For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் இந்தியாவை சீண்ட அனுமதி கேட்ட பாக். வீரர்கள்.. இம்ரான் கான் என்ன சொன்னாரு தெரியுமா?

இஸ்லாமாபாத் : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான் நினைவுக்கு வரும்.

அந்தளவு போட்டிக்கு முன்பு இருந்தே அனல் பறக்கும். 2019 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களின் குறிப்பிட்ட செயல்பாடுகளை கிண்டல் செய்து, சீண்ட வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் சிலர், தங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இம்ரான் கான் தலையீடு

இம்ரான் கான் தலையீடு

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான் கான் தலையிட்டு இருக்கிறார். அவர் ஏன் இதில் தலையிட்டார்? பாகிஸ்தான் வீரர்கள் எதற்காக இந்திய வீரர்களை கிண்டல் செய்ய வேண்டும் என விரும்பினார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

உலகக்கோப்பை போட்டி

உலகக்கோப்பை போட்டி

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடக்கக்கூடாது என பலரும் இணையத்தில் கூறி வந்தனர்.

இராணுவ தொப்பி

இராணுவ தொப்பி

இந்த விவகாரம் ஒருவழியாக முடிந்தது. அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். அது தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவத்தினருக்கு சமர்ப்பணம் என கூறப்பட்டது.

பனிப்போர்

பனிப்போர்

இந்திய கிரிக்கெட் அணி விளையாட்டில், அரசியலை புகுத்துகிறது. உலகக்கோப்பை தொடரில் ஆட மாட்டோம் என்பதும், இராணுவ தொப்பி அணிந்து ஆடுவதும் தவறு என்று கூறியது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து மறைமுகமான பனிப்போர் நடந்து வருகிறது.

கேலிக்கு அனுமதி?

கேலிக்கு அனுமதி?

இந்த நிலையில் தான், இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், விக்கெட்களை எடுத்த உடன், இந்திய அணி வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்தது உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி கேலி செய்ய அனுமதி கேட்டனர் சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.

பழிக்குப்பழி வேண்டாம்

பழிக்குப்பழி வேண்டாம்

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மட்டுமல்லாது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் தலையிட்டு, கேலி, பழிக்குப்பழி போன்ற செயல்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் மட்டும் போதும்

கிரிக்கெட் மட்டும் போதும்

பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் கிரிக்கெட் மட்டும் தான் ஆட வேண்டும். வம்பு தும்புக்கெல்லாம் போகக் கூடாது என இம்ரான் கான் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் பெரிய உரசல்கள், சீண்டல்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, June 8, 2019, 16:28 [IST]
Other articles published on Jun 8, 2019
English summary
Cricket World cup 2019 : Imran Khan denied permission to Pakistan players for different celebrtion says reports.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+