அவங்க 2 பேரையும் பிரிச்சுடாதீங்க.. இவ்ளோ வெற்றிக்கும் அவங்க தான் காரணம்.. ஹர்பஜன் ஆதரவு!
Recommended Video
லண்டன் : சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா சுழல் கூட்டணி முன்பு கோலோச்சி வந்தது. அவர்கள் கூட்டணி ஒரு கட்டத்தில் விக்கெட் வீழ்த்துவதில் சுணக்கம் காட்டவே, குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்றனர்.

சாஹல், குல்தீப் ஆட்டம்
இவர்கள் இருவரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதால் எந்த ஆடுகளத்திலும் பந்தை சுழல வைப்பார்கள். அதனாலேயே, இங்கிலாந்து ஆடுகளங்களில் இருவரும் ஒவ்வொரு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள்.

விக்கெட்கள்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அதே போல, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

வெற்றிகளுக்கு காரணம்
ஹர்பஜன் சிங் கூறுகையில், இவர்கள் சிறந்த கூட்டணி. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய அணி குவித்து வரும் வெற்றிகளுக்கு குல்தீப் யாதவ் - சாஹல் தான் முக்கிய காரணம் என்று கூறி பாராட்டினார்.

பிரிக்கக் கூடாது
மேலும், இவர்களை பிரிக்கக்கூடாது. மற்ற எந்த அணிகளிலும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் யாருக்கும் மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் வழக்கம் இல்லை. ஆனால், இந்திய அணிக்கு, இங்கிலாந்து சூழ்நிலைகளில் கூட இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் கூட்டணி வேலை செய்கிறது என்றார் ஹர்பஜன். குல்தீப் யாதவ் -சாஹல் இணைந்து பந்து வீசும் போது அது பெரிய அளவில் பலன் அளிக்கும் என்ற கருத்தை பலர் முன்பே கூறி உள்ளனர். அதை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு
குல்தீப் யாதவ் - சாஹல் சிறப்பாகவே பந்து வீசினாலும், மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா சிறந்த பந்துவீச்சாளர் என்பதோடு ஆல் -ரவுண்டராகவும் செயல்படுவார். அவர் பீல்டிங்கும் சிறப்பாக இருக்கும். அவருக்கு ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத நிலையில், இனியும் வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications