Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 கேப்டன்கள் கீழ் விளையாடிய பாக். வீரர்.. பந்துவீசும் போது மைதானத்திலேயே உயிர் பிரிந்தது

கராச்சி : வாசிம் ராஜா இடது கை வீரர். பாகிஸ்தான் அணிக்கு விளையாடியவர்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டில் (1981) இவர் பவுலிங்கில் செய்த சாதனை

ஓவர் 1
மெய்டன் 1
ரன் 0
விக்கெட் 1

sports news cricket

டென்னிஸ் லில்லீ அவுட்.இந்த டெஸ்டை
ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த டெஸ்டில் சில வீரர்களின் ரன்கள் (இரண்டு அணியினரின் பங்களிப்பு )

0 (5) 1 (1) 2 ( 1) 3 (3) 4 ( 5)
5 ( 3) 6 (3 ) 8 (2 ) 9 ( 2)
16 (2) 22 (2)

இதில் ஒரு சதம். கிம் ஹுக்ஸ் (106)

பவுலிங் விக்கெட்டுக்கள்

இம்ரான் கான் (7 )
டென்னிஸ் லில்லீ (6)
அல்டர்மன் (6)
யார்டலே (6)

sports news cricket wasim raja

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில்
ஆல் அவுட் 62. இதில் சர்ப்ராஸ் நவாஸ் எடுத்தது ரன்கள் 26. மற்ற வீரர்கள் எடுத்தது ஒற்றைப் பட ரன்கள்.

இதே வாசிம் ராஜா பர்மிங்காம் டெஸ்டில் (1982) இங்கிலாந்து அணிக்கு எதிராக பவுலிங்கில் சாதித்தது.

ஓவர் 2.3
மெய்டன் 2
ரன் 0
விக்கெட் 1

இம்ரான் கான் ஒரு இன்னிங்சில் வீழ்த்திய விக்கெட்டுக்கள் (7)
ட்ரெக் ராண்டல் சதம் (105)
வாசிம் ராஜா 57 டெஸ்டுக்களில் எடுத்த விக்கெட்டுக்கள் 51.

sports news cricket wasim raja

பேட்டிங்கில் ரன்கள் 2821
4 சதங்கள். அதிக பட்சம் 125. சராசரி 36.16. சிக்ஸர்கள் 27. கேட்சுக்கள் 20.
ஒரு நாள் ஆட்டங்கள் 54.

வாசிம் ராஜா மேற்கு இந்திய தீவுக்கள் அணி எதிராக தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப் படுத்தியவர். 1977ல் பிரிட்ஜ்டவுன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 117* ( நாட் அவுட்).

இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் கீப்பர் வாசிம் பாரியுடன் ஜோடி சேர்ந்து கடைசி விக்கெட்டிற்கு 133 ரன்கள் குவித்து சாதனை. வாசிம் பாரி (60* (நாட் அவுட் ) வாசிம் ராஜா 71.

கிளைவ் லாயிட் 157 விவீயன் ரிச்சர்ட்ஸ் 92 மஜித் கான் 88

பவுலிங் விக்கெட்டுக்கள்
காலின் கிராப்ட் 7
ஜோயல் கார்னர் 6
இம்ரான் கான் 5
சர்ப்ராஸ் நவாஸ் 7
சலீம் அல்டப் 5

டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் உபரி ரன்கள் தனி இடம் பெற்றன.

மொத்தம் ரன்கள் 173.
நோ பால்கள் மட்டும் 103 ஆகும்.

வாசிம் ராஜா தனது அறிமுக மற்றும் கடைசி டெஸ்டுக்கள்
நியூசிலாந்து மண்ணில் விளையாடினார்.

அறிமுக டெஸ்ட் வெல்லிங்டன் 1973 ,கடைசி டெஸ்ட் ஆக்லாந்து 1985
8 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.
இவர் முதல் தர கிரிக்கெட் பல அணிகளுக்காக ஆடியுள்ளார்.
51 ஆட்டங்களில் ரெபெரியாக பணியாற்றியுள்ளார். 15 டெஸ்டுக்கள் உள்பட.

இவரது தந்தை, சகோதரர்களும் முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்கள். அதில் குறிப்பாக ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டுக்கள் , ஒரு நாள் பந்தயங்களில் ஆடியவர். பாகிஸ்தான் அணியை கேப்டனாகாவும் வழி நடத்தியவர்.

50 வயதிற்கு அதிகமான கிரிக்கெட் ஆட்டத்தில் ஆடிக் கொண்டு இருக்கும் பொழுது மாரடைப்பால் உயிர் இழந்த பொழுது வாசிம் ராஜாவுக்கு வயது 54.

1976 - 77 மேற்கு இந்திய தீவுக்கள் சுற்றுப் பயணத்தில் வாசிம் ராஜா அபாரமான ஆட்டத்தை வெளிப் படுத்தினார் 517 ரன்கள் குவித்து 57.4 சராசரி பதிவு செய்தார். பவுலிங்கில் சராசரி 7 விக்கெட்டுக்கள் 18.7 என்று எடுத்தார். சிறந்த பவுலர்களான ஆண்டி ராபர்ட்ஸ், காலின் கிராப்ட் போன்றவர்களின் பந்துக்களை பந்தாடி திணற அடித்தார்.இங்கிலாந்தில் குடியேறிய இவர் படிப்பிலும் மிகவும் சிறந்து விளங்கியவர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, July 4, 2024, 16:06 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+