Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க தான் நம்பர் 1.. உலகக்கோப்பையே முடியலை.. அதுக்குள்ள இங்கிலாந்தை தெறிக்க ஓடவிட்ட இந்தியா!

Recommended Video

ICC Ranking: India No.1: உலக கோப்பைக்கு முன்பே முதலிடம் பிடித்த இந்தியா - வீடியோ

லண்டன் : உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் முக்கிய மைல்கல் ஒன்றை எட்டி உள்ளது.

உலகக்கோப்பை தொடர் துவங்கும் போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை இந்தியாவிடம் இழந்துள்ளது. எப்படி நடந்தது இந்த மாற்றம்?

உலகக்கோப்பைக்கு முன்

உலகக்கோப்பைக்கு முன்

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து முதல் இடத்தில் இருந்தது. இந்திய அணி 122 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி 124 புள்ளிகளுடனும் இருந்தன.

இங்கிலாந்து சரிவு

இங்கிலாந்து சரிவு

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி நடை போடும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாரா விதமாக பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வி அடைந்தது இங்கிலாந்து. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால் ஒருநாள் போட்டி தரவரிசை மதிப்பீடு 122 புள்ளிகளாக சரிந்தது.

இந்தியா முன்னேற்றம்

இந்தியா முன்னேற்றம்

அதே சமயம், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறது. இது வரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. அதனால், இந்திய அணி 123 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

இது குறித்து ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. உலகக்கோப்பை தொடர் முடியும் வரை ஐசிசி தரவரிசை மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடாது என கூறப்படுகிறது.

கோப்பை வெல்லுமா?

கோப்பை வெல்லுமா?

தற்போது இந்திய அணி முதல் இடத்தை பெற்றதாக வெளியான தகவல் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மூலம் தான் தெரிய வந்துள்ளது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வென்றால், ஒருநாள் போட்டிகளில் சாம்பியன் என்பதோடு, நம்பர் 1 அணியாகவும் வலம் வரும்.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

தற்போது மாறுதலுக்கு உள்ளாகி இருக்கும் தரவரிசையில் நியூசிலாந்து தன் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு பின்தங்கி உள்ளது. ஆஸ்திரேலியா ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Story first published: Thursday, June 27, 2019, 16:25 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+