Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வுக்கு சீனே இல்லை.. இங்கிலாந்து அபார வெற்றி.. 27 ஆண்டுகள் கழித்து இறுதிக்குள் நுழைந்து சாதனை!

பிர்மிங்காம் : 2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

27 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

ஆஸ்திரேலியாவின் அரையிறுதி ஆட்டம் மிகவும் பரிதாபமாக இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இங்கிலாந்து அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது.

ஆஸி. அதிர்ச்சி

ஆஸி. அதிர்ச்சி

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி துவக்கத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி முதல் அரையிறுதியில் அளித்த அதே அதிர்ச்சி. 14 ரன்களுக்குள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்பை இழந்தது. கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

அலெக்ஸ் கேரி காயம்

அலெக்ஸ் கேரி காயம்

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அசுர பவுன்சரில் தாடைப் பகுதியில் மோசமாக காயமடைந்தார். ரத்தம் வழிந்தாலும் முதலுதவி செய்து கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தார். அவர் 46 ரன்கள் எடுத்து அணிக்கு ஓரளவு உதவி செய்தார்.

ஸ்மித் போராட்டம்

ஸ்மித் போராட்டம்

அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் தனியாக போராடினார். ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 22, கம்மின்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்மித் 85 ரன்கள் எடுத்து 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு

இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு

ஆஸ்திரேலியா கடைசி வரை திணறியது. அந்த அளவிற்கு இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ரன் எடுக்க முடியவில்லை. வோக்ஸ் 3, ஆர்ச்சர் 2, அதில் ரஷித் 3, மார்க் வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அதிரடி

224 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் சற்று நிதானம் காட்டியது. ஜேசன் ராய், பேர்ஸ்டோ ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலியா. ஒரு கட்டத்திற்குப் பின் ஜேசன் ராய் கண்ணை மூடிக் கொண்டு விளாசினார். அவர் அரைசதம் கடந்தார். பேர்ஸ்டோ 34, ராய் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

அதன் பின் ஜோ ரூட், கேப்டன் இயான் மார்கன் விக்கெட் விழாமல் சராமாரியாக ஃபோர் அடித்து 32.1 ஓவரில் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கடந்த சீசனின் சாம்பியன் அணி என்றாலும், இந்த முறை இங்கிலாந்து அணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அரையிறுதியுடன் தன் பயணத்தை முடித்துக் கொண்டது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர் கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 11, 2019, 22:35 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+