Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் மீண்டும் அதே தவறு.. செமி பைனலில் மாற்றம் செய்தே ஆக வேண்டும்.. இந்திய அணிக்கு வார்னிங்!

Recommended Video

World Cup 2019 : மீண்டும் அதே தவறை செய்வாரா கோலி.. இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட வார்னிங்!- வீடியோ

லீட்ஸ் : கேப்டன் விராட் கோலி இந்திய அணித் தேர்வில் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட தவறை சுட்டிக் காட்டி எச்சரித்து வருகிறார்கள் விமர்சகர்கள்.

இந்திய அணி கடந்த சில போட்டிகளாக பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. துவக்கத்தில் அபாரமாக இருக்கும் பந்துவீச்சு, பின்னர் சறுக்குகிறது.

இதற்கு அணித் தேர்வில் கேப்டன் விராட் கோலி செய்யும் தவறு ஒன்று தான் காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

ஐந்து பந்துவீச்சாளர்கள்

ஐந்து பந்துவீச்சாளர்கள்

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகளில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளது. கடைசி இரண்டு போட்டியில் அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றனர். 50 ஓவர்களையும் ஐந்து பந்துவீச்சாளர்களே மாற்றி, மாற்றி வீசினர். இது தவறான அணுகுமுறை என்கிறார்கள் சில விமர்சகர்கள்.

என்ன சிக்கல்?

என்ன சிக்கல்?

இதில் என்ன சிக்கல் என்றால், யாரேனும் ஒரு பந்துவீச்சாளர் குறிப்பிட்ட போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினாலும், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லாததால், அவர்கள் கையிலேயே பந்தை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் பந்துவீச்சாளர்

கூடுதல் பந்துவீச்சாளர்

பகுதி நேர பந்துவீச்சாளர்கள் கடந்த இரு போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஜாதவ், விஜய் ஷங்கர் ஆகிய இருவரும் பகுதி நேரமாக பந்து வீசுவார்கள் என்றாலும் அவர்கள் இடம்பெறவில்லை. விஜய் ஷங்கர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஜாதவ்வின் பேட்டிங் மந்தமாக உள்ளதால், போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பயன்படுத்த மறுக்கும் கோலி

பயன்படுத்த மறுக்கும் கோலி

அவர்கள் இருவரும் பங்கேற்ற போட்டிகளில் கூட கோலி அவர்களை நம்பி ஓவர் கொடுக்கவில்லை. புவனேஸ்வர் காயமடைந்த போது விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார். கேதார் ஜாதவ் ஒன்றிரண்டு போட்டிகளில், மிகச் சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு பெற்றார்.

அரையிறுதியில் கவனம்

அரையிறுதியில் கவனம்

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கும் இந்திய அணி, கூடுதல் பந்துவீச்சாளரோடு களமிறங்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் ரன்களை வாரி இறைத்தாலும், மாற்று பந்துவீச்சாளர் உடனடியாக தயார் நிலையில் இருக்க வேண்டும். அது தான் சரியான திட்டமாக இருக்கும்.

Story first published: Monday, July 8, 2019, 13:04 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+