) தனது கிரிக்கெட் பேட் செய்வதற்கான மரத்தை அவரே செலக்ட் செய்து தரும் வழக்கம் கொண்டு இருந்தார்.
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
ஜாக்கி ஹென்றிக்ஸ் ( Jackie Hendriks) விக்கெட் கீப்பர், மேற்கு இந்திய டீமிற்காக 20 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
இவர் மூன்று முறை ஒரு பை ( bye) கூட விட்டு கொடுத்தது இல்லை. மூன்று முறையும் எதிரணியினர் 500 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த போதும்.
மேற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் குழுவின் தலை சிறந்த வேகப் பந்து வீச்சு பவுலர்களான வெஸ்லி ஹால்( Wesley Hall) சார்லி கிரிஃபித் ( Charlie Griffith) சூழல் பந்து வீசிய லான்ஸ் கிப்ஸ் ( Lance Gibbs) ஆகியோருக்கும் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார்.
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
கிரிக்கெட் பேட்கள் ( Cricket Bats).ஆரம்ப காலங்களில் கீழ் பகுதி வளைந்து இருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அவை அகலமாக இருந்தன. ஆண்டுகள் செல்ல செல்ல மாறுதல்கள் ஏற்பட்டு அகலம் குறைந்து கிரிக்கெட் பேட்டுகள் தற்பொழுதிய நிலைக்கு மாறியுள்ளன.
ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர் கள்
எம் ஜே கோபாலன் , டி ஈ ஸ்ரீனிவாசன், வெங்கட்ராமனா, ராபின் சிங்.
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
வாசுதேவன் பெங்களூரு