லண்டன் : கிரிக்கெட் சரித்திரத்தில் தொன்று தொட்டு விறுவிறுப்பான ஆட்டங்கள் ஆடப்பட்டுள்ளன, டெஸ்ட் மற்றும் முதல் தர ஆட்டங்களில். அதில் ஒன்று.
ஒரு முறை 1878 ஆம் வருடம் இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில்,
சோமேர்ஸ்ட் ( Somerset ) மற்றும் மிடில்செக்ஸ் ( Middlesex ) அணிகள் சந்தித்தன.
மழை காரணமாக ஆட்டம் வெகு தாமதமாக துவங்கியது.
இருந்தும் மொத்த மேட்ச்சும் 4 மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது. மிடில்செக்ஸ் அணி ஒரு இன்னிங்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர். முதலில் பேட்டிங் ஆடிய சோமேர்ஸ்ட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 35. இந்த இன்னிங்சில் நான்கு ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்தனர், எடுத்த ரன்கள் 8. மிடில்செக்ஸ் அணியின் இரண்டு பவுலர்களும் அட்டகாசமாக பந்துகள் வீசினார்கள். எதிரணி வீரர்களால் எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மேட்சில் இருவரும் அசத்திய பவுலிங்.
ஹெர்னே (Hearne ) 8
8 / 3 / 14 / 5
8.3 / 1 / 30 / 3
ட்ரோட் ( Trott ) 11
7 / 1 / 18 / 4
8 / 4 / 13 / 7
இந்த மேட்சில் மொத்தம் விளையாடப்பட்ட மூன்று இன்னிங்ஸ்கள் பேட்டிங்கில் மொத்தம் 14 பூஜ்ஜியங்கள் (0). அவற்றில் 12 சோமேர்ஸ்ட் வீரர்களது ஒவ்வொரு இன்னிங்சிலும் 6 , 6 வீரர்களின் தனிப்பட்ட ஸ்கோர் பூஜ்ஜியம் (0). இவற்றில் 4 வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் ரன் எதுவும் எடுக்க வில்லை.பேர் ( pair)
இரண்டு இன்னிங்சிலும் 3 ஆட்டக்காரர்கள் மட்டும் தான் இரட்டைப்பட ரன்கள் அடித்தனர்.
S M J வுட் ( 20 )
G B நிக்கோலாஸ் ( 18 )
A E நியூட்டன் (12)
இரண்டாவது இன்னிங்சில் 44 ரன்கள் எடுத்தனர் சோமேர்ஸ்ட் வீரர்கள்.
அவர்கள் ஆடிய ஒரு இன்னிங்சில்
மிடில்செக்ஸ் அணியினரது ஸ்கோர் 86.
சோமேர்ஸ்ட் பவுலர் டைலர் ( Tyler ) ஒரே இன்னிங்சில் எடுத்தது விக்கெட்டுகள் 8
ரோப்சன் ( Robson ) 2
19 / 7 / 35 / 2
டைலர் ( Tyler ) 8
17.2 / 3 / 42 / 8
அதிக ரன்கள் குவித்த
மிடில்செக்ஸ் ஆட்டக்காரர்கள்
C P போலே (20)
J T ஹெர்னே (15)
P F வார்னர் (14)
H B.ஹய்மன் (13)
J T ராவ்லின் (11)
------------------------------------------------
பல இரட்டை சகோதரர்கள் கிரிக்கெட் விளையாட்டில் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் ஒரு ஜோடி ரிப்பன் இரட்டை சகோதரர்கள். 29 ஏப்ரல் 1892 ல் பிறந்த இந்த ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டை சகோதரர்கள் ( identical twins ) மறைந்ததும் ஏப்ரல் மாதங்களில் தான்.ஆனால் வருடங்கள் வேறு. டூட்லே ( Dudley Rippon ) ஏப்ரல், 1963 (வயது கிட்டத்தட்ட 71) சிட்னி ( Sydney Rippon) ஏப்ரல் 1966 (வயது கிட்ட தட்ட 74). டூட்லே முதல் உலக மகா யுத்தத்தில் பங்கு பெற்றவர்.
சிட்னி வருமான துறையில் பணி புரிந்தவர். முதல் தர மேட்ச்சுகள் விளையாடியவர்கள். ஒரு முறை ஆட்டங்கள் ஆட டூட்லேவிற் கு விளையாடுவதற்கான அனுமதி அவர் பணி செய்த ராணுவ அதிகாரிகளிடமிருந்து கிடைத்தது.
