ரோஹித் சர்மா சாதனையை விடுங்க.. இந்தியா செய்த ரெக்கார்டு என்னென்னு தெரியுமா? #INDvsSL
Recommended Video
லீட்ஸ் : இலங்கை அணியை உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது இந்திய அணி.
உலகக்கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற பட்டியலில் இந்திய அணி குறிப்பிடத்தக்க சாதனையை செய்துள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்றது.

இந்தியா வெற்றி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 264 ரன்கள் குவித்தது. ஏஞ்சலோ மாத்யூஸ் சதம் அடித்து ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து ஆடிய இந்திய அணி 44வது ஓவரில் வெற்றிக் கோட்டை எட்டியது. ரோஹித் சர்மா 103, ராகுல் 111 ரன்கள் குவித்தனர்.

ரோஹித் சர்மா சாதனை
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார். அதே போல, இந்திய அணியும் இந்த வெற்றி மூலம் முக்கிய சாதனையை செய்துள்ளது.

உலகக்கோப்பை சாதனை
இந்த வெற்றி உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் 53வது வெற்றி ஆகும். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகள் குவித்த அணிகளில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது இந்தியா. நியூசிலாந்து அணியும் 53 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆஸி. முதல் இடம்
உலகக்கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் குவித்த அணிகளில் முதல் இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. அந்த அணி 69 வெற்றிகளை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா நான்கு முறை உலகக்கோப்பை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிப் போட்டி
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இதில் இரண்டு அணிகளும் பெறும் வெற்றி, தோல்வி அடிப்படையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் நிர்ணயிக்கப்படும். இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி நடந்தால் இரண்டில் ஒரு அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும்.

உலகக்கோப்பை வெல்லாத அணி
இதில் ஆச்சரிய தகவல் என்னவென்றால், நியூசிலாந்து அதிக உலகக்கோப்பை வெற்றிகள் குவித்தும், ஒருமுறை கூட உலகக்கோப்பை வென்றதில்லை. அதே சமயம், அதே அளவு வெற்றிகள் பெற்றுள்ள இந்தியா இரண்டு முறை உலகக்கோப்பை வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications