For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரிடம் வாழ்க்கை முழுக்க மன்னிப்பு கேட்பேன்.. குற்ற உணர்ச்சி குறுகுறுக்குதே.. புழுங்கும் ஸ்டோக்ஸ்!

Recommended Video

WORLD CUP 2019 FINALS : Overthrow | விதி எண் 19.8ஐ மீறி விட்டார்கள்! அதிர வைக்கும் பின்னணி!- வீடியோ

லண்டன் : இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் தன் வாழ்க்கை முழுவதும் மன்னிப்பு கேட்பேன் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தாமல், விதிகளின் படி வெற்றி பெற்றது.

போட்டியில் நடந்த ஒரு திருப்புமுனை சம்பவத்தை குறித்து தான் பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

கடைசி ஓவரில், 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓடினார். அவர் இரண்டாவது ரன்னை ஓடி முடிக்கும் போது, நியூசிலாந்து பீல்டர் எறிந்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.

போட்டியை மாற்றியது

போட்டியை மாற்றியது

அதனால், இங்கிலாந்து அணிக்கு சிங்கிள் ஓடியதற்காக 2 ரன்கள் + ஓவர்த்ரோ பந்து பவுண்டரி சென்றதற்காக 4 ரன்கள் என சிக்ஸ் அடிக்காமல், 6 ரன்கள் கிடைத்தது. இது போட்டியை மாற்றியது. அடுத்த இரண்டு பந்துகளில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் எடுக்க, போட்டி டை ஆனது.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

அடுத்து சூப்பர் ஓவரும் டை ஆனது. அதையடுத்து அதிக பவுண்டரி அடித்த காரணத்தால் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் குற்ற உணர்ச்சி குறுகுறுக்க மன்னிப்பு கேட்டு இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

மன்னிப்பு கேட்பேன்

மன்னிப்பு கேட்பேன்

போட்டி முடிந்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பென் ஸ்டோக்ஸ், நான் என் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்பேன் என கேனிடம் நான் கூறினேன். அதை அப்படி செய்ய வேண்டும் என நான் விரும்பவில்லை. பந்து என் பேட்டில் பட்டு சென்று விட்டது. கேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மொக்கை விதிகள்

மொக்கை விதிகள்

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கூட இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் கொடுத்தது தவறு, விதிப்படி ஐந்து ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள் விமர்சகர்கள். இது மட்டுமின்றி, சூப்பர் ஓவர் டை ஆன நிலையில், மீண்டும் சூப்பர் ஓவர் வைத்திருக்கலாம் அல்லது கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளித்து இருக்கலாம். ஆனால், அதிக பவுண்டரி அடித்த அணி என்பதை கூறி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்டு என்ன பயன்?

மன்னிப்பு கேட்டு என்ன பயன்?

இப்படி நோக்கை விதிகளாலும், தவறுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நியூசிலாந்து அணியிடமும், கேப்டன் கேன் வில்லியம்சனிடமும் ஆயுள் முழுவதும் பெண் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டாலும் எந்த பயனும் இல்லை.

Story first published: Monday, July 15, 2019, 14:33 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
Cricket World cup 2019 : Ben Stokes will be apologising to Kane Williamson for rest of his life.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+