For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்.. ஆதாரத்துடன் பாக். முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!

Recommended Video

இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்.. பாக். முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

லண்டன் : பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவரின் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.

இந்தியா வேண்டுமென்றே உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வி அடையும். ஏற்கனவே ஆஸ்திரேலியா அப்படிதான் தோல்வி அடைந்தது என்று பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி.

நோக்கம் இது தான்

நோக்கம் இது தான்

பாசித் அலியின் நோக்கம் இந்தியாவை தாக்க வேண்டும் என்பது தெரிந்தாலும், அவர் அதற்கு ஆதாரமாக வார்னர் குறித்தும், இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி குறித்தும் கூறும் விஷயங்கள் பெரும் சர்ச்சையை கிளப்புவதாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானையும் சாட்சிக்கு இழுத்துள்ளார் பாசித் அலி.

அரையிறுதி சிக்கல்

அரையிறுதி சிக்கல்

இவ்வளவு பிரச்சனைக்கும் மூல காரணம் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பு தான். தற்போது உலகக்கோப்பை தொடரில் மூன்று அணிகள் அரையிறுதி செல்வது கிட்டத்தட்ட உறுதி. அவை, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா. மீதமுள்ள ஒரு இடத்திற்கு இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதை வைத்து தான் கண்ட மேனிக்கு சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளார் பாசித் அலி.

இந்தியா தோற்கும்

இந்தியா தோற்கும்

அடுத்து நடக்கவுள்ள லீக் போட்டிகளில் இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தோல்வி அடையும். ஏனென்றால், இந்திய அணிக்கு பாகிஸ்தான் அரையிறுதி வருவதை விரும்பவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தான் போட்டியில் எப்படி வென்றார்கள் என்பதை எல்லோரும் பார்த்தோமே என்று கூறி இருக்கிறார் பாசித் அலி.

ஏற்கனவே நடந்தவை

ஏற்கனவே நடந்தவை

அவர் குறிப்பாக இதற்கு முன்பு நடந்த இந்தியா போட்டிகளை குறி வைத்து தாக்கிப் பேசினார். ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தடுமாறியதாகவும், ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாகவும் நம்பவே முடியாத பிதற்றல்களை அவிழ்த்து விட்டுள்ளார். அதில் வார்னரை பற்றி வம்பிழுத்து விட்டுள்ளார்.

வார்னர் ஏமாற்றினார்

வார்னர் ஏமாற்றினார்

டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்தார். அதை சுட்டிக் காட்டி அவர் வேண்டுமென்றே அப்படி ஆடி இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை தோல்வி அடைய வைத்தார் என குற்றம் சுமத்தி உள்ளார்.

கண்டுபிடிக்கவே முடியாது

கண்டுபிடிக்கவே முடியாது

இந்தியா வேண்டுமென்றே தோற்றாலும் யாருமே அதை கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி நடந்து கொள்வார்கள் என்றும் கூறி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது? என நேரடியாக கூறாமல் பூடகமாக அந்தப் போட்டியில் இந்தியா தடுமாறியதை சுட்டிக் காட்டினார்.

இம்ரான் கான் சாட்சி

இம்ரான் கான் சாட்சி

இவர் சொல்வதை நம்பலாமா? வேண்டாமா? என நாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, பகீர் கிளப்பும் வகையில் ஒன்றை கூறினார். 1992இல் நியூசிலாந்து அணி தோல்வி அடையாமல் ஆடி வந்தது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போது நியூசிலாந்து அணி வேண்டுமென்றே அப்படி செய்ததாக கூறி இருக்கிறார் பாசித் அலி.

இம்ரான் கான் சாட்சி

இம்ரான் கான் சாட்சி

நியூசிலாந்து அணி தங்கள் நாட்டில் அரையிறுதிப் போட்டியில் ஆடுவதற்காக அப்படி செய்ததாகவும், இதை இம்ரான் கான் கூட ஒப்புக் கொள்வார் என்றும் கூறி கிரிக்கெட் உலகில் வெடியை பற்ற வைத்து வீசியுள்ளார். இவர் வீசிய வெடி இப்போது வெடிக்காது. பாகிஸ்தான் தவிர மற்ற அணிகளிடம் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தோல்வி அடையும் போது வெடிக்கும். பாசித் அலிக்கு.. பலே முன்யோசனை!!

Story first published: Thursday, June 27, 2019, 23:08 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
Cricket World cup 2019 : Basit Ali claims India will lose intentionally to stop Pakistan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+