Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1998ஆம் ஆண்டு உருவான காலே மைதானம்.. சுனாமியால் அழிந்து மீண்டு வந்த கதை

June, 1998.
நியூசிலாந்து, ஸ்ரீலங்கா அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட். இதுவே அந்த புதிய ஸ்டேடியத்தில் (79 வது ஸ்டேடியம் , டெஸ்டுக்கள் ஆடப்படும் மைதானம்.) காலேவில் (Galle Stadium) நடந்தேறியது.

மொத்தம் மூன்று இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடப்பட்ட இந்த டெஸ்டை வென்றது, ஸ்ரீலங்கா அணி ஒரு இன்னிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில்.

india national cricket team ind vs eng 1981 bangalore test cricket cricket history sports news interseting facts

குமார் தர்மசேனா முதல் இன்னிங்சில் பவுலிங்கில் அசத்தினார்.
6 / 72
அவரை விட அசத்தியவர் நிரோஷன் பண்டாராதில்லெக்கெ. விக்கெடுக்கள் 9
4 / 47 & 5 / 36
முரளீதரன் இரண்டாவது இன்னிங்சில்
3 / 24

மஹேல ஜெயவர்தனே சதம் எடுத்தார். இவர் எதிர் கொண்டது பந்துக்கள் 278. ( 18 x 4 )
ரன்கள் 167. இது இவருடைய முதல் சதம், டெஸ்டுக்களில்.
நியூசிலாந்து அணியில் அதிக பட்ச ரன்கள் குவித்த வீரர் நாதன் அஸ்ட்லே 53.
அவர்கள் பவுலிங்கில் டேனியல் வெட்டோரி
4 / 88

இந்த டெஸ்டில் எடுக்கப்பட்ட ரன்களில் சில ஸ்வாரசியமான விவரங்கள்.

0 ( 5 ) 1 ( 2 ) 2 ( 2 ) 3 ( 2 ) 4 ( 2 ) 9 ( 2 )* 10 ( 3 ) 11 ( 2 )* 12 ( 2 ) 13 ( 2 ) 14 ( 1 ) 16 ( 1 ) 17 ( 1 )* 21 ( 1 ) 23 ( 1 )
30 ( 1 )
உபரி ரன்கள் *

இந்த ஸ்டேடியம் 2004 சுனாமியில் அழிந்து விட்டது. 2007 ல் புதுபிக்கப் பட்டது. அதில் முக்கிய பங்களிப்பு கொடுத்தவர், மறைந்த ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற லெக் ஸ்பின் பவுலர் ஷேன் வார்னே. இந்த ஸ்டேடியத்தின் மணி கூண்டு ( Clock Tower) ஒரு மைல் கல் ஆகும்.

இந்த டெஸ்டின்
ஸ்கோர்
நியூ ஜிலாந்து 193 & 114
ஸ்ரீ லங்கா 323
ஆட்ட நாயகர்
மஹேல ஜெயவர்தனே.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஜான் ரீட் ( John Reid )
நியூ ஜிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்.

58 டெஸ்டுக்கள்.ரன்கள் 3428. சதங்கள் 6. அரை சதங்கள் 22. கேட்சுக்கள் 43. ஸ்டும்பிங் 1.
விக்கெட்டுக்கள் 85.

ஒரு சிறந்த பேட்ஸ்மன். வேக பந்து மற்றும் ஆப் பிரேக் கலந்து வீசும் திறமை பெற்றவர். விக்கெட் கீப்பர் ஆகவும் பணி புரிந்துள்ளார்.
நியூசிலாந்து அணியை கேப்டனாகவும் வழி நடத்தியவர்.

50 மேட்ச்சுகளில் மேட்ச் ரெஃபரியாக திகழ்ந்தவர்.

