ரசிகர்களிடம் அடி வாங்கும் சஞ்சய் மஞ்சுரேக்கர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் கிரிக்கெட் பிதாமகன் யார்?
மும்பை : டென்னிஸ் அமிஸ், என்ற இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் 50 டெஸ்டுகளில் எடுத்த ரன்கள் 3612. சராசரி ரன்கள் 46.30. 11 சதங்கள் எடுத்துள்ளார். 11 அரை சதங்கள் எடுத்துள்ளார். இரண்டு இரட்டை சதங்கள்.அதிக பட்ச ரன்கள் 262*.
இந்த அதிக பட்ச ரன்கள், இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து காப்பாற்றி டிரா செய்ய உதவியது.பிப்ரவரி, 1974 கிங்ஸ்டன் டெஸ்ட் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக. முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 353. மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 583 / 9 டிக்ளர்.

230 ரன்களை முதலில் எடுத்துவிட்டு, அதற்கும் மேல் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருந்தது, இங்கிலாந்து அணி.தனி மனிதன் ஒருவராக நின்று, நிதானமாகவும், பொறுமையுடனும் ஆடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் பொறுமையை சோதித்தார், டென்னிஸ் அமிஸ்.
கடைசி வரையில் விளையாடி 262 * ( நாட் அவுட் ) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக அதிக ரன்கள் எடுத்தவர் ஜான் ஜேம்சன். அவர் எடுத்த ரன்கள் 38.டெஸ்ட் முடிவில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர். 432 / 9. அதில் டென்னிஸ் அமிஸ் எடுத்த 262* எடுக்க, அவர் எதிர் கொண்ட பந்துகள் 563. ( 40 x 4 & 1 x 6) இந்த இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் விக்கெட் கீப்பர் டேரிக் முர்ரே தவிர, மற்ற 10 வீரர்களும் பந்து வீசினார்கள்.
இந்த டெஸ்டில் ரோ 120, ராய் ப்ரெட்ரிக்ஸ் 94, காளிசரண் 93 ரன்கள் எடுத்தனர். டென்னிஸ் அமிஸ், அவர் விளையாடிய 50 டெஸ்டுகளில்
24 கேட்சுகளை பிடித்துள்ளார். இவர் அடித்தது பவுண்டரிகள் 427. ஆனால், டெஸ்டுகளில் இவர் அடித்த சிக்ஸர்கள் 3 மட்டுமே.இவர் தனது அறிமுக மற்றும் கடைசி ஒரு நாள் பந்தயங்களில் சதங்கள் எடுத்து சாதனை புரிந்தவர்.
ஆகஸ்ட், 1972.
மான்செஸ்டர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவரது, அறிமுக ஆட்டத்தில் அடித்த சதம்
இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவியது
134 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் இவர் எடுத்த ரன்கள் 103.
முதல் உலக கோப்பை மேட்சிலும் முதல் சதம் அடித்த பெருமை உடையவர்.
07.06.1975 ல் அறிமுக ஒரு நாள் ஆட்ட
புருடென்ஷியல் உலக கோப்பை முதல் ஆட்டம். இந்திய அணிக்கு எதிராக, லார்ட்ஸ் மைதானத்தில். 147 பந்துகளில் 137 ரன்கள். 18 பவுண்டரிகள்.
இவரது கடைசி ஒரு நாள் ஆட்டம் ஓவல் மைதானத்தில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.
ஜூன், 1977.
இவரது சதம் (108 ரன்கள் ) இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவவில்லை.
டென்னிஸ் அமிஸ் தலை கவசம், ஆரம்ப காலத்திலிருந்து உபயோகித்து வந்தவர் ஆவார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய டெஸ்டுகளில் விளையாடிய தந்தை மகன் இருவரும் சதங்கள் எடுத்து அசத்திய ஜோடிகள் சிலர் உண்டு.ஆனால் இந்த தந்தை மகன் ஜோடி மட்டும் தான், ஒரு இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதித்துள்ளனர்.தந்தை விஜய்
மஞ்ரேக்கர் .
மகன் சஞ்சய் மஞ்ரேக்கர்.
விஜய் மஞ்ரேக்கர் விளையாடிய டெஸ்டுகள் 55 எடுத்தது 3208 ரன்கள். சராசரி 39. 12.
சதங்கள் 7
அரை சதங்கள் 15
அதிக பட்ச ரன்கள் 189*
10 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.
முதல் தர கிரிக்கெட் விளையாடிய அணிகள்.
ராஜஸ்தான், பாம்பே, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்திர பிரதேஷ், பெங்கால்.
சஞ்சய் மஞ்ரேக்கர்.
விளையாடிய டெஸ்டுகள் 37 எடுத்தது 2043 ரன்கள். சராசரி
38.67.
சதங்கள் 4
அரை சதங்கள் 9
அதிக பட்ச ரன்கள் 218
4 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.
முதல் தர கிரிக்கெட் விளையாடிய அணி
மும்பை.
வாசுதேவன்,பெங்களூரு


Click it and Unblock the Notifications