கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக திகழ்ந்த ஹனிப் முஹம்மது, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக புகழ் பெற்றவர். இவர் வலது மற்றும் இடது கையினால் பந்து வீசும் திறமை படைத்தவர். நன்றாக விக்கெட் கீப்பிங்கும் செய்வார். இவர் ஒரு டெஸ்ட் இனிங்க்சில் எடுத்த அதிக பட்ச ரன்கள் 337.
மேற்கு இந்திய தீவுகள் சுற்று பயணத்தில் அவர்கள் மண்ணில் இந்த மூன்று சத சாதனை படைத்த ஒரே ஆசிய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் எடுத்துக் கொண்டது 970 நிமிடங்கள். அதுவும் குறிப்பாக பாகிஸ்தான் அணி பாலோ ஆன் பெற்று டெஸ்டின் மூன்றாவது (பாகிஸ்தானின் இரண்டாவது) இன்னிங்சில் எடுத்து அசத்தினார்.24 பவுண்டரிகள் எடுத்தார். இந்த நிகழ்வு பிரிட்ஜ் டவுன் டெஸ்டில் ( ஜனவரி, 1958 ல்)டிராவில் முடிந்தது இந்த டெஸ்ட்.

1959 ஜனவரியில் ஒரு முதல் தர மேட்ச்சில் மற்றும் ஒரு சாதனை படைத்தார். கராச்சியில், பகவால்பூர் அணிக்கு எதிராக ஹனிப் முஹம்மது எடுத்த ரன்கள் 499. இவர் விளையாடியது கராச்சி அணிக்காக. ரன் அவுட் ஆனார். 64 பவுண்டரிகள். கராச்சி அணி ஒரு இன்னிங்ஸ் 479 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹனிப் முஹம்மது 55 டெஸ்ட்டுகளில் 3915 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 15 அரை சதங்கள். 40 கேட்சுகள் பிடித்துள்ள இவர் டெஸ்ட்டுகளில் அடித்தது இரண்டே இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே.
238 முதல் தர மேட்ச்சுகளில் எடுத்த ரன்கள் 17059. 55 சதங்கள். 66 அரை சதங்கள். 178 கேட்சுகள்.12 ஸ்டம்பிங்கள்.
இரண்டு இன்னிங்க்சிலும் சதங்கள் எடுத்த டெஸ்ட், இங்கிலாந்து அணிக்கு எதிராக. 1962 ல் டாக்கவில். 111 & 104
1964 ல் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் சதம். எடுத்து, அடுத்த இன்னிங்சில் சதம் எடுக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்டார்.
104 & 93
இந்த டெஸ்டில் இவர் ஒப்பானராக விளையாடவில்லை.
வித்தியாசமாக இந்த டெஸ்டில் பிற வீரர்கள் எடுத்த இரட்டைப் பட ரன்கள்
11, 33, 55, 88
பாகிஸ்தான் பவுலர் ஆரிப் புட் எடுத்த விக்கெட்டுகள் 7
6 / 89 & 1 / 29*
டெஸ்டின் முடிவில்,
ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ், ஸ்கோர் 88 / 2
இந்திய அணிக்கு எதிரான அன்றைய பம்பாய் பிரபோர்னே ஸ்டேடியத்தில் ஹனிப் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி குவித்த ரன்கள் 160. ஆனால் இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணியின் வேக பந்து வீசிய ராமகன்ட் தேசாய் பந்தில் , ஸ்லிப் பீல்டர் உம்ரீக்கர் அபாரமாக கேட்ச் பிடிக்க அவுட் ஆனார், ரன் எதுவும் ( 0 ) எடுக்காமல்.இந்த டெஸ்டில் தான் ராமகன்ட் தேசாய் 4 விக்கெட்டுகள் எடுத்ததை தவிர, 85 அபார ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் நானா ஜோஷியுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 149.
ஹனிப் முஹம்மது 11 டெஸ்ட்டுகளில் கேப்டனாக வழி நடத்தியுள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை. அது தவிர 6 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.
இவரையும் சேர்த்து 5 சகோதரர்கள். நான்கு நபர்கள் டெஸ்ட் விளையாடி உள்ளனர். வாசிர், ஹனிப், முஷ்டாக், சாதிக். மற்றும் ஒரு சகோதரர் ராயிஸ் ஒரு மேட்ச்சில் பாகிஸ்தான் அணிக்காக 12 வது ஆட்டக்காரராக பங்கு பெற்றுள்ளார்.
ஹனிப் முஹம்மது 1934 ல் இந்தியாவில் பிறந்த இவர், 81 வது வயதில் 2016 ஆம் வருடம் பாகிஸ்தானில் மறைந்தார்.
இவர் ' லிட்டில் மாஸ்டர் ' என்று புகழ் பெற்று இருந்தார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சி பி ப்ரை ( C B Fry ) என்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக திகழ்ந்தவர், அவர் விளையாடிய கால கட்டத்தில் ஒரு சிறந்த ஆட்டக்காரராக கருதப்பட்டார். 26 டெஸ்ட்டுகளில், இவர் எடுத்த ரன்கள் 1223.சதங்கள் 2. அரை சதங்கள் 7. கேட்சுகள் 17.
394 முதல் தர ஆட்டங்களில் ரன்கள் 30886. சதங்கள் 94. அரை சதங்கள் 124. கேட்சுகள் 239.
1896 ல் அறிமுக டெஸ்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடினார்.
கடைசி டெஸ்ட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஓவல் டெஸ்ட் 1912 ல் விளையாடினார். இவரது கடைசி இன்னிங்ஸ் ஸ்கோர் ரன்கள் 79.
இவர் 6
டெஸ்ட்டுக்களில் கேப்டனாக இருந்துள்ளார்.
டபிள் யு ஜி க்ரேஸ் உட்பட, 5 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.
84 வருட ங்கள் வாழ்ந்த சி பி ப்ரை,1956 ஆம் வருடம் மறைந்தார்.
இவர் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தவர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆலன் ஜோன்ஸ் என்ற கிரிக்கெட் வீரர் 1961 முதல் 1983 வரையில் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் 1000 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தவர். 1963 லிருந்து 1968 வரையில், ஒவ்வொரு முறையும் 1800 ரன்களுக்கும் அதிக படியாக எடுத்து அசத்தியவர். இவர் கிளாமோர்கன் அணிக்காக பங்கு பெற்றவர். 645 முதல் தர ஆட்டங்களில் சதங்கள் 56, அரை சதங்கள் 194 மற்றும் 36049 ரன்கள் எடுத்த இவர், ஒரு டெஸ்டில் கூட விளையாடாதது வினோதம் தான்.
வாசுதேவன் , பெங்களூரு