Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம தோனியா இப்படி? நம்பவே முடியலையே.. தோனியின் விக்கெட் கீப்பிங்கில் பெரிய ஓட்டை!

Recommended Video

இலங்கை பேட்ஸ்மேன்களை அதிரவைத்த தல தோனி

லீட்ஸ் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானவர் தோனி தான்.

இதுவரை அவரது பேட்டிங் மந்தமாக உள்ளது, சுழற் பந்துவீச்சில் தடுமாறுகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், விக்கெட் கீப்பிங்கிலும் சறுக்கி இருக்கிறார் மூத்த வீரர் தோனி.

இந்தியா - இலங்கை மோதிய லீக் போட்டியில் தோனி சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். எனினும், வேறொரு விஷயத்தில் சறுக்கினார்.

அந்த நான்கு ரன்கள்

அந்த நான்கு ரன்கள்

பண்டியா ஓவரில் ஒருமுறை பேட்ஸ்மேன் தவறவிட்ட பந்தை பிடிக்கத் தவறினார் தோனி. அந்த பந்து பவுண்டரி சென்றது. 4 பை ரன்கள் இலங்கை அணிக்கு கிடைத்தது. இது சகஜம் தானே, எந்த விக்கெட் கீப்பரும் சில முறை இப்படி தவற விடுவது இயல்பு தான் என்று நினைத்தால்.. அது தான் தவறு. தோனி நடப்பு உலகக்கோப்பை தொடரில் பை ரன்களை வாரி இறைத்துள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த உலகக்கோப்பை தொடரில் தோனி 24 பை ரன்களை வாரி இறைத்து இருக்கிறார். பை ரன்கள் என்பது பேட்ஸ்மேனின் பேட் அல்லது உடலில் படாமல் தவறவிடும் போது கிடைக்கும் ரன்கள். விக்கெட் கீப்பர் தான் பை ரன்களை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கே தான் சொதப்பி இருக்கிறார் தோனி.

மிக மிக அதிகம்

மிக மிக அதிகம்

இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை போட்டி முடிய மொத்தமாக 71 பை ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தோனி மட்டுமே 24 பை ரன்கள் கொடுத்து இருக்கிறார். இது மொத்தத்தில் சுமார் 33 சதவீதம் ஆகும்.

பலருக்கும் அதிர்ச்சி

பலருக்கும் அதிர்ச்சி

இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. தோனிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. அவர் 9 பை ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

சில சமயம் பந்துவீச்சாளர் எதிர்பாராத கோணத்திலோ, அகலமாகவோ பந்து வீசினால், விக்கெட் கீப்பர் அதை தவறவிட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், தோனி இந்த விஷயத்தில் கில்லாடி. அவர் விக்கெட் கீப்பிங்கில் பை ரன்களில் பவுண்டரியை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் தொடர்ந்து மோசமாக செயல்பட்டுள்ளார்.

விக்கெட் வீழ்ச்சியும் குறைவு

விக்கெட் வீழ்ச்சியும் குறைவு

அது மட்டுமின்றி தோனி செய்த விக்கெட் வீழ்ச்சியும் குறைவு தான். ஆறு விக்கெட் கீப்பர்கள் தோனியை விட அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளனர். தோனி வெறும் 9 விக்கெட் வீழ்ச்சி மட்டுமே செய்துள்ளார். அதில் நான்கு இலங்கை அணிக்கு எதிராக கிடைத்தது. அலெக்ஸ் கேரி 19 விக்கெட் வீழ்ச்சியுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களும் காரணம்

பந்துவீச்சாளர்களும் காரணம்

விக்கெட் வீழ்ச்சி குறைவாக இருப்பதற்கு பந்துவீச்சாளர்களும் ஒரு காரணம். பந்துவீச்சாளர்கள் போடும் திட்டம் காரணமாக விக்கெட் கீப்பர் கேட்ச்கள் அதிகம் கிடைக்காமல் போகலாம். எனவே, இதற்கு தோனியை குறை கூற முடியாது. ஆனால், அதிக பை ரன்கள் கொடுத்தது தோனியின் பட்டியலில் தான் சேரும்.

Story first published: Saturday, July 6, 2019, 23:42 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+