Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டியா கிட்ட நிறைய தப்பு இருக்கு.. நான் வேணா ட்ரெய்னிங் தர்றேன்- அப்துல் ரசாக்!

Recommended Video

Abdul razaaq: பாண்டியாவுக்கு நான் வேணா ட்ரெய்னிங் தர்றேன் - பாக். வீரர் அறிவிப்பு- வீடியோ

கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் வித்தியாசமான பதிவு ஒன்றை போட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா பேட்டிங்கில் தவறு உள்ளது என்று சுட்டிக் காட்டிய அப்துல் ரசாக், தான் பண்டியாவுக்கு பயிற்சி அளிக்க தயார் என்று கூறி வியக்க வைத்துள்ளார்.

ரசாக் பதிவு

ரசாக் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பண்டியா 48 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியை கண்ட அப்துல் ரசாக் பண்டியாவின் பேட்டிங்கில் டெக்னிகலாக தவறு இருப்பதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

என்ன தவறு?

என்ன தவறு?

பண்டியாவின் உடல் சம நிலையிலும், பந்தை அடித்து ஆடும் போது அவரது கால்கள் நகர்வதிலும் சில தவறுகள் உள்ளது. அது அவருக்கு சில சமயம் சிரமத்தை அளிப்பதாகவும் கூறி இருந்தார் அப்துல் ரசாக்.

பயிற்சி

அத்தோடு ரசாக் நிறுத்தி இருந்தால், ஒரு விமர்சனம் என்பதோடு அந்தப் பதிவு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், பிசிசிஐ விரும்பினால், தான் பண்டியாவுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும், தலை சிறந்த ஆல்-ரவுண்டராக பண்டியாவை மாற்றாவிட்டாலும், சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அவரை, தான் மாற்ற முடியும் என்றும் கூறி இருக்கிறார் ரசாக்.

சிறந்த ஆல்-ரவுண்டர்

சிறந்த ஆல்-ரவுண்டர்

அப்துல் ரசாக் தன் காலத்தில் சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கினார். பாகிஸ்தான் அணியில் இதுவரை இருந்த ஆல்-ரவுண்டர்களிலேயே மிகவும் சிறந்தவர் அவர் தான். தற்போது பயிற்சி, கிரிக்கெட் விமர்சகர் என கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ரசாக், பண்டியாவை சிறந்த ஆல்-ரவுண்டராக மாற்றிக் காட்டுகிறேன் என வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.

வேலை கேட்டு விண்ணப்பமா?

எனினும், பாகிஸ்தான் ரசிகர்கள் ரசாக் ஏன் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்களை விட்டு விட்டு, இந்திய வீரருக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறார் என கேள்வி எழுப்பி உள்ளனர். சிலர் பிசிசிஐயிடம் ரசாக் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார் என கலாய்த்தும் வருகின்றனர்.

நடக்காத காரியம்

நடக்காத காரியம்

இன்று உள்ள சூழ்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் இந்திய வீரருக்கு பயிற்சி அளிப்பது என்பது நடக்காத காரியம். இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிக்கே இங்கே வழியைக் காணோம். இந்த நிலையில், இதை தெரிந்து கொண்டே அப்துல் ரசாக் ஏன் இப்படி வேலை கேட்டுள்ளார் என்பதே புரியாத புதிராக உள்ளது.

Story first published: Saturday, June 29, 2019, 10:02 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+