முகம் முழுக்க கேக்கை பூசிக் கொண்டு.. ஸிவாவுடன் ஆட்டம் போட்டு.. பிறந்தநாளை கொண்டாடிய தோனி! - வீடியோ
லீட்ஸ் : இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் இடையே தோனி தன் 38வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று இலங்கை அணியுடனான கடைசி லீக் போட்டியில் மோதி வெற்றி பெற்றது.
அந்தப் போட்டிக்குப் பின் தோனி தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

நண்பர்கள் மட்டுமே
மிகச் சிலர் மட்டுமே இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். தோனி, அவரது மனைவி சாக்ஷி, மகள் ஸிவா ஆகியோருடன் சில நண்பர்கள் மட்டுமே இருந்தனர். இந்திய வீரர்களில் ஹர்திக் பண்டியா மற்றும் கேதார் ஜாதவ் மட்டுமே பங்கேற்றனர்.
அபிஷேகம்
இரண்டு கேக் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கேக் தோனியின் முகத்தில் அபிஷேகம் செய்யவே வாங்கி இருப்பார்கள் போல. ஸிவா கேக் வெட்டினார். அதன் பின் தோனி முகத்தில் கேக்கை பூசி மற்றவர்கள் கொண்டாடினர்.
டான்ஸ் ஆடிய தோனி
அடுத்து மகள் ஸிவாவுடன் தோனி புது வகையான டான்ஸ் ஆடினார். இப்படி கூட டான்ஸ் ஆடலாமா? என்பது போல வேடிக்கையாக இருந்தது அந்த "குதி" டான்ஸ். மகளுக்காக அந்த டான்ஸை ஆடினார் தோனி.
எளிய கொண்டாட்டம்
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மிகச் சில குடும்பத்தினர் மற்றும் நண்பர்களே பங்கேற்றனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது.
பண்டியாவுடன் ஷாட்
ஹர்திக் பண்டியா சமீப காலமாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் அடித்து வருகிறார். தோனியை பார்த்து அதை கற்றுக் கொண்ட அவர், நேற்று பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தோனியுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடிக் காட்டினார்.
கேதார் ஜாதவ்
இந்த பிறந்த நாள் கொண்டாடத்தில் கலந்து கொண்ட மற்றொரு கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ். அவர் ட்விட்டரில் சில புகைப்படங்களை பகிர்ந்து, தோனிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.


Click it and Unblock the Notifications