Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன், ரக்பி வீரர் பின்னர் நடுவர்.. காலம் மறந்த 91 வயது ஜாம்பவான்

லண்டன் : எம் ஜெ கே ஸ்மித். இந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். டெஸ்ட்டுகளில் கேப்டனாக இருந்தவர்.இவர் டெஸ்ட்டுகளில் 3 சதங்கள் எடுத்துள்ளார்.
இரண்டு டெஸ்ட்டுகளில் 99 ரன்களில் அவுட் ஆகியுள்ளார்.

1960 ல் லார்ட்ஸ் டெஸ்டில் , தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் முறை. இங்கிலாந்து அணி வென்றது. இந்த டெஸ்டில் சமீபத்தில் மறைந்த ராமன் சுப்பா ரோவ் எடுத்த ரன்கள் 90. இங்கிலாந்தின் வேக பந்து வீச்சாளர் ப்ரைன் ஸ்டாதம் எடுத்த விக்கெட்டுகள் 11.

india national cricket team cricket cricket history sports news interseting facts

இரண்டாவது முறைஎம் ஜெ கே ஸ்மித் 99 ரன்கள் எடுத்த டெஸ்ட் 1961 ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, லாஹோர் டெஸ்டில். இதில் இவர் ரன் அவுட் ஆனார்.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றது.ஜவேட் புர்கி 138 , கென் பாரிங்டன் 139.
எம் ஜெ கே ஸ்மித் ஆடிய 50 டெஸ்டுக்களில் பிடித்த கேட்சுக்கள் 53.
204 முதல் தர ஆட்டங்களில் பிடித்த கேட்சுக்கள் எண்ணிக்கை 593.
1958 ல் அறிமுக டெஸ்ட் நியூசிலாந்து அணிக்கு எதிராக. பர்மிங்ஹாம் டெஸ்டில்.

இந்த டெஸ்டில் பிரெட் ட்ருமன் விக்கெட்டுகள் 6 ,நியூசிலாந்து வீரர் டோனி மாக்கிப்பன் விக்கெட்டுகள் 8. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பீட்டர் ரிச்சர்ட்சன் ரன்கள் 100.எம் ஜெ கே ஸ்மித்தின் கடைசி டெஸ்ட் 1972 ல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக , நோட்டிங்ஹாம் டெஸ்ட். ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் சதங்கள் எடுத்தனர். கெய்த் ஸ்டேக்போல் 114 , ராஸ் எட்வர்ட்ஸ் 170* நாட் அவுட்.

ஜான் ஸ்னோ 8 , டென்னிஸ் லில்லீ 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள், இந்த டெஸ்டில்.ஸ்மித் ஒரு தொடரில் பிடித்த கேட்சுகள் 10.1960 ல் போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில், விக்கெட் கீப்பர் ஜிம் பார்க்ஸ் (101*) உடன்
எம் ஜெ கே ஸ்மித் பார்ட்னர்ஷிப்பில் 7 வது விக்கெட்டுக்கு சேர்த்த ரன்கள் 197. இதில் ஸ்மித்தின் ரன்கள் 96.

இவர் 4 டெஸ்ட்டுகள், 17 ஒரு நாள் ஆட்டங்களில் ரெபெரீயாக பணிபுரிந்துள்ளார்.
25 டெஸ்ட்டுகளில் கேப்டனாக இருந்துள்ளார்.4 கேப்டன்கள் தலைமையில் டெஸ்ட்டுகள் விளையாடியுள்ளார்.இவர் டெஸ்டில் எடுத்த விக்கெட்டு 1.
91 வயதை நெருங்கும் இவர் இங்கிலாந்திற்காக
கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாடியவர்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooo

பீட்டர் பர்ஜ்
ஆஸ்திரேலிய அணிக்காக 42 டெஸ்ட்டுகள் விளையாடியவர். ரன்கள் 2290. அதிக பட்சம் 181. சதங்கள் 4. அரை சதங்கள் 12. கேட்சுகள் 23.

முதல் தர கிரிக்கெட் விளையாடியது
க்வீன்ஸ்லாந்து
அணிக்காக.

அறிமுக டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக, 1955ல் சிட்னி மைதானத்தில்.

இங்கிலாந்து அணி கேப்டன் மற்றும் துவக்க வீரருக்கு வேக பந்து பவுலர் ரேலிண்ட்வால் முதல் மூன்று பந்துகளை அவுட் ஸ்விங் செலுத்தி நான்காவது பந்தை இன் ஸ்விங் போட்டார். அருகில் நின்று கொண்டிருந்த பீட்டர் பர்ஜ் கேட்சை பிடித்தார். லென் ஹட்டன் அவுட். அந்த ஓவர் பவுலிங் செய்வதற்கு முன்பு , ரேலிண்ட்வால் இளம் அறிமுக வீரர் பீட்டர் பர்ஜிடம், நான்காவது பந்தை கவனமாக கவனிக்க சொல்லி தான் அந்த குறிப்பிட்ட இடத்தில் இவரை பீல்ட் செய்ய நிற்க வைத்தார்.

1955 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கொண்ட, மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் இவரது தந்தை அந்த அணிக்கு மேனேஜர் ஆக திகழ்ந்தார்.

1961ல் 5 வது ஓவல் டெஸ்டில் இவர் தனது முதல் டெஸ்ட் சதம் எடுத்தார். 181 ரன்கள்
(22 x 4).
ஒநீல் 117. ராமன்
சுப்பா ரோவ் 137.

பவுலிங்

கேன் மேக்கே 7,
ஆலன் டேவிட்சன் 4, பிரைன் ஸ்டேதம் 3, டேவிட் ஆலேன் 4.
இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.

பீட்டர் பர்ஜ் மொத்தம் 88 ஆட்டங்களுக்கு ரெபரியாக பணிபுரிந்துள்ளார்.

பீட்டர் பர்ஜின் கடைசி டெஸ்ட் அடிலேயிட் , 1966.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவரது ஸ்கோர் 27.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாப் சிம்ப்சன் 225, பில் லாரி 119 , கென் பாரிங்டன் 102.
பவுலிங் ஆஸ்திரேலிய வீரர்கள்
கிரஹம் மெக்கின்சி 7,
நீல் ஹாவ்க் 6
இங்கிலாந்து பவுலர்
ஜெப் ஜோன்ஸ் 6

பீட்டர் பர்ஜ் 7 கேப்டன்கள் தலைமையில் டெஸ்ட்டுகள் விளையாடியவர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, June 22, 2024, 15:12 [IST]
Other articles published on Jun 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+