இங்க கலவரம் நடந்துகிட்டு இருக்கு.. அங்க கூலா இருக்கும் தோனி, தவான்.. என்ன பண்ணாங்க தெரியுமா?
நாட்டிங்ஹாம் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தொடரை துவங்கினாலும், தொடர்ந்து கவலையில் தான் உள்ளது. ஆனால், தவான், தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பண்டியா உள்ளிட்ட வீரர்கள் "ஜாலி"யாக உள்ளனர்.
அதற்கு முக்கிய காரணம் தவானுக்கு ஏற்பட்ட காயம் தான். இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தால் தவான் அடுத்த மூன்று வாரங்களுக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என கூறப்படுகிறது.
இதனால், இந்திய அணியில் தவான் இடத்தை நிரப்பப் போவது யார்? துவக்க வீரராக களமிறங்கப் போவது யார்? என பல கேள்விகளுக்கு ரசிகர்கள் விடை தெரியாமல் விவாதம் செய்து வருகின்றனர்.

எங்கே போனார்கள்?
ஆனால், இந்திய அணி வீரர்களை இது எதுவும் பாதித்தது போலவே தெரியவில்லை. எல்லாம் கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பார்த்துக் கொள்வார்கள் என நினைத்து விட்டார்களோ.. என்னவோ! எந்த குழப்பமும் இன்றி பயிற்சிக்கு இடையே இங்கிலாந்தில் ஜாலியாக சினிமா பார்த்து நேரத்தை செலவிட்டுள்ளார்கள்.

காரணம் இவர்தான்
இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் தீவிரமான சல்மான் கான் ரசிகர். கடந்த ரமலான் பண்டிகை அன்று வெளியான சல்மான் கான் திரைப்படமான பாரத் சக்கை போடு போட்டி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகக்கோப்பை காரணமாக இத்தனை நாட்களாக அந்தப் படத்தை பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

மழையால் தடங்கல்
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி முடிந்த பின், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது இந்தியா. எனினும், பயிற்சிக்கு இடையே தொடர்ந்து மழை பெய்து தடங்கல் ஏற்படுத்தி வந்தது.

திரைப்படம்
பல முறை பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அதனால், ஓய்வு நேரத்தில் திரைப்படம் பார்க்க முடிவு செய்த கேதார் ஜாதவ், மற்ற வீரர்களையும் கிளப்பிக் கொண்டு சென்று விட்டார். அதில் மூத்த வீரர் தோனியும் அடக்கம்.

ராகுலும் உண்டு
அது மட்டுமில்லாமல், காயத்தில் இருக்கும் தவானுக்கு என்ன ஆச்சோ? என ரசிகர்கள் கவலையில் இருக்கும் நிலையில், அவரும் திரைப்படம் பார்க்க வந்துவிட்டார். தவான் ஆடாத நிலையில், அவருக்கு மாற்றாக துவக்க வீரராக களமிறங்க உள்ளதாக கூறப்படும் ராகுலும் சல்மான் படத்தை கண்டு களித்துள்ளார்.

மருத்துவ கண்காணிப்பு
இதில் வேடிக்கை என்னவென்றால், பிசிசிஐ தவான் காயம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், தவான் பிசிசிஐ-இன் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஒருவேளை மருத்துவ குழுவும் தவானை கண்காணிக்க, சல்மான் கான் படத்துக்கு போயிருப்பாங்களோ!!


Click it and Unblock the Notifications