For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் இந்தியாவுடன் விளையாடிய டெஸ்ட்!ஒரே நேரத்தில் 2 டெஸ்ட் ஆடிய இங்கிலாந்து

பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட்டின் துவக்க பந்தை எதிர் கொண்ட சார்லஸ் பேனர்மன், சகோதரர் அலெக் பேனர்மன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். 28 டெஸ்டுக்கள் ஆடி 1108 ரன்கள் குவித்துள்ள இவர் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. ஆனால் இவருடையை சகோதரர்தான் டெஸ்ட் சரித்திரத்தின் துவக்க டெஸ்டிலேயே சதம் அடித்து சாதித்தவர். இரண்டு சகோதரர்களும் சேர்ந்து டெஸ்டுக்கள் விளையாடியுள்ளார்கள்.

1880 - 1893 கால கட்டத்தில் 5 சுற்றுப் பயணங்களில் இங்கிலாந்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடியுள்ளார்.நின்று நிதானமாக ஆடக் கூடியவர். ஒரு முறை ஒரு முதல் தர கிரிக்கெட் மேட்சில் 45 ரன்கள் எடுக்க 5 மணி நேரம் எடுத்துக் கொண்டார். மிக சிறந்த பீல்டர். மிக வேகமாக ஓடி பந்துக்களை தடுப்பத்திலும், கேட்சுக்கள் பிடிப்பத்திலும் வல்லவர்.

cricket titbits - What happened when Don bradman faced India in test

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நெவில்லே கினோஸ், என்ற பவுலர்
இங்கிலாந்து அணிக்காக, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டே இரண்டு டெஸ்டுக்கள் விளையாடினார். அவரது பங்களிப்பு மிகவும் சுமாராக
அமைந்தது. ஆனால் 88 முதல் தர கிரிக்கெட் மேட்ச்களில், சர்ரே அணிக்காக சிறப்பாக பந்துக்கள் வீசி 411 விக்கெடுக்கள் எடுத்துள்ளார்

இவர் பவுலிங் போட கிட்ட தட்ட டீ ப் மிட் ஆப் பகுதியில் இருந்து ஓடி வந்து பந்துக்கள் வீசியதால், ஆட்டக்காரர்களுக்கு இவர் வீச போகும் பந்து பற்றி நிர்ணியிக்க திணறுவார்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரே சமயத்தில் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்டுக்கள் விளையாடின.
ஒரு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினர்.
மற்றும் ஒரு இங்கிலாந்து அணி, அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் ஆடினார்கள்.1892 ஆம் வருடம் மார்ச் மாதம்.

வால்டர் ரேட் , தலைமையில் ஆன இங்கிலாந்து அணி, வில்லியம் மில்டன் தலைமையில் ஆன தென் ஆப்பிரிக்க அணியை எதிர் கொண்டது. கேப் டவுன் டெஸ்டில்.
இந்த டெஸ்டில் மூன்று ஹெர்னே சகோதரர்கள் விளையாடினார்கள். அலெக், ஜார்ஜ்,
இருவரும் இங்கிலாந்து. அணிக்கு விளையாடினார்கள்.

அதே சமயம் அதே டெஸ்டில், தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாடியவர் பிரேங்க் ஹெர்னே. இந்த மூன்று சகோதரர்களின் உறவினர் ( cousin ) ஜான் தாமஸ் ஹெர்னே, இங்கிலாந்து அணிக்காக
விளையாடினார்.

பிரேங்க் ஹெர்னே, தென் ஆப்பிரிக்கா அணிக்காக அறிமுக ஆட்டக்காரராக களம் இறங்கினார் . இதற்கு முன்னால் இவர் இங்கிலா ந்து அணிக்காக டெஸ்டுக்கள் விளையாடியவர். ஜெ ஜெ பெற்றிஸ் , முர்டோச் இருவரும் இங்கிலாந்து அணியில் அறிமுக ஆட்டக்கார்களாக விளையாடினார்கள்.

முன்னதாக, இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டுக்கள் விளையாடியவர்கள்.
குறிப்பாக முர்டோச் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.
இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் கீப்பிங் செய்தார்.

ஜெ ஜெ பெற்றிஸ் 13 விக்கெட்டுக்கள் எடுத்தார் இங்கிலா ந்து அணிக்காக.

6 / 54. & 7 / 37

டெஸ்டின் ஒரே சதம் எடுத்தது இங்கிலாந்து அணி வீரர் ஹென்றி வுட் 134 *

இங்கிலாந்து அணி ஸ்கோர் 369

தென் ஆப்பிரிக்க அணி

97 & 83

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் சதம் அடித்த முதல்விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் ஹென்றி வுட்.இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

டக் ரிங் ( Doug Ring ) என்ற லெக் ஸ்பின் கூக்ளி பவுலர்
ஆஸ்திரேலிய அணிக்காக 13 டெஸ்டுக்கள் விளையாடி, 35 விக்கெட்டுக்கள் எடுத்தவர்.

