Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனம் வெறுத்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு.. ஒண்ணுமே தெரியாத மாதிரி டிராமா போடும் விராட் கோலி!!

Recommended Video

WORLD CUP 2019: Rayudu retires : தொடர் புறக்கணிப்பால் கோபம்!.. ஓய்வை அறிவித்தார் ராயுடு!- வீடியோ

பிர்மிங்காம் : அம்பதி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலி அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டார்.

அந்தப் பதிவில் அவர் கூறி இருக்கும் வாழ்த்தை கண்டு ரசிகர்கள் இது முழுக்க டிராமா, நடிப்பு என கோலியை விமர்சித்து வருகின்றனர்.

அம்பதி ராயுடு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என மிக மோசமாக நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட நிலையில், ஓய்வு பெற்றார். அதற்கு காரணமான விராட் கோலி ஒப்புக்கு சப்பாணியாக பாராட்டி வாழ்த்து கூறியுள்ளது முரண்பாடான ஒன்றாக அமைந்தது.

நன்றாக ஆடினார்

நன்றாக ஆடினார்

அம்பதி ராயுடு கடந்த ஆண்டு இந்திய அணியில் வாய்ப்பு பெற்று தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். அவர் சராசரிக்கும் அதிகமான ரன்கள் குவித்து வந்தார். சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

தொடர் புறக்கணிப்பு

தொடர் புறக்கணிப்பு

ஐபிஎல் தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் ராயுடு சரியாக ரன் குவிக்கவில்லை என்று அணியில் இருந்து கோலி -ரவி சாஸ்திரியால் நீக்கப்பட்டார். தொடர்ந்து உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவரை உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் வைத்திருந்தார்கள்.

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இருந்து தவான், விஜய் ஷங்கர் நீக்கப்பட்ட போது, ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால் வாய்ப்பு பெற்றனர். இவர்களில் மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடிய அனுபவம் அற்றவர். வாய்ப்பு பெற வேண்டிய ராயுடுவை தாண்டி, அகர்வாலை அழைத்தது கோலி - ரவி சாஸ்திரி தான்.

மனம் வெறுத்த ராயுடு

மனம் வெறுத்த ராயுடு

இதனால், மனம் வெறுத்த ராயுடு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு பல ரசிகர்களையும் பாதித்தது. பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

விராட் கோலி வாழ்த்து

விராட் கோலி வாழ்த்து

இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி தன் வாழ்த்து செய்தியில், "நீங்கள் ஒரு "டாப்" மனிதர்" என கூறி இருந்தார். இதைக் கண்டு ரசிகர்கள் பொங்கி உள்ளனர். நியாயமாக ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்காமல், புதிய வீரரை தேர்வு செய்த கோலி, ராயுடுவை "டாப்" என கூறியதை கேட்டு சிரிக்காமல் என்ன செய்வது?

இது டிராமா!

இது டிராமா!

ரசிகர்கள் கோலி டிராமா போடுகிறார், வெளியே நடிக்கிறார் என கடுமையாக விமர்சித்து உள்ளனர். உண்மையும் அதுதான். டாப் மனிதரை அணியில் வைத்துக் கொள்ளாமல் அனுபவமே இல்லாத வீரரை தேர்வு செய்தது ஏன் கோலி?

Story first published: Thursday, July 4, 2019, 11:11 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+