For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசி. நல்லா ஆடினாங்களே.. இப்படி பண்ணீட்டீங்களே “டீச்சர்”.. ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்- வீடியோ

லண்டன் : உலகக்கோப்பை தொடரை மிக மோசமான, மொக்கையான விதியை வைத்து முடித்த ஐசிசியின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணி தோல்வி அடையவில்லை.

ஆம், இது தான் சிக்கல். எந்த அணியும் தோல்வி அடையாத நிலையில், அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணியை "விதிப்படி" சாம்பியனாக அறிவித்தது ஐசிசி.

இரண்டு முறை டை!

இரண்டு முறை டை!

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடி முடித்த போது போட்டி டை ஆனது. இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்து இருந்தன. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதிலும், இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து டை செய்தனர்.

பவுண்டரி விதி

பவுண்டரி விதி

இதையடுத்து விதிமுறைப்படி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இதை ரசிகர்கள் மட்டுமல்லாது, முன்னாள் வீரர்களாலும் ஏற்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் நடத்தி விட்டு, இப்படி ஒரு மோசமான முறையில் சாம்பியன் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

நியூசிலாந்து அபாரம்

நியூசிலாந்து அபாரம்

நியூசிலாந்து அணி மோசமாக ஆடி இருந்தால் இந்த விதியை அனைவரும் ஏற்று இருப்பார்கள். மறு பேச்சே இருந்து இருக்காது. ஆனால், நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியது. பந்துவீச்சில் இங்கிலாந்து அணியை மிரட்டியது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இங்கிலாந்து அணி சேஸிங்கில் தடுமாறிக் கொண்டே இருந்தது. அதனால், தான் ரசிகர்கள் ஐசிசி மீது கோபத்தில் இருக்கிறார்கள். தங்கள் கோபத்தை ட்விட்டரில் சிலர் கொட்டித் தீர்த்துள்ளார்கள். அவற்றில் சில -

கிரிக்கெட் செத்தது

லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படுகிறது. அங்கே கிரிக்கெட் இறந்து போனது என்று கூறி இருக்கிறார் ஒரு ரசிகர். அதன் கீழே, "ஐசிசி சாகடித்து விட்டது" என ஒருவர் கூறி இருக்கிறார்.

இதயத்தால் வெற்றி

இங்கிலாந்து விதிப்படி வென்றது. நியூசிலாந்து இதயத்தால் வென்றது என ஆதங்கத்தை கூறியுள்ளார்.

முட்டாள் விதிகள்

48 போட்டிகள், 46 நாட்கள். ஆனால், வெற்றியாளர் பவுண்டரி வைத்து தேர்வு செய்வீர்களா? நியாயமே இல்லை. முட்டாள்தனமான விதிகள்!

எத்தனை மார்க்?

இங்கிலாந்து தான் முதல் ரேங்க் என்கிறார் டீச்சர். நியூசிலாந்து நானும் அதே மார்க் தான் எடுத்தேன் என்கிறது. அதற்கு டீச்சர் சொன்ன அந்த அற்புத பதில் - இங்கிலாந்து 4 மார்க் கேள்விக்கு பதில் எழுதினான். நீ இரண்டு 2 மார்க் கேள்விகளுக்கு பதில் எழுதி இருக்கிறாய். அதனால், அவன் தான் வெற்றி பெற்றவன்! அந்த டீச்சர் யாருன்னு தெரியுதா?

Story first published: Monday, July 15, 2019, 17:14 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
Cricket World cup 2019 : Fans are unhappy with ICC after weird rules decides winner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X