இவர் டான் ப்ராட்மன் தலைமையில்
ஆஸ்திரேலிய அணி, 1948 ஆம் வருடம் இங்கிலாந்திற்கு சென்ற புகழ் பெற்ற 'இன்வின்சிபில்ஸ் அணி' ( Invincibles Team ) யில் இடம் பெற்று இருந்தார்.

அந்த சுற்றுப் பயணத்தில் ஒரே ஒரு டெஸ்டில் ( டான் ப்ராட்மனின் கடைசி டெஸ்ட் ) விளையாடினார். அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு 60 ஓவர்களுக்கு பிறகு புது பந்து ( New Ball ) எடுக்கும் முறை இருந்ததால், ரிங் போன்ற ஸ்பின் பவுலர்கள் தொடர்ந்தார் போல் பந்து வீசும் வாய்ப்பு குறைவாகவே இருந்தன.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை.
இரண்டாவது இன்னிங்சில் 28 ஓவர்கள் வீசினார். 13 மெய்டன். 44 ரன்கள் அளித்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

டக் ரிங், விளையாடிய கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1953 ல் லார்ட்ஸ் மைதானத்தில். டிரா ஆன இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் எடுத்தார். ( 2 - 84)

டக் ரிங் அறிமுகம் ஆனது 1948 ல் பிப்ரவரி மாதம், இந்திய அணிக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில்.

இந்த டெஸ்டில் இவர் எடுத்தது 6 விக்கெட்டுக்கள்.
3 - 103 & 3 - 17

ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 177 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதல் இன்னிங்சில் இந்திய அணியில் 8 மற்றும் ஆஸ்திரேலிய அணியில் 7 வீரர்களும் பவுலிங் செய்தனர்.இந்திய அணி பலோவ் ஆன் பெற்றது.

நீல் ஹார்வே 153 ரன்கள், வினு மன்காட் 111 ரன்கள் குவித்தனர்.

பில் பிரவுன் 99
ரன்களில், ரன் அவுட் ஆனார்.

கேப்டன் டான் ப்ராட்மன்
57 ரன்கள் எடுத்த நிலையில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் தொடர்ந்து பேட்டிங் செய்யவில்லை.

ஸ்கோர்
ஆஸ்திரேலிய அணி
575 / 8 டிக்ளர்
இந்திய அணி
331 & 67

டக் ரிங் இங்கிலாந்து (2 ) இந்தியா ( 1 ) மேற்கு இந்திய தீவுக்கள் ( 5 ) தென் ஆப்பிரிக்கா ( 5 ) டெஸ்டுக்கள் விளையாடியவர்.

2003 ஆம் வருடம் 84 வயதில் மறைந்த இவர், முதல் தர கிரிக்கெட் விளையாடியது விக்டோரியா அணிக்காக.

ஆஸ்திரேலிய வீரர்
க்ளேம் ஹில், டெஸ்டுகளில் 5 முறை 90 லிருந்து 99 ரன்களுக்குள் அவுட் ஆனவர். இவர்
ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழி நடத்தியவர். இடது கை பேட்ஸ்மன். மிக சிறந்த பீல்டர். கிரிக்கெட் சரித்திரத்தின் முதல் டெஸ்ட் முடிவடையும் பொழுது பிறந்தவர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1889 ல் தென் ஆப்பிரிக அணி தங்களது முதல் துவக்க டெஸ்டை போர்ட் எலிசெபத்தில் விளையாடினார்கள்,. இங்கிலாந்து அணிக்கு எதிராக. இங்கிலாந்து அணி இரண்டு நாட்களுக்குள் வெற்றி பெற்றது, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில்.
டெஸ்ட் சரித்திரத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுக்களை எடுத்தவர் ஜாக் ஹெர்னே.
இவர் இந்த வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

க்ளேம் ஹில் போல்ட் ஹெர்னே 0

சிட் கிரேகிரி கேட்ச்
பிடித்தது
மக்லாரேன் 0

மோன்டி நோபில்
கேட்ச் பிடித்தது
ரஞ்சித்சிங்ஜி 0

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆன டெஸ்டில். 1899.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, March 22, 2024, 0:05 [IST]
Other articles published on Mar 22, 2024
English summary
cricket titbits - What happened when Don bradman faced India in test கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் இந்தியாவுடன் விளையாடிய டெஸ்ட்!ஒரே நேரத்தில் 2 டெஸ்ட் ஆடிய இங்கிலாந்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+