Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டெஸ்டே இந்தியா கூட தான்.. ஜிம்பாப்வே விளையாடிய முதல் போட்டியில் என்ன நடந்தது?

பெங்களூர் : பிரேங்க் ஹய்ஸ் (Frank Hayes ) என்ற இங்கிலாந்து வீரர் அறிமுக ஆட்டத்தில் சதம் எடுத்தார், மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக 1973 ல் ஓவல் மைதானத்தில்.
இவர் அறிமுக டெஸ்டில் எடுத்தது 106* நாட் அவுட்.

இந்த டெஸ்டில் கிளைவ் லாய்ட் 132. ஜியோப் பாய்காட் 97, ஆல்வின் கலிச்சரண் 80
பவுலிங்
ஜியோப் ஆர்னோல்ட் 8
5 / 113 & 3 / 49
கீத் பாயிஸ் 11
5 / 70 & 6 / 77

india national cricket team ind vs eng 1981 bangalore test cricket cricket history sports news interseting facts

இந்த டெஸ்ட், மேற்கு இந்திய தீவுக்கள் அணி வென்ற ரன்கள் வித்தியாசம் 158.
பிரேங்க் ஹய்ஸ் விளையாடிய மொத்த டெஸ்டுக்ரன்கள் 9. எல்லா டெஸ்டுக்களும் மேற்கு இந்திய தீவுக்களுக்கு எதிராக மட்டும் தான்.
9 டெஸ்டுக்களில் இவரது மொத்த ரன்கள் 244. ஒரே ஒரு சதம் ( 106* )

9 டெஸ்டுக்களில் 7 கேட்சுக்கள், 27 பவுண்டரிகள், 1 சிக்ஸர்.
கடைசி டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில், 1976.இந்த டெஸ்டிலும் மேற்கு இந்திய தீவுக்கள் அணி வென்றது. இந்த முறை 55 ரன்கள் வித்தியாசத்தில்.
கடைசி இன்னிங்சில்பிரேங்க் ஹய்ஸ் ரன் எடுக்கவில்லை.

இந்த டெஸ்ட் நான்கு சதங்களை கண்டது.
ராய் பிரெட்ரிக்ஸ் 109
கார்டோன் கிரீனிட்ஜ் 115

டோனி க்ரெய்க் 116
ஆலன் நாட் 116

பவுலிங் விக்கெட்டுக்கள்

ஆண்டி ராபர்ட்ஸ் 6
பாப் வில்லீஸ் 8
ஜான் ஸ்னோ 6

பிரேங்க் ஹய்ஸ் 6 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கு பெற்றவர்.
லங்கஷய்யர் அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்.

1977 ல் ஒரு மேட்சில் ஒரு ஓவரில் இவர் எடுத்த ரன்கள்
6,4,6,6,6,6.
அந்த ஓவரை போட்ட பவுலர் மால்கம் நாஷ். (ஆம் இந்த பவுலரின் ஓவரில் தான் முன்னதாக ஒரு முதல் தர மேட்சில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டன் காரி சோபர்ஸ் 6 பந்துக்களையும் சிக்ஸர்கள் அடித்து ரிக்கார்டு ஏற்படுத்தினார்.)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1992 ல் ஜிம்பாப்வ்வே அணி தங்களது அறிமுக கிரிக்கெட் டெஸ்ட் விளையாடினார்கள், ஹராரே மைதானத்தில்.இந்த மேட்ச் இந்திய அணிக்கு எதிராக விளையாடப்பட்டது.
ஜிம்பாப்வ்வே அணி பேட்டிங் விளையாட தேர்வு செய்தனர். அவர்களது அணி கேப்டன் , டேவ்
ஹௌகஃடோன் ( Dave Houghton) அறிமுக டெஸ்டில் சதம் எடுத்து அசத்தினார். 121 ரன்கள் ( 322 பந்துக்கள். 15 பவுண்டரிகள்)

இந்திய அணியின் சஞ்சய் மஞ்ரேக்கர் 422 பந்துக்கள் எதிர் கொண்டு, 7 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்த ரன்கள் 104.

அதிக வயதான ஜான் ட்ரைகோஸ் என்ற ஜிம்பாப்வ்வே வீரர் அவர்களது அணியன் துவக்க டெஸ்டிலேயே 5 விக்கெட்டுக்கள் எடுத்தார். ( 5 - 86 )

இவர் ஒருவர் தான் முன்பே டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டவர். மற்ற அணியில் களத்தில் ஆடிய 10 வீரர்களுக்கும், அணியின் இந்த துவக்க டெஸ்ட், அறிமுக டெஸ்ட் ஆக அமைந்தது.

ஜான் ட்ரைகோஸ், மார்ச் 1970 ல் தனது முந்தைய டெஸ்ட் , தென் ஆப்பிரிக்கா அணிக்காக, போர்ட் எலிசெபெத் டெஸ்டில் விளையாடினார். அடுத்த இந்த ஹராரே டெஸ்டில் தோன்றினார், 22 வருடங்கள் 222 நாள்கள் இடைவெளிக்கு பிறகு. இது ஒரு உலக ரிகார்டு
ஆயிற்று.

இந்த டெஸ்டின் ஸ்கோர்
ஜிம்பாப்வ்வே
456 & 146 / 4
இந்தியா
307
டிராவில் முடிவு பெற்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த மூன்றாவது டெஸ்ட் இந்திய அணிக்கும், தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையில் 1992 டிசம்பரில் இந்திய அணி சுற்றுப் பயணத்தின் பொழுது நடைப் பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ச் ஸ்கோர் 212.

கேப்டன் முகம்மது அசாரூதீன் ரன்கள 60

இரண்டாவது இன்னிங்ஸ் 215.
கபில் தேவ் 129.

தென் ஆப்ரிக்க அணி
முதல் இன்னிங்ச் ஸ்கோர் 275
ஹன்சி க்ரோனியர் 135
இரண்டாவது இன்னிங்ஸ் 155 / 1
கேப்டன் கேப்லர்
வெஸல்ஸ் 95*

பவுலிங்
அலன் டொனால்ட்
விக்கெட்டுக்கள் 12

விக்கெட் கீப்பர் டேவிட் ரிச்சர்ட்சன் பிடித்த கேட்சுக்கள் 9 ( 4 & 5 )
க்ரைக் மதியூஸ், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, அணில் கும்ப்ளே ஆகிய 4 வீரர்களும் தலா எடுத்த ஒரு இன்னிங்ஸ் ரன்கள் 17.
தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, June 1, 2024, 21:22 [IST]
Other articles published on Jun 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+