Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் விட்டாலும்.. அவர் விட மாட்டார்.. வேகத்தில் எதிரணிகளை மிரட்டும் இந்திய ஜோடி!!

பிர்மிங்காம் : ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் டென்னிஸ் லில்லி - ஜெப் தாம்சன் ஜோடி சேர்ந்து பந்து வீசுவதில் வல்லவர்கள்.

"லில்லி விக்கெட் எடுக்கவில்லை என்றால், தாம்சன் எடுப்பார்" என்று இவர்களைப் பற்றி கூறுவார்கள். அவர்களைப் போல இல்லை என்றாலும், இந்தியாவின் பும்ரா - ஷமி அதைப் போன்ற ஒரு வேகப் பந்துவீச்சு ஜோடியாக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறது.

Cricket World cup 2019 : Bumrah and Mohammed Shami are a strike force of India

ஷமி உலகக்கோப்பை அணியில் கடைசி நேரத்தில் தான் சேர்க்கப்பட்டார். எனினும், பந்தை ஸ்விங் செய்யவும், பின் வரிசையில் பேட்டிங் செய்யவும் தெரிந்த புவனேஸ்வர் குமார் அணியின் முதல் தேர்வாக இருந்தார். பும்ரா தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் என்ற நிலையில், அணியில் அவருக்கு எப்போதும் இடம் உண்டு.

புவனேஸ்வருக்கு காயம் ஏற்பட்டதால், அணியில் ஆடுவதற்கு ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஷமி, ஆப்கானிஸ்தான் மற்றும் வெ.இண்டீஸ் போட்டிகளில் தலா 4 விக்கெட்களும், இங்கிலாந்து போட்டியில் ஐந்து விக்கெட்களும் எடுத்து அசத்தினார்.

எனினும், இங்கிலாந்து பேட்டிங் ஆடிய போது, ஷமி தன் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தினார். முதல் ஏழு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்த ஷமி அடுத்த மூன்று ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார். ஷமியிடம் அப்போது எந்த திட்டமும் இல்லை என்பது தெரிந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஆறு ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால், ஏழாவது ஓவரில் 17, எட்டாவது ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். விக்கெட்டின் இரு திசைகளிலும் ஷமி சொதப்பினார். இந்திய அணியின் பக்கம் வந்த போட்டி, திசை மாறியது. கேப்டன் கோலி இது குறித்து கடும் அதிருப்தியில் இருந்தார்.

மறுபுறம் பும்ரா, கோலியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக இருக்கிறார். அனைத்து போட்டிகளிலும் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் மட்டும் சில சமயம் பந்துவீச்சு அவர் கையை மீறிச் சென்றது. ஆனால், பெரும்பாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார்.

10 அல்லது அதற்கும் அதிகமாக விக்கெட் எடுத்த 19 பந்துவீச்சாளர்களில் குறைந்த எகனாமி வைத்துள்ள பந்துவீச்சாளர்களில் ட்ரென்ட் பவுல்ட்க்கு (4.55)அடுத்த இடத்தில் (4.60) இருக்கிறார் பும்ரா.

மனதளவில் தான் அணிக்காக ஆடுகிறேன் என்பதை தவிர பும்ரா அதிகம் நினைப்பதில்லை. ஆனால், அவரது பந்துவீச்சு மிகவும் சிக்கலானது. ஆழமானது. அவரது பந்துவீசும் வேகம் எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. குறி பார்த்து வீசப்படும் யார்க்கர்கள் கால் விரல்களை பதம் பார்க்கும். அவர் வீசும் பந்து, அவர் கையை விட்டு நழுவிய உடனேயே பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்.

புவனேஸ்வர், ஷமி இருவரும் அனுபவசாலிகள் என்றாலும், இளையவரான பும்ரா மிகவும் ஆபத்தானவர். அவசர நேரத்தில் கோலியின் ஆபத்பாந்தவர் பும்ரா தான். ஷமி ஒருவேளை சொதப்பினால், பும்ரா நிச்சயம் அங்கே வந்து நிற்பார்.

Story first published: Wednesday, July 3, 2019, 21:00 [IST]
Other articles published on Jul 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+