ஆனால் சிட்னிக்கு கிடைக்கவில்லை, அவர் பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து. உடல் நலம் சரியில்லை என்று கூறி விட்டு வேறு இடத்தில் சென்று பயந்து ஆடினார். ஆனால் இவர் எடுத்த 92 மற்றும் 58* ரன்கள் விவரங்கள் செய்தி தாள் மூலம் வெளி உலகிற்கு தெரியவர மாட்டிக் கொண்டு விழித்தார்.
ஆனால் இவரது அலுவலகத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் தப்பித்தார். இவர் சோமேர்ஸ்ட் அணிக்காக விளையாடிய அந்த ஆட்டம்
க்லூஸ்ஸஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக. இவர் விளையாடிய சோமேர்ஸ்ட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
இந்த வேக பந்து வீரர், மேற்கு இந்திய தீவுக்கள் அணியை வழி நடத்தியவர் கேப்டனாக.
அறிமுக டெஸ்ட், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1984 ல் பெர்த் மைதானத்தில். இந்த டெஸ்டை மேற்கு இந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். லாரி கோம்ஸ் 127, ஜெப் டூஜான் 139. ஆட்ட நாயகர் மைக்கேல் ஹோல்டிங் விக்கெட்டுகள் 7. அதில் முதல் இன்னிங்சில் எடுத்தது 6 - 21. டெஸ்டில் ஜோ கார்னர் 5, மால்கம் மார்ஷல் 6.
டெஸ்டில் அறிமுகம் ஆன பவுலர் கோர்ட்னி வால்ஷ் ( Courtney Walsh ) முதல் இன்னிங்சில் பவுலிங் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை.பலோவ் ஆன் பெற்ற
ஆஸ்திரேலிய அணி ஆடிய இரண்டாவது இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசினார். 4 மெய்டன் ஓவர்கள். 43 ரன்கள் அளித்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் டெர்ரி ஆல்டர்மேன் 6, ரோட்னி ஹாக் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.வால்ஷின் கடைசி டெஸ்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிங்ஸ்டனில், 2001 ல். இந்த டெஸ்டிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றது.130 ரன்கள் வித்தியாசத்தில்.
இந்த டெஸ்டில் வால்ஷ் ஒவ்வொரு இன்னிங்சிலும் 3, 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக 132 டெஸ்டுக்கள். 519 விக்கெட்டுகள்.
205 ஒரு நாள் ஆட்டங்கள். 227 விக்கெட்டுகள்.
முதல் தர கிரிக்கெட் க்லூஸ்ஸஸ்டர்ஷய்யர் அணி ( Goucestershire )
ஜமைக்கா ( Jamaica ) அணி.
டெஸ்டுகளில் பேட்டிங்கில் இவர் எடுத்தது 936 ரன்கள். 29 கேட்சுகள்.
1995 ல் இவர் கேப்டனாக இருந்த பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் 13 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகர்.
7 / 37 & 6 / 18
இந்த டெஸ்ட் ஸ்கோர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி 660 / 5 டிக்ளர்
நியூசிலாந்து அணி
பால்லோ ஆன்
216 & 122
பிரைன் லாரா 147
ஜிம்மி ஆடம்ஸ் 151
ஜூனியர் முரே 101*
டெஸ்ட்களில் வீசிய பந்துகள் எண்ணிக்கை 30019
ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு நாள் பந்தயத்தில், ஸ்ரீ லங்கா அணிக்கு எதிராக வெற்றி பெற இவரது மிக சிறந்த பவுலிங் உதவியது.
மேற்கு இந்திய தீவுகள் அணி 248 / 5
ஸ்ரீலங்கா அணி 55
193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
வால்ஷின் பவுலிங்
4.3 / 3 / 1 / 5
அந்த 5 விக்கெட்டுகள் மேட்சை விரைவில் முடிக்க உதவியது.
1984 - 2001 மொத்தம் ஆடிய 337 மேட்ச்சுகளில் 54 பூஜ்ஜியங்கள் (0)
8 கேப்டன்கள் தலைமையில் விளையாடிய வால்ஷ் 22 டெஸ்டுகளில் கேப்டனாக திகழ்ந்துள்ளார்.
வாசுதேவன்,பெங்களூரு