Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு சிஎஸ்கே முக்கியமா? உலகக்கோப்பை முக்கியமா?.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்!

லண்டன் : தோனிக்கு ஐபிஎல்லும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான் முதலில்.. இந்திய அணி, உலகக்கோப்பை எல்லாம் அப்புறம் தான் என்ற விமர்சனம் ஐபிஎல் தொடரின் போது கூறப்பட்டது.

ஆனால், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல்.

தற்போது 2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு முதுகில் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டது.

காயம்

காயம்

அப்போது, ஓரிரு போட்டிகளில் ஓய்வு எடுத்த தோனி, நரம்புப் பிடிப்பு முற்றிலும் குணமாகாத நிலையில், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்தார். அதனால், விமர்சனத்துக்கு உள்ளானார்.

விமர்சனம்

விமர்சனம்

பலரும் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் இந்திய அணிக்கும் மேலே. அதற்காக இந்திய அணியையும், முக்கியமான உலகக்கோப்பை தொடரையும் கூட அவர் புறக்கணிக்கிறார். உலகக்கோப்பை தொடரில் காயத்தோடு தோனி பங்கேற்றால் அது இந்திய அணிக்குத் தான் பின்னடைவு என கூறினர்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

எனினும், தோனி உலகக்கோப்பை தொடருக்கு முழு உடற்தகுதியோடு கிளம்பிச் சென்றார். வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்தார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய லீக் போட்டியில் 34 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

இதுவே பதிலடி தான்

இதுவே பதிலடி தான்

தொடர்ந்து சிறப்பான பார்மில் இருக்கிறார். இதுவே அவரை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தான். ஆனால், இதையும் விட சிறந்த பதிலடி ஒன்று ஹர்பஜன் சிங் கூறிய தகவல் மூலம் கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி தலைமையில் ஆடினார் ஹர்பஜன் சிங்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

அப்போது தான் கண்ட சில விஷயங்களை பற்றி இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியின் வர்ணனையின் போது பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் தோனி வலைப்பயிற்சிகளில் நீண்ட நேரம் செலவிட்டார். அதற்கு காரணம், உலகக்கோப்பை தொடருக்கு முன் எவ்வளவு நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும், எத்தனை முறை பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியாததால், ஐபிஎல் தொடரின் போது முடிந்த வரை அதிக நேரம் வலைப்பயிற்சி செய்தார் என்றார் ஹர்பஜன் சிங்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

ஹர்பஜன் சிங் கூறியதன் மூலம் ஐபிஎல் தொடரின் போது கூட தோனி உலகக்கோப்பைக்கு நிறைய திட்டமிட்டுள்ளார் என்பது தெரிகிறது. இது தோனிக்கு ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே முக்கியமா? அல்லது உலகக்கோப்பை முக்கியமா? என்று விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 12:51 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+