Cricket Titbits - கிரிக்கெட் வரலாற்றிலேயே நம்பர் 1.. 2323 விக்கெட் வீழ்த்தி மெகா சாதனை படைத்த பவுலர்
லண்டன் : நமது வாசகர் வாசுதேவன் அனுப்பிய சுவாரசியமான, தற்போதைய கிரிக்கெட் ரசிகர்கள் அறியாத பல தகவல்கள் இங்கே -
ஸர் டான் பிராட்மேனின் ( Sir Don Bradman) கடைசி டெஸ்ட் இன்னிங்சில் தேவையாக இருந்தது 4 ரன்கள். அப்படி அவர் அந்த 4 ரன்கள் எடுத்து இருந்தால், குறைந்த பட்சம் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் சராசரி ரன்கள் 100 இருந்திருக்கும்.
பிராட்மேன் எதிர் கொண்ட இரண்டாவது பந்து கூக்ளி. ( Googly) அந்த பந்து பிராட்மேன் பாட்டையும்( bat) தாண்டி சென்று ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட்டை வீழ்த்தியது. பந்து வீசியவர் இங்கிலாந்து டெஸ்ட் வீரர் எரிக் ஹோல்லிஸ். (Eric Hollies).

ஸர் டான் பிராட்மேனின் கடைசி டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியதனால், எரிக் ஹோல்லிஸ் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் 13 டெஸ்டுகளில் 44 விக்கெட்டுகளையும், முதல் தர கிரிக்கெட்டில் 515 மேட்சுகளில் 2323 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
ஒரு முதல் தர மேட்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏழு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் , ( clean bowled ) மூன்று பேட்ஸ்மென்களை LBW முறையில் அவுட் ஆக்கினார்.
இரண்டு முறை ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளையும், 7 முறைகள் 8 விக்கெட்டுகளையும் எடுத்து சாதித்தவர்.
இவர் டெஸ்டுகளில் மொத்தம் 37 ரன்களும், முதல் தர கிரிக்கெட் மேட்சுகளில் 1673 ரன்களும் எடுத்தவர். ஆக மொத்தம் இவரது மொத்த ரன்கள், இவர் எடுத்த மொத்த விக்கெட்டுகளை விட குறைவாகவே இருந்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த கிரிக்கெட் வீரரின் தந்தை இங்கிலாந்து டீமிற்காக ஒரு டெஸ்ட் விளையாடியுள்ளார்.
இவர் 46 டெஸ்டுகள் விளையாடினார். இவர் பேட்டிங்கில் 1962 டெஸ்ட் ரன்களும் , விக்கெட் கீப்பராக 114 விக்கெட்டுகளை விழ காரணமாக( dismissals) இருந்தார்.
இவர் மற்றும் இவர் தந்தையார் இருவர் பெயர்களும் ஜிம் பார்க்ஸ். (Jim Parks)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் உள்ள இரண்டு கவுண்டி டீம்களுக்காக( County teams) தலா 10000 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் புரிந்தவர். கிளௌஸ்டர்ஷையர்(Gloucestershire) & ஒற்ஸ்டேர்ஷையர்( Worcestershire).
79 டெஸ்டுகள் விளையாடி 4882 ரன்களை குவித்தார். இவரது கடைசி இரண்டு இன்னிங்சில் எடுத்த ரன்கள் முறையே 105 மற்றும் 75.
மேற்கு இந்திய தீவிற்கு எதிராக விளையாடிய டெஸ்ட் மேட்சில், ஓய்வு தினத்தில் ஒரு எக்சிபிஷன் மேட்சில் (exhibition match) விளையாடியதால் டெஸ்ட் மேட்சுகள் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார். 39 வயதிற்கு பிறகு கடைசி 24 டெஸ்டுகள் விளையாடினார். முதல் தர கிரிக்கெட்டில் 122 சதங்கள் எடுத்தார். மொத்தம் 47000 க்கும் அதிகமான ரன்களை குவித்தார். இவர் பெயர் டாம் க்ரேவிணி ( Tom Graveney)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோட்டார் ராமஸ்வாமி(Cotar Ramasawmi) இந்திய கிரிக்கெட் டீமிற்காக தனது முதல் டெஸ்ட் ஆடிய பொழுது இவரது வயது 40 வருடங்கள் 37 நாட்கள். இரண்டு டெஸ்ட் விளையாடினார்.
டென்னிஸில் இந்திய அணியில் டேவிஸ் கோப்பை ( Davis Cup) பந்தயத்தில் பங்கு பெற்றவர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் டீமில் இடம் பெற்ற இந்த ஸ்பின் பவுலர் 86 டெஸ்டுகளில் ல் 297 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் கிரெக் சாப்பலை ( Greg Chappell) 13 முறையும், சுனீல் காவஸ்கரரை 12 ( Sunil Gavaskar) முறையும், தன் பந்து வீச்சு மூலம் அவுட் செய்துள்ளார். இவர் பெயர் டெரிக் அண்டர் வூட் ( Derek Underwood)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1932 ஆஸ்திரேலியா சுற்று பயணத்தின் பொழுது, இங்கிலாந்து கேப்டன் லெக் சைடில் பீல்டர்களை நிற்க வைத்து, பேட்ஸ்மேன்களை குறிப்பார்த்து வேக பந்து வீசுபவர்களை வேகமாக பந்துகளை வீச பணித்தார். அதனால் பல சிக்கல்கள் எழுந்தன. அந்த தொடரை infamous Bodyline series ( பிரபலமான பாடி லைன் தொடர் ) என்றனர்.
அப்பொழுது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் பில் வூட்புல் (Bill Woodfull) என்பவர். இவர் டீமின் வேக பந்து வீச்சாளர்கள், எப்பொழுதும் போல் பந்து வீச வேண்டும், எதிரணியினர் மாதிரி தரம் தாழ்ந்து பேட்ஸ்மேன்களை குறி வைத்து தாக்க கூடாது, என்று கூறி விட்டார். அவ்வாறு நடைப் பெறாமலும் பார்த்துக் கொண்டார்.
இவர் ஆசிரியராக பணி புரிந்தவர். விக்டோரியா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மானாக இருந்தவர். இவரை தவிர விக்டோரியா ( Victoria ) அணிக்காக விளையாடிய இரண்டு சிறந்த ஆட்டக்காரர்கள், இடது கை பேட்ஸ்மன் நீல் ஹார்வி ( Neil Harvey) மற்றும் ஆல் ரவுண்டர் கீத் மில்லர் ( Keith Miller) ஆகியோரும் அந்த தொடரில் பந்து வீசி இருந்தனர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications