For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களுக்கு ஆப்பு வைச்சீங்கல்ல.. இப்ப என்ன ஆச்சுன்னு பாருங்க.. இந்தியாவின் தோல்வியை கொண்டாடும் பாக்.!

Recommended Video

Pakistani cricketers happy : இந்தியாவின் தோல்வியை கொண்டாடும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்- வீடியோ

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதுவரை மறைமுகமாக இருந்து வந்த இது போன்ற விஷயங்கள் தற்போது வெளிப்படையாக நடந்து வருகிறது. இதற்கு சில காரணங்களும் உள்ளது.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் முதல் சில போட்டிகளில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டது. அப்போது இந்தியா, இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் வாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை இருந்தது.

பாகிஸ்தான் கொண்டாட்டம் ஏன்?

பாகிஸ்தான் கொண்டாட்டம் ஏன்?

ஆனால், இந்தியா அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது, இந்திய அணி வேண்டுமேன்றே தான் தோல்வி அடைந்தது என்ற எண்ணத்தில் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் தோல்வியை கொண்டாடி வருகிறார்கள்.

வக்கார் யூனிஸ் கருத்து

வக்கார் யூனிஸ் கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் கொடுமையான விளையாட்டு.. மிகச் சிறப்பாக சமப்படுத்தும்.. நீங்கள் குறைத்து மதிப்பிட்டால் உங்களை திருப்பி அடிக்கும்.. இன்று நான் சிறந்த பாடம் கற்றுக் கொண்டேன். "விளையாட்டை எப்போதும் தவறாக பயன்படுத்தாதீர்கள்" என்று இந்திய அணியை குத்திக் காட்டி பேசி இருக்கிறார். இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்கவில்லை என்றாலும், இவர் அதை நினைத்து இப்படி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

வேறு சில பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இதே போன்ற கருத்தை உள்ளூர் தொலைக்காட்சிகளில் கூறி உள்ளனர். குறிப்பாக பாசித் அலி, சிக்கந்தர் பக்த் உள்ளிட்ட சிலர் இங்கிலாந்து போட்டிக்கு முன்பே இந்தியா வேண்டுமென்றே தோல்வி அடைந்து பாகிஸ்தான் வாய்ப்பை இந்தியா சிதைக்கும் என கூறி வந்தனர்.

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

அவர்கள் இருவரும், பாகிஸ்தான் வாய்ப்பை தட்டிப் பறித்த இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு கிடைத்த பாடம். பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கி விட்டது என கூறி இருக்கிறார்கள்.

Story first published: Friday, July 12, 2019, 15:19 [IST]
Other articles published on Jul 12, 2019
English summary
Cricket World cup 2019 : Former Pakistani Cricketers happy after India lost in semi final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+