Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு தோல்வி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது ஆஸி.. இந்தியா ஹேப்பி அண்ணாச்சி!

லண்டன் : ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியில் கடினமான எதிரணியோடும், இந்தியா சற்றே எளிதான எதிரணியோடும் மோத உள்ளன.

2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து அரையிறுதிச் சுற்று நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா தன் கடைசி லீக் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தியா முதல் இடத்தைப் பிடித்தது.

அரையிறுதி போட்டிகள்

அரையிறுதி போட்டிகள்

தற்போது 2019 உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இருந்தால், இது அப்படியே தலை கீழாக மாறி இருக்கும். இந்தியா - இங்கிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியையும் சந்தித்து இருக்கும்.

இங்கிலாந்து வெற்றிநடை

இங்கிலாந்து வெற்றிநடை

இங்கிலாந்து அணி லீக் சுற்றின் இடையே சறுக்கினாலும் தன் கடைசி இரண்டு போட்டிகளில் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. மறுபுறம், நியூசிலாந்து அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த நிலையில், கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது.

நியூசி. பார்ம் அவுட்

நியூசி. பார்ம் அவுட்

நியூசிலாந்து அணி மொத்தமாக பார்ம் அவுட் ஆனது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி சற்றே எளிதான ஒன்றாக இருக்கும். போட்டிக்கு முன்பு இரு அணிகளில், நியூசிலாந்து அணிக்குத் தான் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

ஆஸி. அழுத்தம்

ஆஸி. அழுத்தம்

ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை லீக் சுற்றில் வீழ்த்தி இருந்தாலும், அதன் பின் இங்கிலாந்து அணி தவறுகளை திருத்திக் கொண்டு சுதாரித்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் எதிர்பாராத தோல்வி அடைந்து, அழுத்தத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

மேலும், உஸ்மான் கவாஜா கடந்த போட்டியில் காயம் அடைந்தார். அதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதிப் போட்டி கடுமையானதாக மாறி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாகவும் மாறி இருக்கிறது

Story first published: Sunday, July 7, 2019, 12:17 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+