பெங்களூரு : பாப் மாஸ்ஸி ( Bob Massie) என்ற ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர், லார்ட்ஸ் டெஸ்ட் மேட்ச்சில் 1972 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்.அறிமுக டெஸ்டில் பவுலிங்கில் சாதனை புரிந்தார்.இந்த அறிமுக டெஸ்டில் இவர் கைப்பற்றியது 16 விக்கெட்டுக்கள்.
முதல் இன்னிங்ஸ்
32.5 / 7 / 84 / 8
இரண்டாவது இன்னிங்ஸ்
27.2 / 9 / 53 / 8

இவரது இந்த அபார பந்து வீச்சு ஆஸ்திரேலிய டீம் இந்த டெஸ்டில்
வெற்றி பெற பெரிதும் உதவியது.இவ்வளவு அருமையாக டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய இவர் விளையாடியது மொத்தமே 6 டெஸ்டுக்கள் தான்.
இவர் எடுத்த மொத்த டெஸ்ட் விக்கெட்டுக்கள்
31.
இவர் ரேடியோவில் கமெண்டரி கூறுபவராகவும் இருந்துள்ளார்.
இவர் அறிமுகம் ஆன அதே டெஸ்டில், அறிமுகம் ஆன மற்றும் ஒரு வீரர் ராஸ் எட்வர்ட்ஸ்.
இவர் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மன்.இவருக்கு இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்க்சில், ஓபன் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அட்டகாசமாக ஆடி 170 * ரன்கள் குவித்து அசத்தினார். 290 பந்துக்கள் ஆடி, 13 பவுண்டரிகள் அடித்தார்.
அடுத்த டெஸ்டில் லீட்ஸ் மைதானத்தில் ஒப்பனிங் செய்த இரண்டு இன்னிங்சிலும் இவர் எடுத்தது பூஜ்ஜியம் (0).இரண்டு இன்னிங்க்சிலும் இவர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தவர், இங்கிலா ந்து டீம் விக்கெட் கீப்பர் ஆலன் நாட். அதோடு சரி, ராஸ் எட்வர்ட்ஸ் டெஸ்டுகளில் ஒப்பனிங் செய்வது.
விக்கெட் கீப்பிங் தவிர சிறந்த கவர் பீல்டராக திகழ்ந்தவர்.
இரண்டு டெஸ்ட் சதங்கள் எடுத்த இவர், 1975 ல் லார்ட்ஸ் டெஸ்டில் 99 ரன்களுக்கு அவுட் ஆனவர்.20 டெஸ்டுக்கள் ஆடிய ராஸ் எட்வர்ட்ஸ் எடுத்த. ரன்கள் 1171. சராசரி 40.37
ஒன்பது ஒரு நாள் பந்தயங்களில் பங்கு பெற்ற இவரது கடைசி ஒரு நாள் மேட்ச், முதல் ஒரு நாள் உலக கோப்பை இறுதி ஆட்டம் 1975 லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள்
டீம்மிற்க்கு எதிராக.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராய் பிரிடிரிக்ஸ் ( Roy Fredericks) மேற்கு இந்திய தீவுகள் டீமிற்காக ஒப்பனிங் பேட்ஸ்மன் ஆக விளையாடியவர்.சுமார் 9 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.
59 டெஸ்டிகளில் இவர் குவித்தது 4334 ரன்கள்.
சராசரி 42.498 சதங்கள், 26 அரை சதங்கள். 62 கேட்சுக்கள் பிடித்துள்ளார்.
இவர் 15 வது டெஸ்டில் 1972 ஆம் ஆண்டு நியூ ஸிலாந்து டீமிற்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்த இடது கை பேட்ஸ்மன் மிகவும் தையரியமாக ஹூக் ஷாட் ஆடுவார்.
ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பெர்த் மைதானத்தில், இவர் எடுத்த 169 ரன்களுக்கு தனி மதிப்பும், இடமும் இன்றும் உள்ளது.இந்த புகழ் பெற்ற பெர்த் டெஸ்ட் டிசம்பர் மாதத்தில் 1975 ஆம் ஆண்டு நடைப் பெற்றது.இந்த டெஸ்டில் இயன் சபெல் 156, க்ளைவ் லாயிட் 149, ராய் பிரிடிரிக்ஸ் 169 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய டீமின் ஸ்கோர் 329 & 169மேற்கு இந்திய தீவுகள் டீம் 585 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுகள் டீம் ஒரு இன்னிங்ஸ் 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
ராய் பிரிடிரிக்ஸ் 71 பந்துக்களில் இந்த மேட்சில் சதத்தையும், 145 பந்துக்களில் 169 ரன்களையும் குவித்தார் ( 27 x 4 & 1 x 6)
இவர் எதிர் கொண்டது அன்றைய கால கட்டத்தில், தலை சிறந்த மிகவும் வேக பந்துக்களை வீசிய டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்ஸன் ஜோடியை.உடன் பந்து வீசிய காரி கில்மோர், ஆஷலே மல்லெட், மேக்ஸ் வாக்கர் ஆகியோரும் சிறந்த பவுலர்கள்.
இருந்தும், இவர் ஆடிய ஆட்டத்தின் முன்பு பந்துக்கள் நாலா பக்கமும் பாயந்து சென்றன.
முதல் டெஸ்டில் இவருக்கு ஒப்பனிங் ஜோடியாக களம் இறங்கிய, கார்டான் கிரீனிட்ஜ் இரண்டு இன்னிக்சிலும் பூஜ்ஜியம் (0) எடுத்ததினால் அவரை இந்த பெர்த் டெஸ்டில் சேர்க்கவில்லை.பிரிடிரிக்ஸ் உடன் ஒபனிங் செய்ய மற்ற வீரர்கள் தயங்கினர், லில்லி, தாம்ஸன் அதி வேக பந்துக்களை எதிர் கொள்ள. ஸ்பின் பவுலர் லான்ஸ் கிப்ஸ் சம்மதித்தார் ஓபன் செய்ய. ஆனால் பிரிடிரிக்ஸ் உடன் பேட்டிங் ஓபன் செய்தவர் பெர்னார்ட் ஜூலியன்.இந்த டெஸ்ட் மேட்ச்சில் ஆண்டி ராபர்ட்ஸ் மிக நேர்த்தியாக பந்து வீசினார்.
மொத்தம் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸ்
13 / 1 / 65 / 2
இரண்டாவது இன்னிங்ஸ்
14 / 3 / 54 / 7
( அந்த கால கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற டெஸ்ட் மேட்ச்சுகளில் ஒரு ஓவருக்கு 8 பந்துக்கள் வீச பட்டு வந்தன.)
இவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில், லில்லி வீசிய பந்தை சிக்ஸர் அடித்தார். பந்து மைதானத்தை தாண்டி விழுந்தது. ஆனால் அவர் ஸ்டம்பில் விழ, ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆகி விட்டார்.
முதல் டெஸ்டில் 76 & 47 ரன்கள்
கடைசி டெஸ்டில் 6 & 83
ரன்கள்
இவர் கோச்சாகவும் பணி புரிந்தவர்.
இவர் ஜூனியர் மந்திரியாகவும் இருந்தவர்.
2000 ஆம் ஆண்டு 57 வயதில் மறைந்தார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த குறிப்பிட்ட டெஸ்ட் மேட்ச் மொத்தம் 7 சதங்களை கண்டது.
இதில் 2 இரட்டை சதங்கள், 5 சதங்கள்.
இங்கிலாந்தின் , ஜூன் மாதம், 1938 ல் ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து டீம் களுக்கு இடையே நடைப் பெற்றது.
இங்கிலாந்து
சார்லி பார்நெட் 126
லென் ஹட்டன் 100
எட்டி பைன்டர் 216
டென்னிஸ்
காம்டன் 102
ஆஸ்திரேலியா
ஸ்டான் மக்கபே 232
பில் பிரவுன் 133
டான் பிராட்மன் 144
இந்த டெஸ்டில் மொத்தம்
167 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்தனர்.
இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸ்
658 / 8 டிக்ளர்
ஆஸ்திரேலியா
முதல் இன்னிங்ஸ்
411
இரண்டாவது இன்னிங்ஸ்
427 / 6 டிக்ளர்
மேட்ச் ட்ராவில் முடிந்தது.
வாசுதேவன், பெங்களூரு