லண்டன் : ஜூலை, 1909. முதல் தர மேட்ச். ஒர்ஸஸ்டர்ஷையர் , கென்ட் அணிகளுக்கு இடையிலான மேட்ச்.
ஒர்ஸஸ்டர்ஷையர் வீரர் பிரெட்ரிக் பியர்சன் 23 பவுண்டரிகள் உதவியுடன் 161 ரன்கள் குவித்தார். அவரது அணியின் ஸ்கோர் 360. கென்ட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 555. இந்த அணியின் ஸ்கோர் 320 ஆக இருக்கும் பொழுது, 9 வது விக்கெட் விழந்தது. விளையாடிக் கொண்டு இருந்த பிரேங்க் ஒல்லியுடன் ஜோடி சேர்ந்தார், கடைசி வீரர் ஆர்தர் பீல்டர்.

இருவரும் சேர்ந்து எதிரணியின் மொத்த ரன்களை கடந்தனர். தொடர்ந்து விளையாடி கொண்டு இருந்தார்கள். பிரேங்க் ஒல்லி அவுட் ஆனார் ரன்கள் 185 க்கு. இவர் அடித்தது 1 சிக்ஸர், 24 பவுண்டரிகள். ஆர்தர் பீல்டர் அவுட் ஆகவில்லை. நாட் அவுட் 112*. 14 பவுண்டரிகள்.
கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ரன்கள் 235.
இரண்டாவது இன்னிங்ஸ் பவுலிங்கை துவக்கி 3 விக்கெடுக்கள் வீழ்த்தினார், ஆர்தர் பீல்டர். கென்ட் அணி ஒரு இன்னிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையை பதிவு செய்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புகழ் பெற்ற ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர் பந்து வீசினார். எதிரே பேட் டிங் செய்தவர் ஒரு பவுலர். ஆனால் அவர் இந்த டெஸ்டில் அதிரடி ஆட்டம் ஆடினார். லேக்கர் வீசிய பந்துக்கள் வரிசையாக பெற்று தந்த ரன்கள் 6, 6, 4, 4. முதல் 6 பந்துக்களில் இந்த வீரர் எடுத்த ரன்கள் 28. இந்த வீரர் பெயர் போப்பி வில்லியம்ஸ். மேற்கு இந்திய தீவுக்கள் வீரர்.
இரண்டாம் உலக போருக்கு முன்பும், பிறகும் டெஸ்டுக்கள் விளையாடியவர். இவர் ஆடியது 4 டெஸ்டுக்கள் மட்டுமே.
மொத்த ரன்கள் 113. அதிக பட்சம் 72. எடுத்த விக்கெட்டுக்கள் 9.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த வீரரும் 4 டெஸ்ட்டுக்கள்தான் விளையயடினார்.
இவர் தென் ஆப்பிரிக்கா வீரர் பிரைன் லீ இர்வின் என்பவர்.
இவரது ஒரே டெஸ்ட் சதம், இவரது கடைசி இன்னிங்சில் அடிக்கப் பட்டது.
102. 146 பந்துக்கள். ( 9 x 4 & 2 x 6 )
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, மார்ச் 1970ல்.
இவரது அறிமுக டெஸ்ட்டும் அதே தொடரில்.
இவரைப் போல் பல முன்னணி பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் குறைந்த டெஸ்டுகளே ஆட வேண்டியிருந்தது.
இந்த ஆ ஸ்திரேலிய
தொடருக்கு பிறகு சுமார் 22 வருடங்கள் தடை விதிப்பின் காரணமாக பல வீரர்களால் டெஸ்ட் மேட்ச்சுகளில் தங்கள் அபார திறமை களை வெளிப் படுத்த முடியாமல் போனது தூரதிர்ஷ்டம் மற்றும் பெரும் இழப்பு, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கும்.
பிரைன் லீ இர்வின் இடது கை பேட்ஸ்மன் ,
வலது கை வேக பந்து பவுலர். சிறந்த விக்கெட் கீப்பர்.
4 டெஸ்டுக்களில் எடுத்த ரன்கள் 353. சராசரி 50.42. 1 சதம். 2 அரை சதம். அதிக பட்ச ரன்கள் 102.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடைசி டெஸ்டில் சதம் எடுத்த இந்திய வீரர்கள்
விஜய் மர்ச்சண்ட் 154
இங்கிலாந்து 1951
விஜய் மஞ்ரேகர் 102*
நியூஸிலாந்து 1965
அசாருதின் 102
தென் ஆப்பிரிக்கா 2000
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாக்கிஸ்தான் அணிக்காக 78 டெஸ்டுக்கள் விளையாடிய , சாஹீர் அப்பாஸ் மொத்தம் 12 சதங்கள் எடுத்துள்ளார்.
அவற்றில் நான்கு இரட்டை சதங்கள்.
20 அரை சதங்கள்.
274 இங்கிலாந்து
240 இங்கிலாந்து
235* இந்தியா
215 இந்தியா
90, 85, 80, 50, 43, 19 ரன் களில் இரண்டு முறை அவுட் ஆகி உள்ளார்.
டெஸ்டுக்களில் எடுத்த ரன்கள் 5062. சராசரி 44.79
இவரது டெஸ்டின் முதல் சதமே, இரட்டை சதம்.
ஜூன், 1971. இங்கிலாந்து அணிக்கு எதிராக. அதுவும் இவரது இரண்டாவது
டெஸ்டிலேயே.
எடுத்த ரன்கள் 274. எதிர் கொண்ட பந்துக்கள் 467. ( 37 x 4 )
இந்த டெஸ்டின் மற்ற சதங்கள் - முஷ்டாக் முகமது 100, ஆசிப் இக்பால் 104*, ஆலன் நாட் 116, பிரைன் லக்ஹரஸ்ட் 108. இந்த டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது.
சாஹீர் அப்பாஸ் மூக்கு கண்ணாடி அணிந்துக் கொண்டே கிரிக்கெட் விளையாடியவர். முதலில் இருந்து கடைசி வரையில் இங்கிலாந்தின் க்லூஸ்ஸ்டர்ஷையர் அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்.
முதல் தர கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் மற்றும் ஒரே ஒரு ஆசிய வீரர் என்ற பெருமை உடையவர்.
459 முதல் தர
மேட்ச்சுக்களில் இவர் எடுத்த ரன்கள் 34800 க்கும் மேல். 108 சதங்கள். 158 அரை சதங்கள்.
62 ஒரு நாள் பந்தயங்களில் 7 சதங்கள் அடித்த இவர் எடுத்த ரன்கள் 2572.
14 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து உள்ளார்.
வாசுதேவன், பெங்களூர்