For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப் பெரிய தாதா.. டானுக்கு எல்லாம் டான்.. யார் இந்த ஜாவித் மியாண்டட்

லாகூர் : இவர் ஏற்படுத்திய ரெக்கார்டை முறியடிப்பது சுலபம் அல்ல. அதற்கு அறிமுக டெஸ்டில் சதம் எடுப்பவர்கள் தான் தகுதி பெறுகிறார்கள். அட அப்படி என்ன அது தனி ரெக்கார்டு. அதற்கு யார் தற்பொழுது சொந்தக்காரர். அவர் தான் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியண்டாட்.
அப்படி என்ன சாதித்தார்.

அறிமுக டெஸ்ட், 1976 ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் சதம் எடுத்தார். ரன்கள் 163. 50 வது டெஸ்ட் 1983 இந்திய அணிக்கு எதிராக இரட்டை சதம். ரன்கள் 280* ( நாட் அவுட் )100 வது டெஸ்ட் 1989. இந்திய அணிக்கு எதிராக. ரன்கள் 145.
இந்த சாதனை தவிர மற்றும் ஒரு சாதனை. ஜாவித் மியண்டாட் மட்டும் தான் முதல் 50வது, 100 வது இன்னிங்ஸ்களிலும் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் சதங்கள் எடுத்து அசத்தியுள்ள ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார்.

Cricket titbits - Who is Javed Miandad and his illustrious carrer

இவரது 7 வது சதம் 1980 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. இது அவரது 50 வது இன்னிங்ஸ். நியூசிலாந்து அணிக்கு எதிராக 1984 ல் அடித்த சதம் அவரது 100 வது
இன்னிங்சில் ஆகும். லாகூரில் அறிமுக டெஸ்டில் இவர் எடுத்த 163 ரன்கள் தவிர, சதம் எடுத்த அடுத்த வீரர் ஆசிப் இக்பால்.

ரன்கள் 166. இவர்கள் இருவரும் இணைந்து 5 வது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பில் குவித்த ரன்கள் 281. ஜாவித் மியண்டாட் விக்கெட்டை முதல் இன்னிங்சில்
கைபற்றிய நியூசிலாந்து பவுலர் பீட்டர் பெத்தெரிக்கிற்கும் இது தான் அறிமுக டெஸ்ட்.
இவர் வீசிய பந்தில் ஜாவத் மியண்டாட் கேட்ச் கொடுக்க , பிடித்தவர் ரிச்சர்ட் ஹாட்லீ. அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தினார் பீட்டர்
பெத்தெரிக்.

வாசிம் ராஜா பவுலரிடம் கேட்ச் கொடுத்து அவுட். தொடர்ந்து மூன்றாவது பந்திலும் விக்கெட் எடுத்தார் அதே பவுலர். இந்த முறை அவுட் ஆனவர், இன்டிகாப் அலம். ஹோவார்த் கேட்ச் பிடித்தார். அறிமுக டெஸ்டிலேயே ஹாட்ரிக் சாதனை புரிந்து அசத்தினார், பீட்டர் பெத்தெரிக்.

இந்த பவுலர் தவிர அறிமுக டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்து அசத்திய மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் எம் ஜெ சி அல்லொம் ஆவார். 1929- 30 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த சாதனை புரிந்தார்.ஜாவித் மியந்தாத் அறிமுக டெஸ்டில், பாகிஸ்தான் 6
வித்தியாசத்தில் வென்றது.

இவர் விளையயாடியது 124 டெஸ்ட்டுகள்.
ரன்கள் 8832 . சராசரி 52.57. சதங்கள் 23. அரை சதங்கள் 41.கேட்சுகள் 81. ஸ்டம்பிங் 1.
7 அணிகளுக்கு எதிராக டெஸ்ட்டுகள் விளையாடிய இவர் 5 அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்கள் பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா 211
இங்கிலாந்து 260
இந்தியா 280*
நியூசிலாந்து 271
ஸ்ரீலங்கா 203*

ஒரு டெஸ்டில் நான்காவது விக்கெட்டிற்கு, சலீம் மாலிக்குடன் பார்ட்னர்ஷிப்பில் குவித்த ரன்கள், 322.
ஜாவத் மியந்தாத் 153*
சலீம் மாலிக் 165
கேப்டனாக இருந்த இந்த பர்மிங்ஹாம் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1992 ல்.

233 ஒரு நாள் பந்தயங்களில் பங்கு பெற்ற இவரது ரன்கள் 7381.

டெஸ்ட் கிரிகெட் சரித்திரத்தின் 1000வது டெஸ்ட் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பாகிஸ்தானின், ஹைதராபாத் பகுதியில், 1984 ல் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் எடுத்து அசத்தினார், மியந்தாத்.
104 & 103*

இவரது அறிமுக டெஸ்ட் போலவே இவரது கடைசி டெஸ்ட்டும் லாகூரில் நடைபெற்றது. 1993ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிரிக்கெட் சரித்திரத்தின் 999 வது டெஸ்ட் மேட்ச் பிரிஸ்பேன் மைதானத்தில் 1984 ல் நடைபெற்றது, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக. மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்கோர்
ஆஸ்திரேலியா
175 & 271

மேற்கு இந்திய தீவுகள்

424 & 26 / 2

பவுலிங்கில் அசத்தியவர்கள்
ஜோல் கார்னர் 4 / 67 , வால்ஷ் 3 / 55 & 1 /7, மால்கம் மார்ஷல் 2 / 39 & 5 /82,
மைக்கேல் ஹோல்டிங் 1 / 9 & 4 / 82

ஜியோப் லாவ்சன் 5 / 116 & 1 / 10 , டெர்ரி அல்டர்மான் 3 / 107

பேட்டிங்கில் அடித்தவர்கள்

வேனே பிலிப்ஸ் 44 & 54
கிம் ஹகேஸ் 34
கெப்லர் வெஸ்சேல்ஸ் 61
டேவிட் பூன் 51

ரிச்சி ரிச்சர்ட்சன் 138
கிளைவ் லாயிட் 114
மால்கம் மார்ஷல் 57
கார்டன் கிரீனிட்ஜ் 44

இந்த டெஸ்டில்
ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் பூன், பாப் ஹாலண்ட் அறிமுகம் ஆனார்கள்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, May 6, 2024, 17:40 [IST]
Other articles published on May 6, 2024
English summary
Cricket titbits - Who is Javed Miandad and his illustrious carrier பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப் பெரிய தாதா.. டானுக்கு எல்லாம் டான்.. யார் இந்த ஜாவித் மியாண்டட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+