இவர் 1961- 62 தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தின் பொழுது 1915 ரன்கள் எடுத்து சாதித்தார். இதில் 7 சதங்கள் அடங்கும்.
34 டெஸ்டுக்களில் கேப்டனாக இருந்துள்ளார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இரண்டு விக்கெட் கீப்பர்கள், முதல் தர மேட்ச்சுக்களில் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது பவுலிங் செய்ய கிடைத்த வாய்ப்புகளில் ஹாட்ரிக் விக்கெட்டுக்களை கைபற்றி அசத்தியுள்ளனர்.

ஒருவர் ஆலன் ஸ்மித். வார்விக்க்ஷய்யர் ( Warwickshire ) அணிக்காக விளையாடிய இந்த விக்கெட் கீப்பர் பவுலிங்கில் ஹாட்ரிக் எடுத்தார் எஸ்ஸக்ஸ் ( Essex ) அணிக்கு எதிராக, 1965 ல்.
மற்றவர் நமது நாட்டு வீரர் ப்ரோபிர் குமார்
" கொகான் " சென் என்பவர்.
1954 - 55 ல் ஒரிசா அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

ப்ரோபிர் குமார் சென் விளையாடிய டெஸ்டுக்கள் 14. இவர் தான் முதல் வங்காளி, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.

1947 - 48 ல் ஆஸ்திரேலி ய சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெற்று இருந்தார்.

01.01.1948 புது வருட தினத்தன்று மெல்போர்ன் டெஸ்டில் தனது அறிமுக ஆட்டத்தை ஆடினார்.

5 வது டெஸ்டில் (மறுபடியும் மெல்போர்ன் மைதானத்தில் ) ஆஸ்தி ரேலிய அணி 575 ரன்கள் எடுத்துயிருந்த போதிலும், இவர் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த டெஸ்டில் 4 பைக்கள் (byes) மட்டுமே. 4 கேச்சுக்கள் பிடித்தார்.

டான் ப்ராட்மன் அவருடைய கிரிக்கெட் சரித்திரத்திலேயே, ஒரே ஒரு முறை தான் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆகியுள்ளார்.
அப்படி அவரை ஸ்டம்பிங் செய்த பெருமைக்கு உரியவர் இந்த
ப்ரோபிர் குமார் சென் ஆவார். தெற்கு ஆஸ்தி ரேலியஅணிக்கு எதிராக நான்கு நாட்கள் ஆட்டத்தில் இந்த நிகழ்வு நடைப் பெற்றது, இரண்டாவது இன்னிங்சில், வினு
மன்காட் வீசிய பந்தில் ஸ்டம்பிங் செய்தார்.
ப்ராட்மன் ரன்கள் 12.

இந்த மேட்சில் மொத்தம் சதங்கள் 5.

ஆர் கிரைக் 100 , ரிச்சர்ட்
நீயஹுயூஸ் 137 ,
கேப்டன் டான் ப்ராட்மன் 156
கேப்டன் லாலா அமர்நாத்
144 , வினு மன்காடபட்கர் 116*

விஜய் ஹாசரே 95 , லாலா அமர்நாத் 94*

விக்கெட்டுக்கள்
வினு மன்காட் 7 , சந்து சர்வாத்தே 4 , டாட்டு பட்கர் 4,
ஜெப் 4 ,நோப்லெட் 5

இந்த மேட்ச் டிராவில்
முடிவு பெற்றது.

ஒரே டெஸ்டில் அதிக பட்ச ஸ்டம்பிங்கள் செய்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்,
ப்ரோபிர் குமார் சென். 5 ஸ்டம்பிங்கள்.

இந்த நிகழ்வு
இங்கிலாந்து அணிக்கு எதிரான அன்றைய மெட்ராஸ் டெஸ்டில், 1952 ஆம் வருடம்.

இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அறிமுக டெஸ்ட்
ஆஸ்திரேலி lய அணி (1948)

கடைசி டெஸ்ட் பாகிஸ்தான் அணி ( 1952 )

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, June 6, 2024, 17:34 [IST]
Other articles published on Jun 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+