Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புகழ்ந்து பேசலாம்.. அதுக்குன்னு இப்படியா? கண்ணை மூடிக் கொண்டு தோனிக்கு ஜால்ரா போட்ட பும்ரா!!

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் ஆடிய விதம் விமர்சனத்துக்கு உள்ளானது.

தோனி அரைசதம் அடித்தாலும், இன்னிங்க்ஸ் முடிவில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்தாலும், அவர் திணறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், பும்ரா தோனிக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஓவராகவே பேசி இருக்கிறார். அப்பட்டமாக அவர் ஒரு தலைப் பட்சமாக பேசுகிறார் என்பது தெரிந்தது.

தோனி மீது விமர்சனம்

தோனி மீது விமர்சனம்

வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் தோனி முதல் 40 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். 49வது ஓவர் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 70-ஐ ஒட்டியே இருந்தது. கடைசி ஓவரில் அதிரடி காட்டினார். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுத்து, அரைசதம் கடந்து, ஸ்ட்ரைக் ரேட்டை 90க்கு எடுத்துப் போனார் தோனி.

சிலர் ஆதரவு

சிலர் ஆதரவு

தோனி துவக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சரியாக முடித்தார் என்பதால் கங்குலி, கேப்டன் கோலி உள்ளிட்ட சிலர் தோனிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், தோனி பேட்டிங்கின் போது சுழற் பந்துவீச்சில் திணறியதை சுட்டிக் காட்டி, பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பும்ரா புகழ்ச்சி

பும்ரா புகழ்ச்சி

இந்த நிலையில், சக வீரரும், மூத்த வீரருமான தோனிக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, பிசிசிஐக்கு பேட்டி அளித்த போது தோனியை புகழ்ந்து பேசினார்.

மிகச் சிறந்த ஆட்டம்

மிகச் சிறந்த ஆட்டம்

அவர் கூறுகையில், தோனி அழுத்தத்தை உள்வாங்கிக் கொண்டார். போட்டியை கடைசி வரை இழுத்துச் சென்றார். அவர் ஆடியது மிகச் சிறந்த (top rated) பேட்டிங். அவர் இந்த பிட்ச்சில் சிறப்பான ஸ்கோரான 268 ரன்களுக்கு எங்களை இட்டுச் சென்றார். அடுத்து அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தே அவர் நேரம் எடுத்துக் கொண்டார். அவரது ஆட்டத்தில் இருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

ஜால்ரா போடுகிறாரா?

ஜால்ரா போடுகிறாரா?

தோனி நேற்று பொறுப்பாக ஆடினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர் பேட்டிங்கில் தடுமாறினார் என்பதையும் மறுக்க முடியாது. விராட் கோலி எதிரில் நின்று இருந்த போதும் தோனி பந்துகளை வீணடித்துக் கொண்டு இருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் தான் தோனி மிகச் சிறந்த இன்னிங்க்ஸ் ஆடி இருக்கிறார். இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என ஜால்ரா அடித்துள்ளார் பும்ரா.

Story first published: Friday, June 28, 2019, 19:13 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+