Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வே இல்லாமல் சிக்கிக் கொண்ட இந்தியா.. நியூசி. அணிக்கு சாதகமாகும் அரையிறுதி!

Recommended Video

WORLD CUP 2019 | இந்தியாவுக்கு அரையிறுதிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளது- வீடியோ

மான்செஸ்டர் : இந்திய அணி அரையிறுதிக்கு தயாராக வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் கிடைத்துள்ளது. இது அரையிறுதியில் இந்திய அணியின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது இந்தியா.

ஜூலை 9 அன்று, மான்செஸ்டர் நகரில் முதல் அரையிறுதி நடைபெற உள்ளது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் ஜூலை 6 அன்று விளையாடியது. இலங்கை அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜூலை 9 (நாளை) நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

இந்தியாவுக்கு மட்டும்

இந்தியாவுக்கு மட்டும்

முக்கியமான இந்தப் போட்டிக்கு தயாராக இந்திய அணிக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. மற்ற அணிகளுக்கு தயாராக அதிக நாட்கள் உள்ளது. இந்திய அணிக்கு மட்டும் தான் குறைவான நாட்கள் கிடைத்துள்ளது.

ஆறு நாட்கள்

ஆறு நாட்கள்

நியூசிலாந்து அணி தன் கடைசி லீக் போட்டியில் ஜூலை 3 அன்று பங்கேற்றது. அதனால், அந்த அணிக்கு ஐந்து நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. அந்த அணி தேவையான ஓய்வு எடுத்துக் கொண்டு அரையிறுதிக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

இது இந்திய அணிக்கு குமான பாதிப்பாக அமையும். குறிப்பாக, வேகப் பந்துவீச்சாளர்களுக்கு போதிய ஓய்வு தேவை. பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்றனர். ஒருவேளை அரையிறுதிக்கு ஷமியை இந்திய அணி களமிறக்கலாம் என்றாலும், பும்ராவுக்கு ஓய்வு இல்லாமல் போட்டிகளில் ஆடும் நிலை ஏற்படும்.

ஆஸி. - இங்கிலாந்து நிலை

ஆஸி. - இங்கிலாந்து நிலை

மற்றொரு அரையிறுதியில் மோதும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கும் கூட அதிக நாட்கள் ஒய்வு மற்றும் பயிற்சி செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. இரண்டாம் அரையிறுதி ஜூலை 11 அன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஏழு நாட்களும், ஆஸ்திரேலியாவுக்கு நான்கு நாட்களும் கால அவகாசம் கிடைத்துள்ளது.

இறுதிப் போட்டி சாதகம்

இறுதிப் போட்டி சாதகம்

அதே சமயம், முதல் அரையிறுதியில் வெல்லும் அணிக்கு, இறுதிப் போட்டிக்கும் தயாராக நான்கு நாட்கள் கால அவகாசம் கிடைக்கும். இரண்டாம் அரையிறுதியில் வெல்லும் அணிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு ஓய்வு எடுத்து பின்னர் தயாராகலாம். அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

Story first published: Monday, July 8, 2019, 10:07 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+