Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மதுரை டிஜிட்டல் கிரியேட்டர்ஸ்-க்கான கிரிக்கெட் திருவிழா.. 16 அணிகளில் முதல் பரிசை வென்றது யார்?

மதுரை: மதுரையில் இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் விழிப்புணர்வை தீவிரப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மதுரை டிஜிட்டல் கிரியேட்டஸ்-க்கான கிரிக்கெட் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தி ஸ்பேக் மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனாவில் S2 ஈவண்ட்ஸ் சார்பாக முதல்முறையாக மதுரை டிஜிட்டல் கிரியேட்டர்ஸ்-க்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா நவ.27ல் கோலாகலமாக நடத்தப்பட்டது.

madurai cricket fitness

இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக 16க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டனர். இதில் டெக் சூப்பர்ஸ்டார், கிராக் வித் ஹாக்,டேய் நானும் மதுரைக்காரன்தான்டா, மதுரை அப்பாடக்கர்ஸ், மதுரை 90ஸ் கிங், டிஸ்கவர் திண்டுக்கல், மதுரை எக்ஸ்பிரஸ், டெடி பொம்மை, பிங்க் டெடி, பிளாக்ஜேப்ஸ் அஃபீஸியல், புஹாரி ஜங்க்சன், டிஎன் விலாகர் மதுரை, இது எங்க மதுரை, டிஜே சைசு, டெக்கத்தலான் மதுரை, கனீஷ் மேக்ஸ் உள்ளிட்ட அணிகள் கலந்துகொண்டனர்.

இந்த கிரிக்கெட் திருவிழாவிற்கான சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துரவமனையின் சிஓஓ நீலக்கண்ணு, எஸ் விஎஸ் ஃபிட்ஸின் SVS.சுராஜ், அனுஜ் டைல்ஸ் இயக்குநர் செந்தில்குமார், கேஎம் சாரீஸ் கமர்தீன், விஷால் டி மால் மார்க்கெட்டிங் மேனேஜர் அருண், வழக்கறிஞ்சர் ஷேக், எஸ்2 ஈவண்ட்ஸ் கார்த்திக்சிவா, அபி டிவி அருணாச்சலம், ஆர்ஜே அஸ்வின் ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிகச்சிறப்பாக நடைபெற்ற மதுரை டிஜிட்டல் கிரியேட்டர்ஸ்-க்கான மாபெரும் கிரிக்கெட் விழாவில் புஹாரி ஜங்க்சன் அணி முதல் பரிசையும், மதுரை எக்ஸ்பிரஸ் அனி இரண்டாவது பரிசையும், பிளாக்கேப்ஸ் அஃபீஷியல் மூன்றாவது பரிசையும், கனீஷ் மேக்ஸ் நான்காவது பரிசையும் வென்றனர்.

Story first published: Thursday, November 28, 2024, 17:55 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+