அழுகை வருகிறது, இதயம் வலிக்கிறது.. 100 கோடி இதயங்களில் தோனி! உருகும் ரசிகர்கள் #DhoniInBillionHearts
Recommended Video
மும்பை : 2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், தோனி ரசிகர்கள், அவர் ஓய்வு பெறக் கூடாது என உருகி, மருகி கருத்து கூறி வருகிறார்கள்.
தோனி ரசிகர்கள் ஏன் அவர் ஓய்வு பெறக் கூடாது என பல்வேறு பதிவுகள் மூலம் இணையத்தை நெகிழ வைத்து வருகிறார்கள்.
இந்திய அணிக்கு தோனி தேவை என்றும், தோனி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் தோனி மீதான தங்கள் அன்பை ட்விட்டரில் ##DhoniInBillionHearts என்ற ஹேஷ்டேகில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சில -
அழுகை
இந்தியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது கூட எனக்கு வருத்தமில்லை. ஆனால், தோனி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்தாலே எனக்கு அழுகை வருகிறது.
நல்ல தலைவன்
தோனிக்காக நாடே அழுகிறது. அதனால், அவர் நல்ல தலைவன் என்கிறது இந்த மீம்.
ரன் அவுட் கேன்சல்!!
தோனி அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் செய்யப்பட்டதால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், அந்த தருணத்தை விரும்பாத தோனி ரசிகர் ஒருவர், தோனி கிரீஸுக்குள் வந்த பின் பந்து ஸ்டம்ப்பை தகர்ப்பது போல ஓவியம் வரைந்து இருக்கிறார். அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பயிற்சியாளர் தோனி
தோனி ஓய்வு பெற்றாலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வேண்டும். இந்திய அணிக்கு அவர் தேவை.
டி20யில் தோனி?
தோனியை 2020 டி20 உலகக்கோப்பை வரை அணியில் இருக்குமாறு தோனி ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். சிலர் தோனிக்கு வயதாகி விட்டது அவர் எப்படி டி20யில் ஆடுவார்? என கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறது இந்த மீம்.
நம்பிக்கை
ஒவ்வொரு இந்திய ரசிகரின் நம்பிக்கையை மாற்றிய மனிதன், தோனி!
வெற்றி பெறலாம் என நம்பினோம்
இந்தியா 5 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்த போது 135 கோடி இந்தியர்கள் வெற்றி பெறலாம் என நம்பினார்கள். அதற்கு காரணம், தோனி!
இதயம் வலிக்கிறது
தோல்வியை கண்டு நான் அஞ்சவில்லை. இறப்பை கண்டு நான் அஞ்சவில்லை. ஆனால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒருநாள் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் என் இதயம் வலிக்கிறது. அந்த பெரிய அடியை தாங்க நான் இன்னும் தயாராகவில்லை. அவரை ஓய்வு பெற கட்டாயப்படுத்தாதீர்கள். இந்தியாவுக்கு அவர் தேவை.


Click it and Unblock the Notifications