Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடைந்து கண்ணீர் விட்ட கப்தில்.. குரூரமாக கொண்டாடும் சில இந்திய ரசிகர்கள்.. அதிர்ச்சியா இருக்கு!

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்- வீடியோ

லண்டன் : இந்திய ரசிகர்கள் சிலர் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனதால், அந்த அணி உலகக்கோப்பை வெல்ல முடியாமல் போனதை மகிழ்ச்சியுடன் வரவேற்று அதிர்ச்சி அளித்துள்ளார்கள்.

அனைவரும் நியூசிலாந்து அணியை பாராட்டி வரும் நிலையில், சில இந்திய ரசிகர்கள் மட்டும், இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து இருக்கிறார்கள்.

பழிக்குப் பழி வாங்குவது போலவும், கீழ்த்தரமாகவும், குரூரமாகவும் கருத்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நியூசிலாந்து போராடியது

நியூசிலாந்து போராடியது

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. கடைசி ஓவரில் நடந்த ஒரு ஓவர் த்ரோ குளறுபடியில் இங்கிலாந்து அணி தவறுதலாக ஒரு ரன் அதிகம் பெற்றது. அதனால், போட்டி டையில் முடிந்தது.

மார்ட்டின் கப்தில் ரன் அவுட்

மார்ட்டின் கப்தில் ரன் அவுட்

அடுத்து சூப்பர் ஓவரில் இரு அணிகளும் மோதின. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 15 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது மார்ட்டின் கப்தில் பந்தை தட்டி விட்டு, 2 ரன்கள் ஓட நினைத்தார். எனினும், இரண்டாவது ரன் ஓடி முடிக்கும் முன் ரன் அவுட் செய்யப்பட்டார்.

தோனி ரன் அவுட்

தோனி ரன் அவுட்

இந்தியா அரையிறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் தோனியை நம்பி இருந்த போது இதே மார்ட்டின் கப்தில் அற்புத த்ரோ செய்து தோனியை ரன் அவுட் செய்தார். அது பெரிய திருப்புமுனையாக அமைந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ரசிகர்களின் பதிவுகள்

ரசிகர்களின் பதிவுகள்

இந்த நிலையில், தோனி விக்கெட்டை எடுத்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சிதைத்த மார்ட்டின் கப்தில், அதே போல ரன் அவுட் ஆகி நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை வெற்றியை நழுவ விட்டார் என்ற கோணத்தில் இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் சிலர், பழிக்குப் பழி வாங்கியது போன்ற திருப்தியை இணையத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். அந்த பதிவுகளில் சில இங்கே -

ரொம்ப மகிழ்ச்சி

கடைசி ரன்னை எடுக்க முடியாமல் ரன் அவுட் ஆனதால் மிகவும் மனமுடைந்து போன மார்ட்டின் கப்தில், மைதானத்தில் உடைந்து போய், கண்கலங்கி அமர்ந்து விட்டார். அவரை சக வீரர்கள் தேற்றினர். அந்த புகைப்படத்தை பதிவிட்டு, இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தால் பகிரவும் என கூறி இருக்கிறார் இவர்.

இப்ப புரியுதா?

கப்தில் இப்போது இந்திய ரசிகர்கள் எப்படி உணர்ந்தார்களோ, அதே போல உணர்ந்திருப்பார்.

எப்படி இருக்கு?

இப்ப எப்படி இருக்கு? என்றுக் கேட்டு கப்தில்-ஐ வெறுப்பேற்றி இருக்கிறார் மற்றொரு ரசிகர்.

இரண்டு விரல்கள்

எனினும், ஒருவர் கப்திலை திட்டும் ரசிகர்களை அமைதிப்படுத்த இந்த பதிவை பகிர்ந்துள்ளார். "கப்திலை திட்டும் முன்பு இரு முறை சிந்தித்து விட்டு செயல்படுங்கள்" என கப்தில் காலில் இரு விரல்கள் மட்டுமே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆம், கப்தில்-இன் இடது காலில் இரண்டு விரல்கள் மட்டுமே உள்ளன. அதோடு தான் அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார்.

Story first published: Monday, July 15, 2019, 17:50 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+